கர்த்தருக்குக் காத்திருக்கிறேன்; என் ஆத்துமா காத்திருக்கிறது; அவருடைய வார்த்தையை நம்பியிருக்கிறேன்.
சங்கீதம் 130:5
தேவன் நம்மில் தம்முடைய நோக்கங்களை நிறைவேற்றுவதற்காகக் காத்திருப்பது கிறிஸ்தவ வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனை என்று கூறப்படுகிறது; காத்திருப்பதை தவிர்க்கும் தவறை செய்யும் ஒரு மனோபாவம் நமக்குள் இருக்கிறது. ஆனால், காத்திருப்பது கடினமாகத் தோன்றினாலும், தேவன் தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவைப் போல நம்மை மாற்றும் வழிமுறைகளில் இதுவும் ஒன்றாகும். சங்கீதம் 130 ல் சங்கீதக்காரன் கர்த்தருடைய வார்த்தையில் நம்பிக்கை வைத்து அவருடைய விடுதலைக்காக பொறுமையுடன் காத்திருந்தார். அவருடைய முன்மாதிரியைப் பின்பற்றுவோம். பரிசுத்த ஆவியின் வல்லமையின் மூலம் தேவனுடைய வார்த்தையிலிருந்து பலத்தைப் பெறுவதன் மூலம் விசுவாசிகள் பொறுமையாக நம்பிக்கையுடன் காத்திருக்க உதவுவதே இந்த வலைப்பதிவின் குறிக்கோள்.
தேவனுக்கே மகிமையுண்டாவதாக!