அற்புதமான கிருபை – அதன் தொனி எவ்வளவு இனிமையானது

Posted byTamil Editor June 27, 2023 Comments:0

(English Version : Amazing Grace – How Sweet the Sound)

ஜான் நியூட்டனால் எழுதப்பட்ட, “அற்புதமான  கிருபை” [Amazing Grace] என்ற பாடலானது கிறிஸ்தவ விசுவாசத்தை வெளிப்படுத்தும் புகழ்பெற்ற பாடல்களில் ஒன்று. ஒரு காலத்தில் மிகவும் பாவமான வாழ்க்கை வாழ்ந்த ஜான் நியூட்டன்,  தேவனுடைய கிருபையை மிகவும் அற்புதமாகக் கண்டார், அவருடைய அந்த பார்வையானது கிறிஸ்தவர்களுக்கும், கிறிஸ்தவர்கள் அல்லாத பலருக்கும் மிகவும் பரிச்சயமான இந்த அற்புதமான பாடலை எழுத வழிவகுத்தது.

இருப்பினும், ஜான் நியூட்டன் இந்த பாடலை எழுதுவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, இந்த பாடலின் உண்மைகள் தனது வாழ்க்கையின் கடைசி நேரத்தில் கிருபையைக் கண்ட ஒரு மனிதனிடம் நன்றாக எதிரொலித்திருக்கிறது. கர்த்தராகிய இயேசு சிலுவையில் தொங்கியப்போது கூறின ஏழு வார்த்தைகளில், மனந்திரும்பிய கள்ளனுக்கு, “இன்றைக்கு நீ என்னுடேனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்கிறேன் ” [லூக்கா 23:43]  என்று ஆறுதல் கூறினார்.  இந்த வார்த்தைகள்  கடைசி நேரத்தில் ஒரு மனிதன் எவ்வாறு கிருபையைக் கண்டான் என்பதை விவரிக்கிறது. இயேசுவின் வாயிலிருந்து வந்த இந்த வார்த்தைகள் விரக்தியடைந்த பல உள்ளங்களுக்கு நம்பிக்கையை அளித்துள்ளது.

லூக்கா 23:39-43 இல் பதிவு செய்யப்பட்டுள்ளபடி, மனந்திரும்பிய எந்தப் பாவியும் கடவுளின் அற்புதமான இரட்சிப்பின் கிருபையைப் பெறுவதற்கு ஒருபோதும் காலம் கடந்துவிடவில்லை என்பதை இந்த முழு சம்பவமும் நமக்குக் கற்பிக்கிறது. இந்த சம்பவத்தில் வெளிப்படுத்தப்பட்ட மனந்திரும்புதல், விசுவாசம் மற்றும் இரட்சிப்பின் கிருபையுடனான உறவு பற்றிய சில உண்மைகளைக் கற்றுக்கொள்வோம், பின்னர் 2 பயன்பாடுகளைப் பார்ப்போம்.

I. தவறான மனந்திரும்புதலின் சான்றுகள் [39].


மனந்திரும்பதலுக்கேதுவான துக்கமடையாத ஒரு கள்ளனின்
செயல்களை ஆராய்ந்தால், தவறான மனந்திரும்புதலை வெளிப்படுத்தும் 2 பண்புகளை நாம் காண முடியும்.

1. தெய்வ பயம் இல்லை. “அன்றியும் சிலுவையில் அறையப்பட்டிருந்த கள்ளர்களில் ஒருவன்: “நீ கிறிஸ்துவானால் உன்னையும் எங்களையும் இரட்சித்துக்கொள்”” என்று அவரை இகழ்ந்தான். [லூக்கா23:39]. இந்த நிலையிலும் அவன் தேவனுக்கு அஞ்சவில்லை. அவனைப் போலவே பலர். சூழ்நிலைகள் மூலம் தேவன் அவர்களை எவ்வளவு தாழ்த்தினாலும், அவர்கள் ஒரு நீதியுள்ள தேவனுக்கு பயப்படுவதில்லை, அதாவது, தங்கள் சொந்த பாவங்களிலிருந்து திரும்பும் அளவுக்கு அவருக்குப் பயப்படுவதில்லை.

2. பூமிக்குரிய ஆசீர்வாதங்களில் மட்டுமே கவனம் செலுத்துவது. மனந்திரும்பாத கள்ளன் லூக்கா 23:39ல் இவ்வாறு தனது வார்த்தைகளை தொடர்கிறான், “உன்னையும் எங்களையும் இரட்சித்துக்கொள்!” அவன் தனது பாவங்களிலிருந்து விடுவிக்கப்படுவதைப் பற்றி கவலைப்படாமல், அவனுடைய தற்போதைய துன்பங்களிலிருந்து விடுபட வேண்டும் என்பதைப் பற்றியே கவனம் இருந்தது. பலர் இந்த மனிதனைப் போலவே இருக்கிறார்கள். அவர்கள்: பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்; உறவுகள் சரி செய்யப்பட வேண்டும்; மற்றவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்; ஆரோக்கியம், செல்வம் மற்றும் செழிப்பு கிடைக்கப்பட வேண்டும் என்பது போன்ற சில பூமிக்குரிய நன்மைகளுக்காக மட்டுமே கிறிஸ்துவிடம் வருகிறார்கள். இருப்பினும், இவை அனைத்தும் கிறிஸ்துவிடம் வருவதற்கான சரியான காரணங்கள் அல்ல.

II. உண்மையான மனந்திரும்புதலின் சான்றுகள் [40-42].


மாறாக
, மனந்திரும்பிய கள்ளனின் செயல்கள் உண்மையான மனந்திரும்புதலுக்கான சான்றுகளை வழங்கி, 3 பண்புகளை வெளிப்படுத்துகின்றன.

1. உண்மையான தெய்வ பயம் [40]. “ஆனால் மற்றவன் அவனை நோக்கி: “நீ இந்த ஆக்கினைக்குட்பட்டவனாயிருந்தும் தேவனுக்குப் பயப்படுகிறதில்லையா?” என்று அவனைக் கடிந்துகொண்டான். அவன் மேலும் இவ்வாறு கூறுகிறான், “நீ இந்த ஆக்கினைக்குட்பட்டவனாயிருந்தும்…” மேலும் [லூக்கா 23:40]. மத்தேயு 27:44 மற்றும் மாற்கு 15:32 ஆகிய வசனங்களின்படி, இரண்டு குற்றவாளிகளும் ஆரம்பத்தில் கிறிஸ்துவை அவமதித்தனர் என்பது உண்மை. இருப்பினும், இயேசுவின் வார்த்தைகளையும் செயல்களையும் கவனித்த ஒரு கள்ளனின் இருதயம் மென்மையாக மாறத் தொடங்கியது. பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே [லூக்கா 23:34] என்று தம் எதிரிகளுக்காகக் கூட இயேசு செய்த ஜெபம் அவனுடைய இருதயத்தில் கிரியை செய்யத் தொடங்கியது. இவை அனைத்தும் கடவுள் மீது ஆரோக்கியமான பயத்தை ஏற்படுத்தியது [நீதிமொழிகள் 1:7]. மேலும் இது அவன் தன் பாவங்களை விட்டு மனந் திரும்பச் செய்தது.

2. பாவத்தை ஒப்புக்கொள்வது [41]. “நாமோ நியாயப்படி தண்டிக்கப்படுகிறோம்; நாம் நடப்பித்தவைகளுக்குத் தக்க பலனை அடைகிறோம்; இவரோ தகாததொன்றையும் நடப்பிக்கவில்லையே” [லூக் 23:41]. மனந்திரும்பிய கள்ளன் தன் பெற்றோரையோ, சமுதாயத்தையோ, சூழ்நிலையையோ தன் பாவங்களுக்குக் குற்றம் சுமத்தவில்லை. அவன் தனது பாவங்களுக்கு முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டான், “நாமோ நியாயப்படி தண்டிக்கப்படுகிறோம்” என்ற வார்த்தைகளால் இது நிரூபிக்கப்பட்டுள்ளது.

3. விடுதலைக்காக கிறிஸ்துவை மட்டும் நம்புதல் [42]. அப்பொழுது அவன், “ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்றான்”” [லூக்கா 23:42]. மனந்திரும்புதல் மட்டும் யாரையும் இரட்சிக்காது. உண்மையாக மனந்திரும்புபவர்கள் தங்கள் பாவங்களிலிருந்து திரும்புவது மட்டுமல்லாமல், தங்கள் சொந்த முயற்சிகள் இரட்சிப்பைக் கொண்டுவராது என்பதையும் அறிவார்கள். பாவ மன்னிப்புக்காக அவர்கள் இயேசுவை மட்டுமே நம்புவார்கள் [அப்போஸ்தலர் 20:21]. அதைத்தான் இந்த மனம் வருந்திய கள்ளன் செய்தான்.

கர்த்தரிடம் அவன் கேட்டுக் கொண்டதில் இருந்து வெளிப்படும் சில உண்மைகளைக் கவனியுங்கள்.

a. உயிர்த்தெழுதலில் விசுவாசம்.இயேசு சிலுவையில் இருப்பதைப் பார்த்த போதிலும், அவன் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்து ஒரு நாள் ராஜாவாக வந்து தமது ராஜ்யத்தை அமைப்பார் என்று முழுமையாக விசுவாசித்தான். “ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும்” [லூக்கா 23:42] என்ற அவனுடைய வார்த்தைகள் இந்த உண்மையைத் தெளிவாகக் குறிப்பிடுகின்றன. இது ஒரு உண்மையான விசுவாசத்தின் படம்!

b. எதிர்கால தீர்ப்பில் விசுவாசம். எதிர்காலத்தில், தன் இயேசுவை பாவங்களை விசாரிக்கும் நியாயாதிபதியாக எதிர்கொள்ள வேண்டும் என்பதை அவன் அறிந்திருந்தான் [அப்போஸ்தலர் 17:30-31]. அதனால்தான், வரும்போது அடியேனை நினைத்தருளும்” என்றுகூறினான்.

c. நற்கிரியைகளில் விசுவாசம் வைக்கவில்லை. “என்னுடைய நற்கிரியைகளை நினைத்தருளும்” என்று சொல்லாமல், “என்னை நினைத்தருளும்” என்று  கூறுகிறான். இரட்சிப்புக்காக அவன் தனது சொந்த நற்செயல்களில் சிறிதும் சார்ந்துக்கொள்ளாமல், இரட்சிப்பிற்காக இயேசுவை மட்டுமே விசுவாசித்தான்.

d. பூமிக்குரிய விடுதலையில் கவனம் செலுத்தவில்லை. அவன் சிலுவையில் இருந்து தன்னை விடுவிக்கும்படி இயேசுவிடம் கோரவில்லை [மனந்திரும்பாத மற்ற குற்றவாளியைப் போல], ஆனால் எதிர் வரவிருக்கும் வாழ்க்கைக்கு கிருபை காட்ட மட்டுமே கோரினான்.

III. கிறிஸ்துவில் உண்மையான மனந்திரும்புதலும் விசுவாசத்தின் முடிவுகளும் [43].

உண்மையான மனந்திரும்புதலும், கிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்தின் தாக்கமும் தேவனின் அற்புதமான கிருபையைப் பெற வழிவகுத்தது. லூக்கா 23:43 ஆம் வசனம் இவ்வாறு கூறுகிறது, “இயேசு அவனை நோக்கி: “இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.”” மனந்திரும்பிய கள்ளன் எதிர்காலத்தில் எங்கோ தொலைவில் கிருபையை தேடும் போது, அவன் உடனடியாக இரக்கம் பெற்றான். அவன் எந்த நல்ல செயல்களையும் செய்ய வேண்டியதில்லை அல்லது மரணத்திற்குப் பிறகு மேலும் தண்டனையை அனுபவிக்க வேண்டியதில்லை. மாறாக, அவனுக்கு உடனடி மன்னிப்பு வழங்கப்பட்டது, இன்று” [அதாவது, இந்த நாளே] என்ற வார்த்தை இதை தெளிவாகக் குறிப்பிடுகிறது. தேவன் பொய் சொல்லமாட்டார்” [தீத்து 1:2] என்பதால் இது இயேசுவின் பொய்யான வாக்குறுதி அல்ல. ஆம், கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற யாவரும் இரட்சிக்கப்படுவார்கள்” [ரோமர் 10:13], அதுவும் உடனடியாக!

2  நடைமுறை பாடங்கள்.

1. தேவனுடைய மன்னிக்கும் கிருபையைப் பெற இன்னும் காலம் சென்றுவிடவில்லை.

 

மனந்திரும்பிய கள்ளன் இந்த உண்மையின் உன்னதமான உதாரணம். நீங்கள் ஒருபோதும் மனந்திரும்பி கிறிஸ்துவை விசுவாசிக்கவில்லை என்றால், அதைத் தள்ளிப் போடாதீர்கள். இதைப் படிக்கும் உங்களில் சிலர்நான் மன்னிக்க முடியாத அளவுக்கு மோசமானவன்” என்று நினைத்துக் கொண்டிருக்கலாம், அப்படி ஒரு எண்ணம் கொண்டிருந்தால், விரக்தியடைய வேண்டாம். இயேசுவின் இரத்தம் எந்தவொரு பாவத்தையும் மன்னிக்கும் வல்லமை கொண்டது. சிலுவை மற்றும் அதைத் தொடர்ந்த உயிர்த்தெழுதல், நமது எல்லா பாவங்களுக்குமான மன்னிப்பைப்பற்றிய தேவனுடைய உறுதிப்பாட்டிற்கு உத்தரவாதத்தை அளிக்கிறது. இதைப் படிக்கும் மற்றவர்கள்கடைசி நிமிடம் வரை காத்திருந்து பிறகு என் வாழ்க்கையை சரிசெய்வேன்” என்று நினைக்கலாம். இத்தகைய சிந்தனையை கொண்டிருப்பது கீழ்காணும் ஆபத்துகளை விளைவிக்கும்:

a. உங்கள் பாவங்களை இப்போது விட்டுவிட நீங்கள் தயாராக இல்லை என்றால், எதிர்காலத்தில் நீங்கள் அவ்வாறு செய்வீர்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? காலப்போக்கில் இருதயம் கடினமாக மாறிப்போய்விடும்.

b. நீங்கள் எப்போது மரிப்பீர்கள் என்று உங்களுக்குத் தெரியாது. நினைவில் கொள்ளுங்கள், ஒரு கள்ளன் சிலுவையில் மரித்தான், அவனுடைய பாவங்கள் கிறிஸ்துவின் மேல் சுமத்தப்பட்டன; மற்ற கள்ளனும்அதே போல் சிலுவையில் மரித்தான். ஒரு கிறிஸ்தவ எழுத்தாளர் இவ்வாறு எழுதுகிறார், “மரணப் படுக்கையில் மனந்திரும்புவதைப் பற்றி நம்மிடம் ஒரேயொரு பதிவுமட்டுமே வேதத்திலுள்ளது; அதனால் யாரும் மரணப்படுக்கையில் மனந்திருந்திக்கொள்ளலாம் என்று கருதக்கூடாது.”

2. ஒரு விசுவாசியாக மாறுவது பூமிக்குரிய ஆறுதல்களுக்கு உத்தரவாதம் அளிக்காது, ஆனால் அற்புதமான பரலோக வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்கிறது.

மனந்திரும்பிய கள்ளன் இயேசுவிடம் மன்னிப்பு பெற்ற போதிலும் சிலுவையின் வேதனையிலிருந்து விடுவிக்கப்படவில்லை. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இயேசுவிடம் வந்ததன் மூலம் அவனுடைய பூமிக்குரிய பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. இருப்பினும், அவனது விசுவாசம் தற்போதைய வாழ்க்கையில் அல்ல, அதற்கு அப்பாற்பட்ட வாழ்க்கையில் இருப்பதால், தனது உலக வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டான்.

 

இதேபோல், ஒவ்வொரு கிறிஸ்தவரின் உண்மையான விசுவாசமும் வரவிருக்கும் வாழ்க்கையில் தங்கியிருக்க வேண்டும், அப்போது “அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது” [வெளிப்படுத்துதல் 21: 4]. நாம் மகிழ்ச்சியுடன் “நீதி வாசமாயிருக்கும்புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம் [2 பேதுரு 3:13].

 

Category
Subscribe
Notify of
guest


0 கருத்துக்கள்
Oldest
Newest
Inline Feedbacks
View all comments