இருண்ட இடங்களுக்கு பிரகாசமான விளக்குகள் தேவை

(English Version: Dark Places Need Bright Lights)
இளம் பெண் ஒருவள் ஒருமுறை தன் போதகரிடம் இவ்வாறு ஆலோசனை நடத்தினாள். “இதை இனிமேலும் என்னால் ஒதுக்கி வைக்க முடியாது. நான் வேலை செய்யும் இடத்தில் நான் மட்டுமே விசுவாசியான கிறிஸ்தவள். கிண்டல் மற்றும் ஏளனங்களைத் தவிர வேறு எதுவும் எனக்கு கிடைக்கவில்லை. இதை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. நான் என் வேலையை விட்டு ராஜினாமா செய்யப் போகிறேன்.” என்று கூறினாள். அதற்கு அந்த போதகர் “விளக்குகள் எங்கே வைக்கப்படுகின்றன என்று சொல்லுங்கள்?” என்று அவளிடம் கேட்டார். “அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?” என்று அந்த இளம் கிறிஸ்தவள் அவரிடம் வெளிப்படையாகவே கேட்டாள். “பரவாயில்லை,” சொல்லுங்கள் “விளக்குகள் எங்கே வைக்கப்பட்டுள்ளன?” என்று போதகர் மறுபடியும் அவளிடம் கேட்டார். அதற்கு “இருண்ட இடங்களில் தான் என்று நான் நினைக்கிறேன்,” என்று அவள் பதிலளித்தாள். பின்னர் அந்த போதகர், “ஆமாம்! இவ்வளவு ஆவிக்குரிய இருள் இருக்கும் இடத்தில் தேவன் உங்களை வைத்துள்ளார், அவருக்காக பிரகாசிக்க வேறு எந்த மெய் கிறிஸ்தவரும் அங்கு இல்லை.” என்று கூறினார்.
அந்த இளம் விசுவாசி தனக்கு கிடைத்த வாய்ப்பையும், அதை பயன்படுத்தாத போது தேவனை கனவீனப்படுத்தக் கூடிய சூழ்நிலையும் முதன்முறையாக உணர்ந்தாள். மேலும் அந்த இருண்ட மூலையில் தன் ஒளி பிரகாசிக்கட்டும் என்ற புது உறுதியுடன் தன் வேலைக்குத் திரும்பினாள். இறுதியில், அவள் மற்ற ஒன்பது சக இளம் பெண்களை இயேசு கிறிஸ்துவின் வெளிச்சத்திற்கு வழிநடத்தும் கருவியாக இருந்தாள். பிரகாசிப்பதற்காக அந்த இருண்ட இடத்தில் தான் வைக்கப்பட்டிருப்பதை அவள் உணர்ந்ததால் இவை அனைத்தும் நடந்தன.
அதேபோல், இந்தப் பெண்ணைப் போன்று, நம்மைச் சுற்றியுள்ள இருண்ட உலகில் நாம் ஒரு பிரகாசமான ஒளியாக இருக்க அழைக்கப்படுகிறோம் என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும். பிலிப்பியர் 2:14-16 ஆகிய வசனங்கள் கிறிஸ்தவர்களை உலகத்திலே பிரகாசிக்கும் சுடர்கள் என்று விவரிக்கிறது. சூரியன், சந்திரன் மற்றும் நட்சத்திரங்கள் ஒரு இருண்ட பிரபஞ்சத்தை ஒளிரச் செய்வதைப் போல, விசுவாசிகள் தங்களைச் சுற்றியுள்ள மக்களின் இருண்ட இருதயங்களில் ஒளியைக் கொண்டுவர வேண்டும்.
தம்மைப் பின்பற்றுபவர்களை உலகத்தின் வெளிச்சம் என்று இயேசு கிறிஸ்து விவரித்தபோது [மத் 5:14], நாம் ஒளியின் பிரதிபலிப்பாளர்களேயல்லாமல் ஒளியை உருவாக்குபவர்கள் அல்ல என்று அவர் அர்த்தப்படுத்தினார். நாம் ஒளி பெறுகிற மூலாதாரம் இயேசு கிறிஸ்துவே. “நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான்” என்று இயேசு கிறிஸ்து கூறினார் [யோவான் 8:12]. இயேசுவைப் பின்பற்றுபவர்களாகிய நாம் அவருடைய ஒளியை இருண்ட உலகில் பிரதிபலிக்க வேண்டும். நாம் காரிருளில் பிரகாசிக்கும் சந்திரனைப் போன்றவர்கள். சந்திரன் ஒளியைக் கொடுத்தாலும், அதற்கு சொந்த ஒளி இல்லை—அது சூரியனின் ஒளியை மட்டுமே பிரதிபலிக்கிறது. நாமும் அப்படித்தான்—ஒளி பிரதிபலிப்பான்களாக இருக்கிறோம்.
ஆனாலும், விசுவாசிகளாகிய நாம், இந்த அடிப்படையான சத்தியங்களை நினைவில் கொள்ள அடிக்கடி தவறுகிறோம். சர்வவல்லமையுள்ள தேவன் தமக்காக பிரகாசிக்கும் முதன்மை நோக்கத்திற்காக ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நம்மை வைத்திருப்பதை நாம் உணரத் தவறுகிறோம். தேவன் நமக்குக் கொடுத்த பங்கை நாம் உண்மையாக நிறைவேற்ற வேண்டும், அவரை ஏமாற்றக்கூடாது. அந்த மகிமையான நோக்கத்தை நிறைவேற்ற பிலிப்பியர் 2:14-16 நமக்கு உதவுகிறது.
1. கட்டளை [வசனம்14].
“எல்லாவற்றையும் முறுமுறுப்பில்லாமலும் தர்க்கிப்பில்லாமலும் செய்யுங்கள்.” ஒரு ஜன்னலானது சூரிய ஒளியை வீட்டிற்கு ஒளிரச் செய்வது போல, கிறிஸ்துவின் ஒளியை நாம் பிரகாசிக்க அனுமதிக்க வேண்டும். இருப்பினும், ஒரு ஜன்னலில் தூசிபடிந்துவிட்டால், அதன் வழியாக ஒளி திறம்பட பிரகாசிக்க முடியாது. இதேபோல், கிறிஸ்தவர்கள், தங்கள் வாழ்க்கையில் பாவத்தை ஆள அனுமதிப்பதன் மூலம், கிறிஸ்துவின் ஒளி அவர்கள் மூலம் பிரகாசிப்பதைத் தடுத்துவிடுத்துவிடுகிறார்கள். கிறிஸ்துவுக்காக பிரகாசிப்பதிலிருந்து விசுவாசியைத் தடுக்கும் ஒரு குறிப்பிட்ட பாவம் உள்ளது – அது முறுமுறுத்தல் மற்றும் வாக்குவாதம் செய்யும் பாவமாகும். அதனால்தான் “எல்லாவற்றையும் முறுமுறுப்பில்லாமலும் தர்க்கிப்பில்லாமலும் செய்யுங்கள்” என்பது கட்டளையாக கொடுக்கப்பட்டுள்ளது. மூல மொழியில், “எல்லாவற்றையும்” என தொடங்கும் வார்த்தையும், “செய்யுங்கள்” என்று முடியும் வார்த்தையும் நிகழ்காலத்தில் கூறப்பட்டுள்ளது. ஒரு நேரடி அர்த்தத்தில், இந்த வசனத்தை இவ்வாறு கூறலாம்: “எல்லாவற்றையும் முறுமுறுப்பில்லாமலும், தர்க்கிப்பில்லாமலும் செய்து கொண்டே இருங்கள்.”
“முறுமுறுத்தல்” என்பது முறையிடுதல், கிசுகிசுத்தல் அல்லது இரகசிய அதிருப்தியைக் கொண்டிருக்கும் மனப்பான்மையைக் குறிக்கிறது. ஒரு சூழ்நிலையைப் பற்றிய அதிருப்தியை வெளிப்படுத்துவது தேவனை அவமதிப்பது மட்டுமல்ல; மாறாக முறுமுறுப்பது என்பது சூழ்நிலைகள் மீதும் மக்களிடமும் இறுதியில் தேவனுக்கு எதிராகவும் மனக்கசப்பு கொள்வதாகும். மேலும் “தர்க்கித்தல்” அல்லது “வாதிடுதல்” என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து நாம் “உரையாடல்” என்ற வார்த்தையைப் பெறுகிறோம். இது நமது சூழ்நிலைகளைப் பற்றிய உள்நோக்கிய பகுத்தறிவைக் குறிக்கிறது. தேவனுடைய சித்தத்திற்கு எதிராக தொடர்ந்து முறுமுறுப்பதானது முழு இருதயத்தோடு அவருடைய சித்தத்திற்கு கீழ்படிவதை தடுப்பது மாத்திரமல்ல, இறுதியில் அவருக்கு எதிராக வாதிடுவதற்கும், கலகம் செய்வதற்கும் நம்மை வழிநடத்தும்!
“முறுமுறுக்க வேண்டாம்” என்று பவுல் கூறும்போது, இஸ்ரவேலர்கள் தங்கள் வனாந்தரப் பயணத்தின் போது கொண்டிருந்த மனப்பான்மையை அவர் தன்னுடைய மனதில் வைத்திருந்திருக்கலாம் [யாத்திராகமம் 14:10-12; 15:23-24, 16:2-3, 17:3; எண் 14:2]. இறுதிப் பகுப்பாய்வில், அவர்களின் முறுமுறுப்பு தனக்கு எதிராகவோ அல்லது மற்ற தலைவர்களுக்கு எதிராகவோ இல்லை எனவும், மாறாக நேரடியாக தேவனுக்கு எதிராகவே இருந்தது என்று மோசே அவர்களிடம் கூறினார், “உங்கள் முறுமுறுப்புகள் எங்களுக்கு அல்ல, கர்த்தருக்கே விரோதமாய் இருக்கிறது” [யாத்திராகமம் 16:8]. அவர்களின் முறுமுறுப்பு மனப்பான்மைக்கு தேவனின் பதில் என்னவாக இருந்தது? அது கோபமும் நியாயத்தீர்ப்பாகவும் இருந்தது! எண்ணாகமம் 11:1 ஆம் வசனம் இவ்வாறு கூறுகிறது, “கர்த்தர் அதைக் கேட்டபோது, அவருடைய கோபம் மூண்டது; கர்த்தருடைய அக்கினி அவர்களுக்குள்ளே பற்றியெரிந்து, பாளயத்தின் கடைசியிலிருந்த சிலரைப் பட்சித்தது.”
எனவே, முறுமுறுப்பது தேவனின் பார்வையில் சாதாரணமான காரியம் அல்ல. அது அவரை கோபப்படுத்துகிறது மற்றும் அவருடைய நியாயத்தீர்ப்பைக் கொண்டுவருகிறது. அதனால்தான் முறுமுறுக்கும் மனப்பான்மையின் ஆபத்துகளைப் பற்றி எடுத்துக் கூறி பவுல் கிறிஸ்தவர்களை எச்சரிக்கிறார். அவர் இவ்வாறு கூறுகிறார், “அவர்களில் சிலர் முறுமுறுத்து, சங்காரக்காரனாலே அழிக்கப்பட்டார்கள்; அதுபோல நீங்களும் முறுமுறுக்காதிருங்கள்” [1 கொரிந்தியர் 10:10].
முறுமுறுப்பது ஒரு பாவம், ஏனென்றால் அது தேவனின் இராஜரீகத்தை நேரடியாக தாக்குகிறது. முறுமுறுப்பதானது நல்லவரும், கிருபையுள்ளவருமான தேவனுக்கு எதிரான பாவம் என்பதை இயேசுகிறிஸ்துவே ஒரு உவமையின் மூலம் விளக்கியிருக்கிறார் [மத் 20:1-16]. தற்சமயம் நான் அனுபவித்து வருவதை தேவன் அனுமதித்திருக்கக் கூடாது என்று முறுமுறுப்பு கூற வைக்கிறது. அதனால்தான், நாம் தேவன் உறுதியான கட்டுப்பாட்டை அங்கீகரிக்கும் கீழ்ப்படிதலுள்ள ஒரு இருதயத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். அவர் தம்முடைய சித்தத்தின்படி எல்லாவற்றையும் செய்கிறார், நாம் அவரை எதிர்க்கக்கூடாது.
2. காரணம்[வசனங்கள் [15-16].
விசுவாசிகள் முறுமுறுக்காமல், தர்க்கிக்காமல் எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என்பதற்கான காரணத்தை பின்வரும் இரண்டு வசனங்களில் பவுல் தொடர்ந்து கூறுகிறார், “15 கோணலும் மாறுபாடுமான சந்ததியின் நடுவிலே குற்றமற்றவர்களும் கபடற்றவர்களும், தேவனுடைய மாசற்ற பிள்ளைகளுமாயிருக்கும்படிக்கு, 16 எல்லாவற்றையும் முறுமுறுப்பில்லாமலும் தர்க்கிப்பில்லாமலும் செய்யுங்கள்.” விசுவாசிகள் முறுமுறுப்பு மற்றும் வாக்குவாதம் இல்லாமல் எல்லாவற்றையும் செய்யும்போது, அவர்கள் தேவனின் பிள்ளைகளாக தங்கள் நற்குணத்தை நிரூபிக்கிறார்கள்—வக்கிரமான மற்றும் மோசமான தலைமுறைக்கு மத்தியில் பிரகாசிக்கிறார்கள்.
தேவனுடைய மக்களுக்கான தேவனின் இலட்சியம் என்னவென்றால், குணத்திலும் நடத்தையிலும் எதிர்மறையான எதுவும் வெளிப்புறத்தில் இருக்கக்கூடாது [“குற்றமற்றவர்களாக இருக்க வேண்டும்”] மற்றும் உள்ளே எதிர்மறையான எதுவும் இருக்கக்கூடாது[“தூய்மையானவர்களாக இருக்க வேண்டும்”]. இரகசியமான நிகழ்ச்சி நிரல்கள், மறைவான நோக்கங்கள், ஒன்றை பொருள்படுத்தி, மற்றொன்றைப் பேசுதல் போன்றவை இருக்கக்கூடாது. விசுவாசிகளின் வாழ்க்கை முறையானது தங்களைச் சுற்றியுள்ள அவிசுவாச உலகத்தை கிறிஸ்துவிடம் ஈர்க்க கூடியதாக இருக்க வேண்டும். ஒரு விசுவாசி, அவருடைய வார்த்தையைப் பற்றிக் கொண்டு மற்றவர்களுக்கு அறிவிக்கும்போது, அவருடைய ஒளியை உள்ளேயும், அவர்கள் மூலமாகவும் பிரகாசிக்க அனுமதிப்பதன் மூலம் தேவனை மகிமைப்படுத்த வேண்டும்!
இறுதி சிந்தனைகள்.
விசுவாசிகளாகிய நாம் நம்மைச் சுற்றியுள்ள இழந்துப் போன உலகத்திற்கு “ஒவ்வொரு பிரச்சனைக்கும் இயேசுவே பதில் என்று அறிவிக்க வேண்டும். எல்லா நேரங்களிலும் என்னுடன் இருக்கிறார்.” “வேதத்தின் தேவன் யெகோவா-ஈரே—எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார்” என்று நாம் விசுவாசத்துடன் கூறுகிறோம். இருப்பினும், இந்த சத்தியங்களை நாம் உண்மையாகவே முழு மனதுடன் விசுவாசித்தால், நாம் ஏன் தொடர்ந்து முறுமுறுக்கிறோம், “நான் ஏன் இந்த நிலையில் இருக்கிறேன், நான் ஏன் இந்த இடத்தில் இருக்கிறேன், நான் ஏன் இந்த வேலையில் இருக்கிறேன், நான் ஏன் பணக்காரனாகவில்லை? நான் ஏன்? இந்த குடும்பத்தில் பிறந்தேன்? நான் ஏன் இன்னும் தனிமையில் இருக்கிறேன்? நான் ஏன் திருமணம் செய்து கொண்டேன்? நான் ஏன் இந்த சபையில் இருக்கிறேன்? ஏன்? ஏன்? ஏன்?”
நாம் உலகின் சிந்தனையைத் தழுவி, நமது “சாதாரணமான” முறையிடுதலையும் கூட வாழ்க்கையின் ஒரு பகுதியாக “ஏற்றுக் கொண்டிருக்கிறோம்” என்று தோன்றுகிறது. உலக மனிதர்கள் “என்னுடைய மன அழுத்தம் வெளியேற வேண்டும், அப்படி வெளியேறவில்லை என்றால் வெடித்துவிடுவேன்” என்று கூறுகிறார்கள். எவ்வாறாயினும், விசுவாசிகளாகிய நாம், “தேவன் என் தந்தையாக இருப்பதால், நான் என்ன சொல்ல விரும்புகிறேனோ அதைச் சொல்ல முடியும் என்றும், நான் என்னை சுதந்திரமாக வெளிப்படுத்த முடியும்” என்றும் சொல்வதன் மூலம் நம் முறையிடுகளை “கிறிஸ்தவமயமாக்க” முனைகிறோம். அதுவே நமது மனப்பான்மையாக இருந்தால், நாம் சற்று திரும்பிப் பார்த்து எண்ணாகமம் 11:1 மற்றும் 1 கொரிந்தியர் 10:10 ஐ மீண்டும் படிக்க வேண்டும்!
சிலர் வெளியரங்கமாக சிலர் முறையிடாவிட்டாலும், அப்படி முறையிடுவது “கிறிஸ்தவ” வழிமுறையல்ல என்பதாலும், அவர்கள் தங்கள் வாழ்க்கைச் சூழ்நிலைகளில் உள்ளார்ந்த விதத்தில் கசப்பைக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் முறுமுறுப்பிற்கு சமமாக மோசமானது-ஏனென்றால், தேவனைப் பொறுத்தவரை, நாம் என்ன சொல்கிறோம் என்பது மட்டுமல்ல, நாம் என்ன நினைக்கிறோம் என்பதும் முக்கியம்!
ஒரு சிறுவனை உட்காரும்படி அவனது தந்தை திரும்பத் திரும்பச் சொன்னார். இறுதியாக, அவன் கீழ்ப்படியத் தவறும் பட்சத்தில் உடல் ரீதியான தண்டனையை தரப்போவதாக எச்சரித்தார். உடனே பையன் அமர்ந்துவிட்டான். இருப்பினும், “நான் வெளிப்புறமாக அமர்ந்திருக்கிறேன், ஆனால் உள் மனதில் நின்று கொண்டிருகிறேன்.” என்று கூறினான்.
தேவனுடைய சித்தத்திற்கு அடிபணியும்போது நாம் அந்தச் சிறுவனைப் போல் இருக்கக்கூடாது. நமது அன்றாட வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் அவருடைய சித்தத்திற்கு நாம் கீழ்ப்படிவது விருப்பமாகவும், முழு மனதுடனும் இருக்க வேண்டும். அது அவருக்கு முழுவதுமாக சமர்ப்பிக்கப்பட்ட இருதயத்திலிருந்து மட்டுமே வெளிப்படும்.
குறை கூறும்போது, முறுமுறுக்கும் ஆவியால் ஆட்கொள்ளப்பட்டிருக்கிற அவிசுவாசிகளிடமிருந்து நாம் எவ்வளவு வேறுபட்டு இருக்கிறோம் என்பதையும் விசுவாசிகள் நினைவில் கொள்ள வேண்டும்? தொடர்ந்து முறுமுறுத்துக் கொண்டே இருந்தால் எப்படி பிரகாசிக்க முடியும்? நினைவில் கொள்ளுங்கள், முறுமுறுப்பும் பிரகாசமும் ஒன்றாக இணைந்து செல்லமுடியாது என்பதை நினைவில் கொள்ளுதல் அவசியம்! பிரகாசிக்க தொடங்க வேண்டும் என்றால் முறுமுறுப்பு நம்மை விட்டுப் போக வேண்டும். ஒருவர் முறுமுறுத்துக் கொண்டும், அதே நேரத்தில் கிறிஸ்துவை மகிமைப்படுத்தவும் மற்றவர்களை அவரிடம் ஈர்க்கவும் முடியாது.
எனவே, இந்தக் கட்டளைக்குக் கீழ்ப்படியும் இருதயத்தை வளர்த்துக் கொள்ளக் கற்றுக்கொள்வோம்: “எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்து தேவனுடைய சித்தமாயிருக்கிறது” [1 தெசலோனிக்கேயர் 5:18]. பிலிப்பியர் 2:14 [“முறுமுறுப்பு மற்றும் தர்க்கம் இல்லாமல் எல்லாவற்றையும் செய்யுங்கள்”] 1 தெசலோனிக்கேயர் 5:18 ஆகிய வசனங்களை இணைக்கும்போது, தேவன் தம்முடைய பிள்ளைகளை எல்லா சூழ்நிலைகளிலும் முறையிட்டுக்கொண்டிருக்காமல், ஸ்தோத்திரஞ்செய்யும் மனப்பான்மையைக் கொண்டிருக்க வேண்டும் என்று விரும்புவதைக் காண்கிறோம்!
ஒருவேளை, நம் ஒளி பிரகாசிக்கவில்லையென்றால் முறையிடும் மனப்பான்மை நம் வாழ்க்கையை வகைப்படுத்துகிறது என்று பொருள். ஒரு கலங்கரை விளக்கமானது தனந்தனியே நிற்கும்படிக்கு அமைக்கப்பட்டிருப்பதால் அது முறையிடுவதை நீங்கள் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது, ஏனென்றால் அது ஒரு கடற்கரையில் தனியாக அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஒருவேளை அதினால் பேச முடிந்தால், “இருள், சூறாவளி மற்றும் புயல்களுடன் போராடும் கப்பல்கள் பாதுகாப்பாக துறைமுகத்தை அடையவதற்கு ஒளியை வழங்க நான் இங்கு நின்று கொண்டுள்ளேன்” என்று அது தனக்குத்தானே ஆறுதல் கூறிக்கொள்ளும். அதேபோல், நீங்களும் நானும் நம் வாழ்க்கைச் சூழ்நிலைகளைப் பற்றி தர்க்கம் செய்யவோ அல்லது முறையிடவோ கூடாது, ஆனால் அவருடைய பிள்ளைகளாக, எல்லா நேரங்களிலும் அவருடைய விருப்பத்திற்கு மகிழ்ச்சியுடன் அடிபணிய வேண்டும். கலங்கிய ஆத்துமாக்கள் கர்த்தராகிய இயேசுவின் மூலம் சமாதானத்தையும் இளைப்பாறுதலையும் பெற நாம் நற்செய்தி விளக்குகளாக இருக்க அழைக்கப்பட்டுள்ளோம். அவர் நம்மீது வைத்திருக்கும் நம்பிக்கையை நாம் ஏமாற்றக்கூடாது. சிறியதோ அல்லது பெரியதோ எப்படியானாலும் நீங்களும் நானும் விளக்குகளாக இருக்கிறோம் – நம்மில் சிலர் தீக்குச்சிகள் போன்றவர்கள், மற்றவர்கள் தீபங்களைப் போன்றவர்கள். இருப்பினும், நினைவில் கொள்ளுங்கள், ஒளி விளக்குகளுடன் பொருந்துகிறது. நாம் அனைவரும் தீபங்களாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் நாம் அனைவரும் நிச்சயமாக தீக்குச்சிகளாக இருக்க முடியும். நம்முடைய தேவன் தம்முடைய சித்தத்தை நிறைவேற்றுவதற்குத் தம்முடைய பிள்ளைகளில் பலவீனமானவர்களைக்கூடப் பயன்படுத்தும் பணியில் இருக்கிறார்.
அட்லாண்டிக் பகுதியில் பயணியொருவர் ஒரு புயலில் சிக்கி, மரண படுக்கையில் கப்பலுக்குள் கிடந்த கதை இது. கப்பலில் இருந்த இந்த மனிதனின் அழுகை கேட்கப்பட்டது. ஆனால் இதிலுள்ள ஒரு சிரமம் என்னவென்றால், மற்றவர்களால் அந்த மனிதனைப் பார்க்க முடியவில்லை. உதவிய செய்ய விரும்பிய ஒருவன், உதவி செய்ய முடியாமல், “தேவனே, அந்த ஏழைக்கு உதவும், என்னால் செய்ய முடியவில்லை” என்று வேண்டுதல் செய்தான். பின்னர் அவன் குறைந்தபட்சம் தன்னிடமிருந்த விளக்களில் ஒன்றை வெளிப்புற ஜன்னல் வழியாக வைக்கலாம் என்று நினைத்தான், ஆனால் அது வித்தியாசத்தை ஏற்படுத்துமா என்று அவனுக்கு தெரியவில்லை.
பின்னர், மூழ்கிய மனிதன் மீட்கப்பட்டான். அடுத்த நாள், அவன் தனது அனுபவத்தை மக்களிடம் கூறியது போல், “நான் கடைசியாக இருளில் இறங்கிக் கொண்டிருந்தபோது, யாரோ ஒருவர் வெளிப்புற ஜன்னலில் ஒரு விளக்கை வைத்த விளக்கு பிரகாசித்தப்போது, ஒரு மீட்பு படகில் மாலுமியொருவன் என் கையைப் பிடித்து உள்ளே இழுத்துக்கொண்டான்.”
அன்புள்ள சக விசுவாசிகளே, தேவன் நம்முடன் இருந்தால் மேலானதாக இருக்கும். நம்மிடம் இருக்கும் கொஞ்ச பலத்தை வெளிப்படுத்தாமல் இருப்பதற்கு நம்முடைய பலவீனம் ஒரு காரணமல்ல. அதை தேவன் எவ்வாறு பயன்படுத்துவார் என்று யாருக்குத் தெரியும்? நாம் பிரகாசிக்கத் ஆயத்தமாக இருந்தால், ஆத்துமாக்களை பாவத்தின் ஆபத்துகளிலிருந்து தப்பிக்க அவர் நம்மைப் பயன்படுத்துவார். ஆம், இருண்ட உலகில் கிறிஸ்துவுக்காக பிரகாசிப்பது எப்பொழுதும் எளிதானதல்ல; இருந்தபோதிலும், உலகம் முழுவதற்கும் சாத்தியமான சிறந்த செய்திகளை தேவன்நம்மிடம் ஒப்படைத்துள்ளார்—ஒவ்வொரு மனிதனுக்கும் மிகவும் அவசியமான செய்தி: கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில் வைக்கும் விசுவாசத்தின் மூலம் பாவ மன்னிப்பைப் பற்றிய நற்செய்தி!
இயேசுகிறிஸ்துவிற்காக பிரகாசிப்பது எவ்வளவு பாக்கியம்! அவரால் பயன்படுத்தப்படுவது எவ்வளவு மகிழ்ச்சி! இருப்பினும், பிரகாசிப்பது எப்பொழுதும் எரிவதன் விளைவாகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். மெழுகுவர்த்தியானது தன் ஒளியைக் கொடுப்பதால் மறைந்துவிடும். விளக்கு ஒளி தொடர்ந்து வழங்குவதால் அதன் ஆயுள் குறைகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், கிறிஸ்தவ வாழ்க்கையில் ஒரு தியாக அம்சம் உள்ளது. நாம் தேவனால் பயன்படுத்தப்பட விரும்பினால், நம்முடைய பாவம், சுய திட்டம், நிதி, நேரம் போன்றவற்றை விட்டுக்கொடுக்க நாம் தயாராக இருக்க வேண்டும். பல கிறிஸ்தவர்கள் பிரகாசிப்பதில்லை, ஏனென்றால் கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றிய அடிப்படை மற்றும் சமரசமற்ற கொள்கையை அவர்கள் புரிந்து கொள்ளவதில்லை. எரிகிறதும் இல்லை ஒளிர்கிறதுமில்லை!
எனினும், விசுவாசிகளாகிய நாம், நம் பாவங்களுக்காக சிலுவையில் ஜீவனைக் கொடுக்கத் தயங்காத இயேசுவுக்காக நம் உயிரைக் கூட – தேவைப்பட்டால் விட்டுக்கொடுக்கத் தயங்க கூடாது! விட்டுக்கொடுக்க கூடாது என்ற அத்தகைய சிந்தனை விவாதத்திற்கு கூட வரக்கூடாது! “கர்த்தராகிய இயேசுவே, நீர் எல்லாவற்றுக்கும் பாத்திரர். நான் தற்போதிருக்கும் இந்த நிலையில் என்னை பயன்படுத்தும், தயவுசெய்து ஒவ்வொரு அடியிலும் என்னை வழிநடத்தும். நான் உமக்காக வாழ விரும்புகிறேன், நான் இருக்கும் இடத்தில் இப்போதே உம் ஒளியை பிரகாசிக்க விரும்புகிறேன்!” நாம் எப்போதும் சொல்ல வேண்டும்.