கர்த்தருடைய நாளில் தேவனை மகிமைப்படுத்தும் விதத்தில் சபைக்குச் செல்வதற்கான நடைமுறை ஆலோசனைகள்

Posted byTamil Editor August 11, 2025 Comments:0

(English Version: “Practical Suggestions on Attending Church in a God-Glorifying Manner on the Lord’s Day”)

இது “ஓய்வு நாள் மற்றும் கர்த்தருடைய நாள்” என்ற தொடரின் 4வது மற்றும் கடைசி பதிவு. முதல் பதிவு, “விசுவாசிகள் ஓய்வுநாளைக் கடைப்பிடிக்க வேண்டுமா?” என்ற கேள்வியை எழுப்பியது. இரண்டாம் பதிவு, “விசுவாசிகள் கர்த்தருடைய நாளை அனுசரிப்பது அவசியமா?” என்ற கேள்வியை எழுப்பினது. மூன்றாம் பதிவு “கர்த்தருடைய நாளன்று சபைக்குச் செல்வதைத் தடுக்கும் பொதுவான பிரச்சனைகள்” என்பதோடு இடைப்பட்டது.

கர்த்தரை மகிமைப்படுத்தும் விதத்தில் கர்த்தருடைய நாளில் சபையில் கலந்துகொள்ள உதவும் நடைமுறை ஆலோசனைகளைக் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். நான் இவற்றை ஆயத்தம் மற்றும் பங்கேற்பு என்று 2 பரந்த வகைகளாகப் பிரித்துள்ளேன்.

I. ஆயத்தம

பெரும்பாலும், கர்த்தருடைய நாளில் அவரை ஆராதிப்பதற்கான ஆயத்தம் சபைத் தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் நடக்கும். ஆனால், இது குழப்பத்திற்கு வழிவகுக்கிறது. ஞாயிற்றுக்கிழமை காலை முன்னதாகவோ, சனிக்கிழமை மாலை/இரவில் அல்லது சற்று முன்னதாகவோ ஆயத்தம் செய்து கர்த்தரை  ஆராதிக்கலாம்.

எனவே, சனிக்கிழமை மாலை/இரவில் செய்ய வேண்டிய 10 விஷயங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

1. சரியான நேரத்திற்கு படுக்கைக்கு செல்லுங்கள். 

இதை செய்வதை விட சொல்வது  எளிதானது. பல விளையாட்டுப் போட்டிகளும், கவர்ச்சிகரமான இடங்களுக்குச் செல்வதும், நெடு நேரம் வரை நம்மை விழித்திருக்க வைக்கும் [எடுத்துக்காட்டாக, டிவி, இணையம், விளையாட்டு, ஒன்றுகூடுதல்]. எவ்வாறாயினும், நம் உடலுக்கு நியாயமான அளவு ஓய்வு தேவை என்பது உண்மை தான். சரியான நேரத்தில் உறங்கச் செல்வது, நமது உடல்கள் ஓய்வெடுக்கவும், சபைக்கு செல்ல நம்மைத் தயார்படுத்துவதும் மட்டுமல்லாமல், சோர்வை மேற்கோண்டு சபைக்கூடுதலைத் தவிர்க்கும் சோதனையையும் திறம்பட கொல்லும்.

2. ஞாயிறு ஆராதனைக்கு உடைகளை ஆயத்தப்படுத்துங்கள்

மன அழுத்தம் இல்லாமல் சனிக்கிழமை இரவு 5-10 நிமிடம் செய்யும் இப்பணியானது ஞாயிற்றுக்கிழமை காலையில் தேவையற்ற பதற்றத்தைத் தவிர்க்கும்.

3. உங்கள் வாகனத்தில் போதுமான எரிபொருள் உள்ளதா என்று சோதித்துக்கொள்ளுங்கள்.

சபைக்கு செல்லும் வழியில், பெட்ரோல் நிரப்புவது சில நிமிடங்களாகத் தோன்றலாம். இருப்பினும், மற்றொருவர் ஏற்கனவே அவசரத்தில் இருந்தால், அந்த சில நிமிடங்கள் நமது விரக்தியை அதிகரிக்கலாம்.  வாகனம் பெட்ரோல் நிலையம் வரை  செல்லவில்லை என்றால் என்ன செய்வது? 

4. காணிக்கைகளை எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

சபைக்கு செல்வதற்கு முன் தங்கள் காணிக்கைகளை தயாராக வைத்திருப்பது ஒரு நல்ல நடவடிக்கையாகும்.

5. குழந்தைகளுக்கு தேவையானவற்றை எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்

ஒருவருக்கு சிறு குழந்தைகள் இருந்தால் டயபர்  [Diaper] பையை எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். அவர்களுக்கு தேவையானவைகள் போதுமான அளவு இருப்பதைக் கவனித்தலும் அவசியம்.

6. பிரசங்கம்/போதிக்கும் ஊழியத்தில் இருந்தால் அனைத்து பொருட்களையும் ஒழுங்கமையுங்கள்.

இங்கு காணப்படும் முக்கிய வார்த்தையானது ஆயத்தப்படுத்துதல் அல்ல, மாறாக ஒழுங்கமைத்தலாகும். ஆயத்தங்கள்  முன்பே செய்யப்பட்டிருக்க வேண்டும். எலக்ட்ரானிக் சாதனங்களைப் பயன்படுத்தும் பழக்கம் இருந்தால் [எடுத்துக்காட்டாக ஐபேட்], சாதனம் செயலிழந்துப்போக வாய்ப்பிருக்கிறது. எனவே, ஒரு காகித நகல் வைத்திருப்பது நல்லது. சாதனங்களை சார்ஜ் செய்வது நல்லது,  அவை ஆராதனையின் நடுவில் பேட்டரி தீர்ந்துவிடாமல் இருக்க உதவிச்செய்யும்.

7. இசைக்கருவிகளை ஆயத்தம் செய்து கொள்ளுங்கள் 

பாடல் தாள்கள் மற்றும் இசைக்கருவிகளை சனிக்கிழமை இரவே ஆயத்தப்படுத்துவது உதவியாக இருக்கும்.

8. காலை உணவையும், தேவைப்பட்டால், மதிய உணவையும் திட்டமிடுங்கள்.

எதை சாப்பிடுவது மற்றும் எவ்வளவு நேரம் சமைக்க வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுப்பது ஒரு பெரிய பிரச்சினைக்கும் பெரும்பாலும் விரக்திக்கும் காரணமாகிறது. இருப்பினும், முந்தைய இரவில் என்ன செய்ய வேண்டும் என்பதைத் திட்டமிடுவதன் மூலம்  ஏமாற்றத்தைத் தவிர்க்கலாம்.

9. உணவை பகிர்ந்துண்ணுங்கள்.

உங்கள் சபையில் மதிய உணவிற்கான நேரம் இருந்தால், உங்கள் குடும்பத்தினருக்கு போதுமான அளவு கொண்டு செல்ல திட்டமிடுவதும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதும் நல்லது [குறிப்பாக தனிமையில் இருப்பவர்களுடன்]! இப்படி செய்வதால் மற்றவர்களுக்கு பாரமாக இருப்பதற்குப் பதிலாக, ஆசீர்வாதமாக இருக்க முடியும்!

10. படுக்கைக்குச் செல்வதற்கு முன் வேத வாசிப்பிலும் ஜெபத்திலும் நேரத்தை செலவிடுங்கள்.

விசுவாசிகளின் 3 எதிரிகள், அதாவது இன்னும் நம்மிடம் இருக்கும் பாவ சுபாவம் அல்லது “மாம்சம்”, “உலகம்” மற்றும் “பிசாசு” ஆகியவைகள் தேவனுக்குரிய காரியங்களைத் தொடர நம்மை அனுமதிக்கும் என்று நினைப்பது விவேகமற்றது. இது ஒரு போர், நாம் இத்தகைய போர்களை எதிர்பார்க்க வேண்டும், வேதவசனங்களை தியானித்து ஜெபிப்பதன் மூலம் அவற்றுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும்.

துதிப்பதும் பாவங்களை அறிக்கையிடுவதும் நமது ஜெபங்களுடன் இணைந்து இருக்க வேண்டும். நம் இருதயத்தில் கசப்புடன் கர்த்தருடைய வீட்டிற்கு வராமல் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும். அது நம் ஆராதனையைத் தடுக்கிறது [மத்தேயு 5:23-24, மாற்கு 11:25]. பாவமுள்ள இருதயங்களுடன் கர்த்தருடைய இராப்போஜனத்தில் பங்குகொள்வதன் விளைவுகள் கடுமையாக இருக்கும் [1 கொரிந்தியர் 11:27-31]!

இது ஓர் ஆவிக்குரியப் போர் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அதனால்தான் சரியான ஆயத்தம் அவசியம்! விடுமுறையில் கூட, நாம் முன்கூட்டியே திட்டமிட்டு, கர்த்தரை தொழுது கொள்வதற்கு சத்தியத்தை பிரசங்கிக்கும் உள்ளூர் சபையைக் கண்டுபிடிக்க வேண்டும்.

சனிக்கிழமையில் செய்ய வேண்டிய 10 விஷயங்களின் பட்டியலைப் பார்த்த பிறகு, ஞாயிற்றுக்கிழமை காலையில் கவனிக்க வேண்டிய சில விஷயங்களைக் கருத்தில் கொள்வோம்.

ஞாயிற்றுக்கிழமை காலையில் செய்ய வேண்டிய 6 விஷயங்கள்.

1. சரியான நேரத்தில் எழுந்திருங்கள்.

ஒருவர் எவ்வளவு சீக்கிரம் படுக்கைக்குச் சென்றாலும் அதிக நேரம் தூங்க வேண்டும் என்ற ஆசை எப்போதும் இருக்கும். பழைய பழக்கங்கள் சீக்கிரம் அழியாது. அதனால்தான் நாம் இதில் உதவிக்காக ஜெபிக்க வேண்டும் மற்றும் அலாரம் அடிக்கும்போது எழுந்திருக்க வேண்டும்!

2. இதமான ஒரு குளியல் போடுங்கள்.

உயிர்த்தெழுந்த ராஜா இயேசுகிறிஸ்துவை ஆராதிக்க வரும்போது மனதளவிலும், உடலளவிலும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது!

3. வேத வாசிப்பிலும், ஜெபிப்பதிலும் நேரத்தை செலவிடுங்கள்.

புத்துணர்ச்சியுடன் இருக்க வேண்டியது சரீரப் பகுதி மட்டும் அல்ல; [அடுத்த குறிப்பைப் பார்க்கவும்], ஆவிக்குரியப் பகுதியும் கூட. சபையில் அவருடைய பிரசன்னத்தை அனுபவிக்கும் ஆசீர்வாதத்தைப் பெற தேவனுடைய வார்த்தையிலும், இருதயப்பூர்வமான ஜெபத்திலும் நேரத்தை செலவிடுவது மிகவும் முக்கியமானது. ஊழியத்தில் இருப்பவர்களுக்காகவும்,  கர்த்தருக்கு செவிக்கொடுக்க வேண்டிய மக்களுக்காகவும்  மனத்தாழ்மையுடன் ஜெபிப்பது நல்லது. இழந்து போனவர்கள் கர்த்தரிடம் திரும்பவும், சுவிசேஷத்தைக் கேட்டு இரட்சிக்கப்படவும் ஜெபிப்பதும் இன்னும் நல்லது.

4. காலை உணவை எடுத்துக்கொள்ளுங்கள்.

வெற்று வயிறு [ஒருவர் உபவாசம் இருந்தால் தவிர] சரியாக ஆராதிப்பதைத் தடுக்கலாம். மனமும் உடலும் எப்போதும் வெறும் வயிற்றில் சரியாக இயங்காது! எனவே, சீரான காலை உணவு அவசியம்!

5. உங்கள் பிள்ளைகளை ஆயத்தமாக்க உங்கள் மனைவிக்கு உதவுங்கள்.

இந்த யோசனை கணவன்மார்களுக்கு அதிகம் பொருந்தும். குழந்தைகளை எழுப்புவது, குளிக்க வைப்பது, காலை உணவை சாப்பிட உதவுவது போன்ற சிறிய விஷயங்கள் கூட மற்ற அலுவல்களில்  இருக்கும் மனைவிக்கு பெரும் நிம்மதியைத் தரும். குழந்தைகள் புத்துணர்ச்சியுடன் இருப்பது பெற்றோருக்கும், சபையாகிய குடும்பத்திற்கும் ஒரு ஆசீர்வாதம்! இது பிள்ளைகளுக்கும் நல்லது!

குறிப்பு: ஒரு பெற்றோர் மட்டுமே விசுவாசிகளாக இருக்கும் சந்தர்ப்பங்களில், அவர்கள் தங்கள் துணைவரிடமிருந்து உதவியைப் பெற முடியாது என்பதை நான் புரிந்துகொள்கிறேன். அத்தகைய சூழ்நிலையில் இது எளிதானது அல்ல. நீங்கள் அத்தகைய பெற்றோராக இருந்தால், மனம் தளராதீர்கள். உங்கள் முயற்சி வீண் போகாது. உங்களுக்காக மரித்த கர்த்தராகிய இயேசுவுக்காக நீங்கள் இதைச் செய்கிறீர்கள் என்பதை நினைவில் வையுங்கள். முன்னோக்கிச் செல்ல இது உங்களைத் தூண்டட்டும்! யாருக்குத் தெரியும், ஒரு நாள், உங்கள் துணைவர் மாறுவார். கடின உள்ளங்களை மாற்றும் பணியில் தேவன் இருக்கிறார். எனவே, தயவுசெய்து சோர்ந்து போகாதீர்கள்!

6. சீக்கிரம் வருவதற்கு திட்டமிடுங்கள்.

சீக்கிரம் வருவதன் மூலம் நீங்கள் ஒரு பதட்டமில்லாத சூழலில் இருக்கலாம், ஊக்கமளிக்கும் வார்த்தையை வழங்க மக்களைச் சந்திக்கலாம், சபை ஊழியர்களுக்கு உதவலாம், ஆராதனைக்கு மனதை பிரார்த்தனையுடன் தயார் செய்யலாம். முன்கூட்டியே வரத் திட்டமிடுவதன் மூலம், எதிர்பாராத போக்குவரத்து தாமதங்களை நீங்கள் சமாளிக்க முடியும், இதனால் விரக்தியும், குடும்ப உறுப்பினர்களிடையே வாக்குவாதமும் கூட தவிர்க்கப்படலாம். ஆராதிக்கச் செல்லும் வழியில் வேக வரம்பை மீறி வாகனம் ஓட்டும் பாவத்தையும் தவிர்க்கலாம்!

சீக்கிரமாக ஆயத்தமாவது பிள்ளைகளுக்கும் ஒரு நல்ல உதாரணம்!  பொறுப்புடன் இருப்பதன் முக்கியத்துவத்தை இது காட்டுகிறது. நாம் செல்ல வேண்டிய இடங்களுக்கு, குறிப்பாக கர்த்தரை ஆராதிப்பதற்கு எப்பொழுதும் தாமதமாகச் சென்றால், நம் பிள்ளைகளுக்கு நாம் என்ன முன்மாதிரி வைப்போம்? பிள்ளைகள் உதாரணம் மூலம் கற்றுக்கொள்கிறார்கள்!

நீங்கள் சீக்கிரம் வர திட்டமிட்டால் பல நன்மைகள் இருப்பதை பார்க்க முடியும். 

சனிக்கிழமை இரவு மற்றும் ஞாயிறு காலை ஆகிய இரு வேளைகளிலும் சபைக்கு வருவதற்கு முன் திட்டமிடல் பகுதியைப் பார்த்த பிறகு, இப்போது சபையில் இருக்கும்போது பங்கேற்பு அம்சத்தைக் குறித்துப் பார்ப்போம்.

II. பங்கேற்பு

சபையில் இருக்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய 3 காரியங்கள்.

1. பாடுதல், வார்த்தையைக் கேட்டல், ஜெபம் செய்தல், கர்த்தருடைய இராப்போஜனத்தில் பங்கேற்றல் என்று ஆரம்பித்து ஆராதனையின் எல்லா அம்சங்களிலும் நாம் முழு மனதுடன் பங்குகொள்ள வேண்டும். கர்த்தராகிய இயேசு நம்முடைய முழு இருதயத்தின் ஆராதனைக்கு பாத்திரர்!

2. நாம் மக்களுடன் ஐக்கியம் கொள்ள வேண்டும், ஒருவரையொருவர் ஊக்குவிக்க வேண்டும். புதியவர்களை அறிந்துகொள்ளவும் நாம் தயாராக இருக்க வேண்டும். தெரிந்தவர்களுடன் மட்டுமே நேரத்தை செலவிடும் போக்கை நாம் கைவிட வேண்டும். 

3. முழு ஆராதனையிலும் இருக்க நாம் திட்டமிட வேண்டும். அதனால்தான் ஆராதனை முடிந்த உடனேயே பங்கேற்கும் நிழ்ச்சிகளைத் திட்டமிட்டு வைத்துக்கொள்ளக் கூடாது [நிச்சயமாக இதில் விதிவிலக்குகள் உள்ளன. ஆராதனைக்கு பிறகு நாம் பல விஷயங்களை திட்டமிட்டு இருந்தால், தொடர்ந்து கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டே இருப்போம், ஆராதனை நேரம் கொஞ்சம் அதிகரித்தால் பீதி அடைவோம். எல்லாவற்றிற்கும் மேலாக, இது கர்த்தருடைய நாள் என்பதை நினைவில் கொள்ளுதல் அவசியம்!

இறுதி சிந்தனைகள்.

இந்த யோசனைகளில் பெரும்பாலானவை அநேக வாசகர்களுக்கு ஒன்றும் புதிதானவையல்ல. இருப்பினும், கர்த்தருடைய நாளை அவருடைய நாளாகக் கருதுவதற்கு நமக்கு உதவும் ஒரு சிறந்த நினைவூட்டலாக இவை அமையும்.

இந்தத் தொடரில் நான் எதை எழுதியிருந்தாலும், நான் அவற்றை ஒரு சட்டப்பூர்வ உணர்வில் எழுதவில்லை—இருப்பினும் என்னை தவறாகப் புரிந்து கொள்ளப்படும் அபாயம் உள்ளது. ஆம், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து செய்த இரட்சிப்பின் நிறைவுப் பணியில் நாம் எதையும் கூட்டவோ குறைக்கவோ முடியாது. இருப்பினும், இவ்வளவு கிரயத்தின் மூலம் வந்த மீட்பை ஒரு நேர்மையான அர்ப்பணிப்புடன் ஏற்றுக்கொண்டு வாழ வேண்டும். கர்த்தருடைய நாளில் கர்த்தரைக் கனப்படுத்துவதும் அதில் அடங்கும். 

கர்த்தருடைய தினத்தை நாம் கர்த்தருடைய நாளாகக் கருதும் போது, முக்கியமாக, “ஆண்டவரே, நான் உம்மை நேசிக்கிறேன்; கனப்படுத்த விரும்புகிறேன்; ஒருவேளை அதற்காக என்னையே வெறுக்க வேண்டிய சூழ்நிலை வந்தால், அப்படி செய்ய எனக்கு உதவும். வாரத்தின் முதல் நாளில் நான் செய்வது போல் வாரத்தின் மற்ற எல்லா நாட்களிலும் உம்மைக் கனப்படுத்த எனக்கு உதவும். நாம் தோல்வியுற்றால், ஆண்டவரே என்னை மன்னித்து, நான் மாற வேண்டிய பகுதிகளில் எனக்கு உதவும்” என்று ஜெபிக்கலாம். அது நம் இருதயத்தின் தொடர்ச்சியான அழுகையாக இருக்க வேண்டும். 

(மேலே உள்ள பட்டியலில் சேர்க்கக்கூடிய பிற காரியங்கள் உங்களிடம் இருந்தால், மற்றவர்கள் பயன்பெற தயங்காமல் அதை பகிர்ந்து கொள்ளுங்கள். ஒரு வகையில், கர்த்தருடைய நாளில் அவரை மகிமைப்படுத்துவதற்கான இந்த இலக்கைப் பின்தொடர்வதில் நாம் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும்.)

Category

Leave a Comment