ஜெபத்தின் 12 நன்மைகள்

(English Version: 12 Benefits of Prayer)
1. ஜெபம் தேவனுடைய வார்த்தையைப் புரிந்துகொள்ள ஊக்குவிக்கிறது.
சங்கீதம் 119:18 “உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு, என் கண்களைத் திறந்தருளும்”.
2. ஜெபம் பரிசுத்தத்தை ஊக்குவிக்கிறது.
மத்தேயு 26:41 “நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்; ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார்”.
3. ஜெபம் தாழ்மையை ஊக்குவிக்கிறது.
செப்பனியா 2:3 “தேசத்திலுள்ள எல்லாச் சிறுமையானவர்களே, கர்த்தருடைய நியாயத்தை நடப்பிக்கிறவர்களே, அவரைத் தேடுங்கள்; நீதியைத் தேடுங்கள், மனத்தாழ்மையைத் தேடுங்கள்; அப்பொழுது ஒருவேளை கர்த்தருடைய கோபத்தின் நாளிலே மறைக்கப்படுவீர்கள்”.
4. ஜெபம் சுவிசேஷ ஊழியம் செய்ய ஊக்குவிக்கிறது.
மத்தேயு 9:37-38 “தம்முடைய சீஷர்களை நோக்கி: அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்; ஆதலால், அறுப்புக்கு எஜமான் தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள் என்றார்.”
கொலோசெயர் 4:4 “திருவசனம் செல்லும்படியான வாசலை தேவன் திறந்தருளும்படி எங்களுக்காகவும் வேண்டிக்கொள்ளுங்கள்.”
5. ஜெபம் தூதுப்பணிகளை ஊக்குவிக்கிறது.
அப்போஸ்தலர் 13: 1-3 “அந்தியோகியா பட்டணத்திலுள்ள சபையஅவர்கள் கர்த்தருக்கு ஆராதனைசெய்து, உபவாசித்துக்கொண்டிருக்கிறபோது: பர்னபாவையும் சவுலையும் நான் அழைத்த ஊழியத்துக்காக அவர்களைப் பிரித்துவிடுங்கள் என்று பரிசுத்த ஆவியானவர் திருவுளம்பற்றினார்.அப்பொழுது உபவாசித்து ஜெபம்பண்ணி, அவர்கள்மேல் கைகளை வைத்து, அவர்களை அனுப்பினார்கள்”
6. ஜெபம் சுவிசேஷ பரவுவலையும் மக்களுடைய இரட்சிப்பிற்கு கிரியை செய்தலையும் ஊக்குவிக்கிறது.
2 தெசலோனிக்கேயர் 3 “கடைசியாக, சகோதரரே, உங்களிடத்தில் கர்த்தருடைய வசனம் பரம்பி மகிமைப்படுகிறதுபோல, எவ்விடத்திலும் பரம்பி மகிமைப்படும்படிக்கும்”.
7. ஜெபம் விடாமுயற்சியை ஊக்குவிக்கிறது.
2 கொரிந்தியர் 12:7-10 “என் மாம்சத்திலே ஒரு முள் கொடுக்கப்பட்டிருக்கிறது; என்னை நான் உயர்த்தாதபடிக்கு, அது என்னைக் குட்டும் சாத்தானுடைய தூதனாயிருக்கிறது. அது என்னைவிட்டு நீங்கும்படிக்கு, நான் மூன்றுதரம் கர்த்தரிடத்தில் வேண்டிக்கொண்டேன். அதற்கு அவர்: என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார். ஆகையால், கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மைபாராட்டுவேன். அந்தப்படி நான் பலவீனமாயிருக்கும்போதே பலமுள்ளவனாயிருக்கிறேன்”.
8. ஜெபம் தேவனையும், நம் வாழ்வில் அவருடைய நோக்கங்களையும் பற்றிய ஆழமான புரிந்துக்கொள்ளுதலை ஊக்குவிக்கிறது.
எபேசியர் 1:15-19 “ஆனபடியினாலே,… நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவனும் மகிமையின் பிதாவுமானவர் தம்மை நீங்கள் அறிந்துகொள்வதற்கான ஞானத்தையும் தெளிவையும் அளிக்கிற ஆவியை உங்களுக்குத் தந்தருளவேண்டுமென்றும் … அவரிடத்தில் நடப்பித்த தமது பலத்த சத்துவத்தின் வல்லமைப்படியே விசுவாசிக்கிறவர்களாகிய நம்மிடத்திலே காண்பிக்கும் தம்முடைய வல்லமையின் மகா மேன்மையான மகத்துவம் இன்னதென்றும், நீங்கள் அறியும்படிக்கு, அவர் உங்களுக்குப் பிரகாசமுள்ள மனக்கண்களைக் கொடுக்கவேண்டுமென்றும் வேண்டிக்கொள்ளுகிறேன்”
9. ஜெபம் கர்த்தராகிய இயேசு நம்மீது வைத்திருக்கும் அன்பைப் பற்றிய ஆழமான புரிதலை ஊக்குவிக்கிறது.
எபேசியர் 3: 14-19 “….. அன்பின் அகலமும், நீளமும், ஆழமும், உயரமும் இன்னதென்று உணர்ந்து அறிவுக்கெட்டாத அந்த அன்பை அறிந்துகொள்ள வல்லவர்களாகவும், தேவனுடைய சகல பரிபூரணத்தாலும் நிறையப்படவும், ……உங்களுக்கு அநுக்கிரகம்பண்ணவேண்டுமென்று வேண்டிக்கொள்ளுகிறேன்”.
10. ஜெபம் பிசாசின் தாக்குதல்களை எதிர்த்து நிற்க ஊக்குவிக்கிறது.
யாக்கோபு 4:7-8 “ஆகையால், தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான். தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார். பாவிகளே, உங்கள் கைகளைச் சுத்திகரியுங்கள்”.
11. ஜெபம் மன்னிப்பளிப்பதை ஊக்குவிக்கிறது.
மத்தேயு 6:12 “எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்”.
12. ஜெபம் நம்முடைய இருதயங்களில் சமாதானத்தை ஊக்குவிக்கிறது.
பிலிப்பியர் 4:6-7 “நீங்கள் ஒன்றுக்குங்கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்”.
இந்த பட்டியலில் ஒருவர் மேலும் பல நன்மைகளைச் சேர்க்கலாம். ஆனால் இவை தனிநபர்களாகவும், சபையாகவும் “இடைவிடாது ஜெபிக்க” நம்மை அசைப்பதற்கு போதுமானதாக இருக்கும். [1 தெச 5:17].