தேவனோடு உறவை எப்படி சரி செய்வது?

நீங்கள் 75 வயது வரை வாழ்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், உங்கள் வயதுவந்த வாழ்க்கை 15 வயதில் தொடங்கியது. நீங்கள் வயது வந்தவராக 60 ஆண்டுகள் வாழ்ந்திருப்பீர்கள். அந்த 60 வருடங்களில் நீங்கள் ஒரு நாளைக்கு 1 பாவம் செய்தீர்கள் என்று வைத்துக் கொள்வோம்; நீங்கள் செய்த மொத்த பாவங்களின் எண்ணிக்கை தோராயமாக 21,900 ஆக இருக்கும். ஒரு நாளைக்கு 5 பாவங்கள் செய்தால், மொத்தம் 109,500 ஆகும். ஒரு நாளைக்கு 10 பாவங்கள் செய்தால், மொத்தம் 219,000 ஆகிவிடும்!
பரிசுத்த வேதாகமம் பாவம் என்று எதையெல்லாம் கூறுகிறது என்று பாருங்கள், பொல்லாத சிந்தனையே பாவம் [மத்தேயு 5:28]. தவறான செயல்கள் மட்டும் பாவம் அல்ல [1 யோவான் 3:4]. சரியானதை செய்யாமலிருப்பதே பாவம் [யாக்கோபு 4:17]. எதையும் விசுவாசமில்லாமல் செய்வதும் பாவம் [ரோமர் 14:23]. இந்த அறிவின் வெளிச்சத்தில், ஒவ்வொரு மனிதனும் ஒரு நாளைக்கு செய்யும் மொத்த பாவங்களின் எண்ணிக்கை 10 ஐ விட அதிகமாக இருக்கும்! இன்று முதல் நீங்கள் பாவமற்ற வாழ்க்கை வாழ வேண்டும் என்றாலும் [இது சாத்தியமற்றது], நீங்கள் ஏற்கனவே செய்த பாவங்களுக்கு கணக்கு கொடுக்க வேண்டும்.
அப்படியானால், நீங்கள் எப்படி தேவனுடன் உறவில் சரியாக இருக்க முடியும்? கீழே விவரிக்கப்பட்டுள்ள உண்மைகளைப் புரிந்துகொண்டு கீழ்ப்படிவதன் மூலம் மட்டுமே தேவனுடன் உறவில் சரியாக இருக்க முடியும்.
தேவன் மனிதனை படைத்ததே அவரை கனப்படுத்தவும் அவரை ஆராதிக்கவுமே வெளி.4:11 இருப்பினும், இந்த பரிசுத்த தேவனுக்கு ஆராதனை செய்வதை விட அவருக்கு எதிராக பாவம் செய்வதை நாம் தெரிந்துதெடுத்தோம் ரோமர் 3:23. பாவம் என்பது நாம் செய்த கெட்ட காரியங்கள் மட்டுமல்ல, நாம் செய்யத் தவறிய நல்ல காரியங்களும் அடங்கும் 1 யோவான் 3:4, யாக். 4:17. உண்மையில், விசுவாசத்தினால் வராத எதையும் பாவம் என்றும் வேதம் சொல்கிறது! ரோமர் 14:23.
மேலும் பாவத்தின் தண்டனை மரணம், மரணத்திற்கு பின் நித்தியமான நரகம் மட்டுமே தண்டனையாகயிருக்கிறது ரோமர் 6:23. எவ்வளவு தான் நல்ல செயல்கள் செய்தாலும் நாம் செய்த பாவங்களை ஈடுசெய்ய முடியாது எபேசியர் 2:8-9. எனவே, தேவன் தம்முடைய அன்பினால், தம்முடைய குமாரனாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை பூமிக்கு நமக்கு பதிலாக அனுப்பினார் ரோமர் 5:8. அவர் நமக்காக ஒரு பரிபூரண வாழ்க்கையை வாழ்ந்து, நாம் செய்த பாவங்களுக்காக சிலுவையில் நமக்காக மரித்தார், மேலும் நம்முடைய பாவங்களுக்காக அவர் தனது பரிபூரண பலியை ஏற்றுக்கொண்டார் என்பதைக் காட்ட மூன்றாம் நாளில் கடவுள் அவரை எழுப்பினார் 1பேதுரு 3:18.
நம்முடைய பாவ வழிகளிலிருந்து மனந்திரும்பி, மன்னிப்புக்காக இயேசுவை விசுவாசிபதின் மூலம் மட்டுமே நாம் தேவனுடன் உறவை சரி செய்ய முடியும் அப்போஸ்தலர் 3:19, அப்போஸ்தலர் 16:31. மனந்திரும்புதல், விசுவாசம் , பாவ மன்னிப்பு பெற்று நாம் தேவனுடைய பிள்ளைகளாகிறோம் யோவான் 3:3. நீங்கள் இன்னும் தேவனுடனான உறவில் சரியாகவில்லை என்றால் இன்று தேவனிடமாய் உங்கள் இரட்சிப்புக்காக இருதயத்திலிருந்து கதறி அழுவீர்களா? ரோமர் 10:13