நாம் சோதனையில் இருக்கையில் தேவன் நம் மீது சிந்தைக்கொள்கிறாரா?

(English Version: Does God Care When We Are In Trouble?)
“எல்லாவற்றையும் தம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அன்பின் தேவன், இதுபோன்ற ஒரு விஷயம் எனக்கு நடக்க எப்படி அனுமதிப்பார்?” இப்படியாக குதிரையிலிருந்து விழுந்ததால் கை, காலில் பலத்த காயம் அடைந்த ஒரு இளம் பெண் அவளுடைய போதகரிடம் கேட்டாள். அவர் ஒரு கணம் அமைதி காத்து, பின்னர், “மருத்துவர்கள் உங்கள் சருமத்தின் மீதிருந்த காயங்களை அழுத்ததைக் கொடுக்கும்போது உங்களுக்கு மிகவும் வேதனையாக இருந்ததா?” என்று கேட்டார் அதற்கு அவள் “வலி பயங்கரமாக இருந்தது,” என்று பதிலளித்தாள்.
“அப்படி அந்த காயங்களை அழுத்த மருத்துவரை உங்கள் தந்தை அனுமதித்தாரா?” என்று அவர் மேலும் கேட்டார். அதற்கு அவள், “ஆம், அது அவசியமானது தான்” என்று பதிலளித்தாள். போதகர் தன்னுடைய கேள்விகளை தொடர்ந்தார், “தந்தை உங்களை நேசித்தப்படியால் தான் அந்த மருத்துவரை காயத்தின் மேல் அழுத்தம் தர அனுமதித்தார் அல்லவா?” என்று கேட்டார். ”தேவன் என்னை நேசிப்பதால், அவர் என்னை காயப்பட அனுமதித்தார் என்று நீங்கள் கூறுகிறீர்களா?” என்று அவள் அதிர்ச்சியாக வினவினாள்.
போதகர் தலையசைத்துக்கொண்டே இவ்வாறு பதிலளித்தார். “‘தற்போது நான் கூறிய கருத்து என்னுடையது. ஆனால் தேவனிடமிருந்து வந்த இந்த ஐந்து வார்த்தைகள் உங்களை ஆறுதல்படுத்தட்டும். சோகமான அல்லது விரும்பத்தகாத ஒவ்வொரு சூழ்நிலைக்குப் பின்னும், ஒரு நேர்மறையான மறுபக்கம் உள்ளது. உங்களுக்கு நேரிட்ட இந்த நிகழ்வு ஒரு எதிர்பாராத சோகம் அல்ல. இந்த சோதனையை தேவன் திட்டமிட்டார். நீங்கள் அவருடைய பிள்ளையாக இருந்தால், அவர் உங்களை சிறந்த சேவைக்கு ஆயத்தப்படுத்துவார். ”
ஷேக்ஸ்பியர் இவ்வாறு கூறினார், “நோய்வாய்ப்பட்ட நிலையில்,‘ நான் என் வலியிலிருந்து தேறி வருகிறேனா என்று எனக்குச் சொல்லத் தெரியவில்லை ஆனால் நான் சிறப்பான ஒரு வலியை பெற்றிருக்கிறேன்.” அதைபோன்றே, விசுவாசமுள்ள கிறிஸ்தவர்களாகிய நாமும், “நான் எப்போது இந்த சோதனையிலிருந்து வெளியேறுவேன்? ”என்று சொல்வதை விட. “இந்த சோதனையின் மூலம் நான் சிறப்பாக தேர்ச்சிப் பெறுகிறேனா?” என்று கேட்பதற்கு கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் இதில் கவலைப்படக் கூடிய விஷயம் என்னவென்றால், பல கிறிஸ்தவர்களின் பதில் இப்படியாக இருப்பதில்லை. அவர்களின் கேள்வி என்னவென்றால், “நான் சிக்கலில் இருக்கும்போது தேவன் என் மீது கவனம் செலுத்துகிறாரா அல்லது சிந்தைக்கொள்கிறாரா? என்பதாகும்.
இந்த கேள்விக்கு வேத கண்ணோட்டத்தில் பதிலளிக்க, மாற்கு 4: 35-41-ல் பதிவு செய்யப்பட்டுள்ள, காற்றையும் கடலையும் இயேசு அமைதிப்படுத்திய அறிமுகமான சம்பவத்தைப் பார்த்து, அதிலிருந்து சில உண்மைகளைக் கற்றுக்கொள்வோம்.
36 அன்று சாயங்காலத்தில், அவர் அவர்களை நோக்கி: அக்கரைக்குப் போவோம் வாருங்கள் என்றார். அவர்கள் ஜனங்களை அனுப்பிவிட்டு, அவர் படவிலிருந்தபடியே அவரைக் கொண்டுபோனார்கள். 36.வேறே படவுகளும் அவரோடேகூட இருந்தது. அப்பொழுது, பலத்த சுழல்காற்று உண்டாகி, படவு நிரம்பத்தக்கதாக, அலைகள் அதின்மேல் மோதிற்று. 37 .கப்பலின் பின்னணியத்தில் அவர் தலையணையை வைத்து நித்திரையாயிருந்தார். 38.அவர்கள் அவரை எழுப்பி: போதகரே, நாங்கள் மடிந்துபோகிறது உமக்குக் கவலையில்லையா என்றார்கள். 39.அவர் எழுந்து, காற்றை அதட்டி, கடலைப்பார்த்து: இரையாதே, அமைதலாயிரு என்றார். 40. அப்பொழுது காற்று நின்றுபோய், மிகுந்த அமைதலுண்டாயிற்று.அவர் அவர்களை நோக்கி: ஏன் இப்படிப் பயப்பட்டீர்கள்? ஏன் உங்களுக்கு விசுவாசம் இல்லாமற்போயிற்று என்றார். 41.அவர்கள் மிகவும் பயந்து: இவர் யாரோ? காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்று, ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.
கலிலேயாவில் ஒரு பரபரப்பான ஊழியத்தை முடித்துவிட்டு, அங்கிருந்து புறப்பட்டு, கலிலேயா கடலைக் கடந்து கெரசனேபகுதிக்குச் செல்லும்படி கர்த்தராகிய இயேசு தம்முடைய சீஷர்களுக்கு கட்டளையிட்டார் [35-36]. இருப்பினும், அவர்கள் தங்கள் பயணத்தின் போது கடுமையான புயலை எதிர்கொண்டனர் [37].
மிகுந்த பயத்தால் பீடிக்கப்பட்ட சீஷர்கள் நித்திரைக் கொண்டிருந்த இயேசுவிடம், நீர் எங்கள் மீது கவலைக்கொள்ளவில்லையா? என்று கேள்வி எழுப்பினார்கள் [38]. இயேசு எழுந்து, காற்றையும் கடலையும் அமைதிப்படுத்தினார், சீஷர்களின் விசுவாசமின்மையை கண்டித்தார் [39-40]. இயற்கையின் மீதான இயேசுவின் அசாதாரண வல்லமையைக் கண்டதும், சீடர்கள் மிகுந்த அச்சமடைந்தனர் [41].
இந்த சம்பவம் இயற்கை அசாதாரண சக்திகளின் மீது கிறிஸ்துவின் வல்லமையை வெளிப்படுத்துகிறது என்றாலும், ஒவ்வொரு விசுவாசியின் வாழ்க்கையில் வரும் சோதனைகளைப் பற்றியும் மற்றும் சோதனைகளின்போது அவர்கள் மீதான தேவனுடைய அக்கறையை பற்றியும் 4 உண்மைகளை இது கற்பிக்கிறது.
1. கிறிஸ்தவர்களுக்கு சோதனைகளிலிருந்து விலக்கு அளிக்கப்படவில்லை [வச. 35-37].
புயல் வருவதை இயேசு முன் கூட்டியே அறிந்திருந்தாரா? நிச்சயமாக, அவர் அறிந்திருந்தார்! மேலும் அவர் சீஷர்களை அந்த புயலின் மையப்பகுதிக்குள் கடக்கச் செய்தார்! அவர்களுக்கான அன்றைய பயிற்சி பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த புயலின் அனுபவம் இருந்தது. கீழ்ப்படியாமையால் மட்டுமே புயல்கள் வருவதாக பலர் நினைக்கிறார்கள், ஆனால் இது எப்போதும் அப்படி இருப்பதில்லை. ஆம், கீழ்ப்படியாமையால் யோனா புயலில் சிக்கினார். ஆனால் இங்கு நாம் பார்க்கும் சீஷர்கள் கர்த்தருக்குக் கீழ்ப்படிந்ததால் அந்த புயலில் சிக்கினார்கள்! அவர்கள் அனைவரும் இயேசுவைப் பின்பற்றுவதற்காக தங்கள் வீடுகளையும் வேலைகளையும் விட்டுவிட்டு, பல சோதனைகளை எதிர்கொண்டனர். நீதிமானாக இருந்தபோதிலும் சோதனைகளைச் சந்தித்த யோபுவை இது நமக்கு நினைவூட்டுகிறது [யோபு 1: 8; 2: 3].
கர்த்தருக்குக் கீழ்ப்படிவதும், அவருக்காக சேவை செய்வதும் சோதனைகளிலிருந்து தப்பிக்கும் உத்தரவாதத்தை நமக்கு அளிக்காது. கிறிஸ்தவர்களாகிய நம்மை கர்த்தர் சோதனைகளிலிருந்து எப்போதும் பாதுகாப்பதில்லை, ஆனால், சில சமயங்களில் அவற்றிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறார் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். சில நேரங்களில், அவர் புயலை அமைதிப்படுத்தலாம். மற்ற நேரங்களில், அவர் புயலை வீச செய்து, தமது பிள்ளைகளை அமைதிப்படுத்தக்கூடும். நாம் நினைவில் கொள்ள வேண்டியது என்னவென்றால், விளைவுகளைப் பொருட்படுத்தாமல்; “கிறிஸ்து இல்லாமல் கரையில் இருப்பதை விட, புயலின் நடுவே கிறிஸ்துவுடன் படகில் இருப்பது மிகச் சிறந்தது, பாதுகாப்பானது!”
2. சோதனைகளின்போது தேவன் நம்முடன் கூட இல்லாதிருப்பதுப்போன்று தோன்றலாம் [38].
சங்கீதக்காரன், “கர்த்தாவே, ஏன் தூரத்தில் நிற்கிறீர்? ஆபத்து நேரிடுகிற சமயங்களில் நீர் ஏன் மறைந்திருக்கிறீர்” [சங்கீதம் 10: 1] மற்றும் “ஆண்டவரே, விழித்துக்கொள்ளும்; ஏன் நித்திரைபண்ணுகிறீர்? எழுந்தருளும், எங்களை என்றைக்கும் தள்ளிவிடாதிரும்.” [சங்கீதம் 44:23] என்று கதறுகிறார்.
அதேபோல், சீஷர்களின் சோதனை நேரத்தின்போது இயேசு அலட்சியமாகவும் அக்கறையற்றவராகவும் இருப்பது போல காணப்பட்டது, “போதகரே, நாங்கள் மடிந்துபோகிறது உமக்குக் கவலையில்லையா? என கூறுவதற்கு வழிநடத்தியது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், “தேவனே, நீர் என்னை நேசிப்பது உண்மையானால், இந்த சோதனையின் ஊடாக செல்ல என்னை ஏன் அனுமதிக்கிறீர்? நீர் அதை பார்த்துக்கொண்டிருக்கிறீரா?” என்று கேட்க வைக்கிறது. அதற்கான சரியான பதில் இதுதான்: தேவன் எப்போதும் நம்மைக் கவனித்துக் கொண்டிருக்கிறார். அவர் ஒருபோதும் நம்மைத் தனியாக விட்டுவிடுவதில்லை, ஆனால் வாழ்க்கையின் இருள் சூழ்ந்த நேரங்களிலும் கூட நாம் அவரை விடாமுயற்சியுடன் விசுவாசிக்க வேண்டும் என்று விரும்புகிறார். ஏசாயா 50:10, “உங்களில் எவன் கர்த்தருக்குப் பயந்து, அவருடைய தாசனின் சொல்லைக் கேட்டு, தனக்கு வெளிச்சமில்லாததினால் இருட்டிலே நடக்கிறானோ, அவன் கர்த்தருடைய நாமத்தை நம்பி, தன் தேவனைச் சார்ந்துகொள்ளக்கடவன்” என்று நமக்கு நினைவூட்டுகிறது.
3. தேவனிடம் கிட்டிச் சேருவதற்கு சோதனைகள் நமக்கு உதவிச் செய்கின்றன [38].
அற்ப விசுவாசமாக இருந்தபோதிலும், புயலின் அனுபவம் சீஷர்களை கிறிஸ்துவுக்கு நெருக்கமாக ஈர்த்தது. அவர்கள் அவரை நோக்கிப்பார்த்த விதம் தவறாக இருந்தபோதிலும், இந்த புயலின் அனுபவத்தால் அவர்கள் அவரிடம் மேலும் கிட்டிச் சேர்ந்தனர். அவர்களுடைய விண்ணப்பங்களால் அவரை தொந்தரவு செய்ததற்காக கர்த்தர் அவர்களைக் கடிந்துக்கொள்ளவில்லை. மாறாக, அவர்கள் கலக்கத்துடனும் மற்றும் அச்சத்துடனும் இருந்தற்காக கண்டித்தார். ஆம், சோதனைகள் ஒரு நபரை தேவனிடமிருந்து விலகி இருக்கும்படி இருதயத்தை கடினப்படுத்தலாம். இருப்பினும், தேவனுடைய பிள்ளைகளைப் பொறுத்தவரை, சோதனைகள் எப்போதும் அவரிடம் கிட்டிச் சேர வைக்கின்றன. தேவனுடைய வார்த்தையை நேசிப்பதற்கு சோதனைகள் நமக்கு உதவுகின்றன, மேலும் அவருடன் ஜெபத்தில் அதிக நேரம் செலவிட ஊக்குவிக்கின்றன.
4. சோதனைகள் தேவனுடைய பண்புகளைப் பற்றிய நமது புரிதலை அதிகரிக்கின்றன [39–41].
இந்த அனுபவத்தின் மூலம், சீஷர்கள் தேவனுடைய அன்பையும், எல்லாவற்றிற்கும் மேலான வல்லமையைப் பற்றியும் அதிகமாக புரிந்துக்கொண்டார்கள். நாமும் கூட, வாழ்க்கையின் சோதனைகள் மூலம் இத்தகைய புரிதலில் வளர முடியும். இந்த விலைமதிப்பற்ற சத்தியங்கள் அனைத்தும் தேவன் எல்லா காலங்களிலும் தம் பிள்ளைகளை கவனித்துக்கொள்கிறார், அவர்கள் மீது சிந்தை கொள்கிறார் என்பதை வெளிப்படுத்துகிறது.
இப்படி ஒவ்வொரு விசுவாசியின் வாழ்க்கையிலும் சோதனைகள் மற்றும் சோதனைகளின் சமயத்தில் தேவனுடைய கவனிப்பு பற்றிய 4 சத்தியங்களின் குறிப்புகளை நாம் கவனித்துக்கொண்டிருக்கிறோம். விசுவாச கிறிஸ்தவராக மாறுவது ஒரு பிரச்சனையற்ற வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்காது. ஒரு எழுத்தாளர் இப்படியாக கூறுகிறார்:
“சாத்தான் நாம் அறிந்துக்கொள்ள வேண்டிய முக்கியமான செய்தியிலிருந்து மிகவும் நுட்பமாகநம்மை திசை திருப்பிவிட்டான், தேவனுடைய பிரதான நோக்கமாகிய பாவிகளை கிறிஸ்துவில் நீதிமான்களாக்கி, எதிர்வரும் கோபாக்கினையிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியும் என்ற நற்செய்தியை அறிவிப்பதற்கு பதிலாக, உலக வாழ்க்கையிலன் இடையுறு நம்மை விடுவித்து, அதன் மூலமாக வரும் பிரச்சனைகளுக்கான தீர்விலிருந்து வரும் மகழ்ச்சியை தேடும்படி நம்மை பழக்கப்படுத்தியிருக்கிறான். கிறிஸ்துவில் நம்முடைய எல்லா பிரச்சனைகளுக்கு தீர்வு தருகின்ற ”அற்புதமாக திட்டத்தை” வெளிப்படுத்தி, கிறிஸ்துவில் நம்மை மகிழ்வித்து, இந்த உலக வாழ்க்கையின் இடையூறுகளிலிருந்து நம்மை மீட்பது என்ற”சுவிசேஷத்திற்கு” நம்மை பக்குவப்படுத்தி விட்டான். கிறிஸ்துவில் இப்படிப்பட்ட மகிழ்ச்சியைத் தேடுபவர்கள் வழியாக விசுவாசத்திற்கு வருபவர்கள் தங்கள் பெறுகின்ற மகிழ்ச்சியே தேவனுடைய அன்பின் சான்று என்று தவறாக நினைப்பார்கள். சோதனைகள் மத்தியில் அவர்கள் மகிழ்ச்சி அவர்கைளை விட்டு அகலும்போது தேவன் தங்களை கைவிட்டுவிட்டார் என்று நினைத்துக்கொள்வார்கள். ஆனால், தேவனுடைய அன்பின் அடையாளமாக சிலுவையை நோக்குபவர்கள் அவர் மீது வைத்திருக்கும் தங்கள் அர்ப்பணிப்பை ஒருபோதும் சந்தேகிக்க மாட்டார்கள்.”
வாழ்க்கையின் புயல் போன்ற சோதனையின் சமயத்திலும் கூட தேவன் நம்முடைய இருதயத்தின் முழு நம்பிக்கைக்கு தகுதியானவர் என்று அவருடைய பிள்ளைகள் விசுவாசிக்க வேண்டும். நரகத்திலிருந்தும் சாத்தானிடமிருந்தும் நம்மை விடுவிப்பதற்கு கிறிஸ்துவை விசுவாசித்தோமானால், நம்முடைய அன்றாட பிரச்சினைகளுக்கு அவரை விசுவாசிப்பது கடினமாக இருக்க போவதில்லை. விசுவாசம் பயத்தை வெளியே விரட்டுகிறது, பயம் விசுவாசத்தை வெளியே துரத்துகிறது.
நம்முடைய விடாமுயற்சியின்மைக்காக நாம் மனந்திரும்பி, “என் நம்பிக்கையின்மையைக் கடக்க எனக்கு உதவுங்கள்!” என்று நாம் அவரிடம் கூக்குரலிட வேண்டும். “விசுவாசிக்கிறேன் ஆண்டவரே, என் அவிசுவாசம் நீங்கும்படி உதவிசெய்யும்” [மாற்கு 9:24] என்று நாம் கண்ணீரோடு கூப்பிடும்போது, நல்ல ஆண்டவர், அவருடைய பரிசுத்த ஆவியானவாின் மூலம் வாழ்க்கையின் இருள் சூழ்ந்த நேரங்களில் கூட, இந்த பின்வரும் வார்த்தைகளின் உண்மையை அனுபவிக்க நமக்கு உதவுவார், “உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்” [ஏசாயா 26: 3].
நினைவில் கொள்வோம்: கீழ்ப்படிதலின் காரணமாக வரும் சோதனைகள் எப்போதுமே கிறிஸ்து நம்முள் வாசமாக இருப்பதை உறுதி செய்கின்றன! நம்மில் வாசமாக இருக்கும்போது, புயலைப் பார்த்து நாம், “ஆம், என் கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்து நான் கஷ்டத்தில் இருக்கும்போதும் என்னைக் கவனித்துக்கொள்கிறார்!” என்று நம்பிக்கையுடன் சொல்லலாம்.