பணித்தலத்தில் கிறிஸ்தவர்களின் பங்கு

(English Version: The Christian’s Role In The Workplace)
அமெரிக்காவில் “TGIF” என்று அழைக்கப்படுகிற ஒரு புகழ்பெற்ற உணவகம் இருக்கிறது. ஒரு சராசரி நபர் எவ்வாறு தன் வேலையை செய்கிறார் என்பதை இந்தப் பெயர் பொருத்தமாகப் படம் பிடித்துக்காட்டுகிறது – அது ஒரு வெள்ளிக்கிழமையாக இருந்தப்படியால் ஆண்டவருக்கு நன்றி செலுத்த வேண்டும். ஏனென்றால் அன்று தான் வாரத்தின் வேலை நாட்கள் முடிந்தது, எனவே மகிழ்ச்சி அடைகிறேன்! இருப்பினும், ஒரு விசுவாசி தங்கள் வேலையைப் பார்க்கும் விதம் எவ்வாறு இருக்க வேண்டும்? அதை தீமையாக பார்க்க வேண்டுமா? அல்லது நம்முடைய பணித்தலத்தில் தேவனை மகிமைப்படுத்துகிற அவருடைய வரமாக பார்க்க வேண்டுமா? இந்த கட்டுரையானது வாசகர்களுக்கு வேலையை குறித்த 5 வேதாகம சத்தியங்களை கொடுத்து, தங்கள் பணித்தலத்தில் தேவனை மகிமைப்படுத்துவதை நிறைவேற்றுவதற்கு உதவுகிறது.
சத்தியம் # 1 பாவம் உலகத்தில் பிரவேசிப்பதற்கு முன்னே வேலை இருந்தது
வேலையானது பாவத்தின் விளைவு என்று பல பேர் தவறாக யோசிக்கின்றனர். பாவம் உலகத்திற்குள் பிரவேசிப்பதற்கு முன்பே தேவன் ஆதாமை ஏதேன் தோட்டத்தை “பண்படுத்தவும் காக்கவும் வைத்தார்” [ஆதியாகமம் 2:15]. எப்படியாயினும், பாவத்தின் காரணமாக வேலையானது கடினமானதாக மாறிப்போனது, “பூமி உன் நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும்; நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் வருத்தத்தோடே அதின் பலனைப் புசிப்பாய்” [ஆதியாகமம் 3:17]. ஒரு பூரணமான உலகில் [அதாவது, மனித இனத்தின் வீழ்ச்சிக்கு முன்], வேலையானது மனிதனுடைய வாழ்வில் ஒரு பகுதியாக இருந்தப்படியால், எதிர் வரும் புதிய உலகிலும் வேலையானது நிலைத்திருக்கும், அது சாபமாக பார்க்கப்படாமல் ஆசீர்வாதமாக பார்க்கப்படும்!
சத்தியம் # 2 வேலை தேவனிடமிருந்து வந்த கட்டளை
1 தெசலோனிக்கேயர் 4:11 ல் “உங்கள் சொந்தக் கைகளினாலே வேலைசெய்யவும் வேண்டுமென்று” நாம் கட்டளைப் பெற்றிருக்கிறோம். அந்தக் கால கிரேக்கப் பண்பாடு, உடல் உழைப்பைக் குறைத்து மதிப்பிட்டது. இருப்பினும், வேதாகமக் கோட்பாடுகளின்படி ஒரு வேலையானது செய்யப்படுமானால் அனைத்து உழைப்பும் கண்ணியமானதாக வேதம் அறிவிக்கிறது. ஒரு கணம் சிந்தியுங்கள். வேலை ஒரு சாபமாக இருந்தால், தேவன் எதற்கு தமது பிள்ளைகளை வேலை செய்யும்படிக்கு, அதுவும் அவர்களின் சொந்த கைகளால் வேலை செய்யும்படி ஏன் கட்டளையிடுகிறார்? இல்லை, நம்மை கட்டுப்படுத்தும் தீமையை செய்யும்படிக்கு தேவன் நமக்குக் கட்டளையிட மாட்டார். ஒருவேளை தேவனுடைய கட்டளைகள் நமது இயல்பான ஆசைகளுக்கு முரணாகத் தோன்றினாலும், தேவனுடைய பிள்ளைகளாகிய நாம், அவருடைய ஒவ்வொரு கட்டளையையும் கவனமாக கைக்கொள்ள வேண்டும்.
சத்தியம் # 3 வேலை என்பது மற்றவர்களின் பொது நலனுக்கானது
வேலையானது, தனிப்பட்ட மற்றும் குடும்பத் தேவைகளை நிறைவேற்றுவது மட்டுமல்லாமல், “உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக” [மத் 22:39] என்ற இரண்டாவது கட்டளையை நிறைவேற்றுவதற்கான ஒரு வழியாக இருக்கிறது. பல தேவதாகம கட்டளைகள் குறைச்சலுள்ளர்களுக்கு உதவுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றன. அப்போஸ்தலர் 20:35 “கடின உழைப்பால்”, “பலவீனமானவர்களை தாங்க வேண்டும்” என்று நமக்கு சொல்கிறது. எபேசியர் 4:28 இல், “நாம் குறைச்சலுள்ளவனுக்குக் கொடுக்கத்தக்கதாகத் தனக்கு உண்டாயிருக்கும்படி, தன் கைகளினால் நலமான வேலைசெய்ய” கட்டளையிடப்பட்டுள்ளோம். நீதிமொழிகள் 14:31 இல், “தரித்திரனுக்குத் தயைசெய்கிறவனோ அவரைக் கனம்பண்ணுகிறான்” என்று நமக்குக் கூறப்பட்டிருக்கிறது. ஐசுவரியவான்களுக்கு கூட, தேவன் இந்த கட்டளையை வெளியிடுகிறார், “நற்கிரியைகளில் ஐசுவரியவான்களாகவும், தாராளமாய்க் கொடுக்கிறவர்களும், இருக்கும்படி ஆயத்தமாக இருங்கள்” [1 தீமோத்தேயு 6:18].
குறைச்சலுள்ளவர்களில், குடும்பத்தார், நண்பர்கள் மற்றும் அந்நியர்களும் அடங்குவர். நாம் புத்திசாலித்தனமான உக்கிராணத்துவத்தைப் பயன்படுத்தும்போது, மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக இருக்க தேவன் நம்மை ஆசீர்வதிக்கிறார் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். இந்த நல்ல வழியில் பொது நலனுக்காக வேலை செய்வது பற்றிய இந்த சத்தியத்தை டி.எல். மூடி சுருக்கமாக இவ்வாறு கூறினார்:
“உங்களால் முடிந்த அனைத்து நன்மைகளை, எல்லா வழிகளிலும், எல்லா இடங்களிலும், எல்லா நேரங்களிலும், , எவ்வளவு முடிகிறதோ அவ்வளவு அதிகமாய் செய்யுங்கள்.”
மேலும், “உங்கள் பிறரை நேசியுங்கள்” என்ற கட்டளை நாம் எங்கு வேலைக்குச் செல்கிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும் என்பதை நினைவூட்டுகிறது. பல தனிப்பட்ட உயிர்கள் மற்றும் குடும்பங்களின் அழிவுக்கு வழிவகுக்கும் பொருட்கள் அல்லது சேவைகளை வழங்கும் இடங்களை பிறரை நேசிக்கும் பணித்தலங்கள் என்று சட்டப்பூர்வமாக அழைக்க முடியாது. ஒரு விசுவாசி அத்தகைய இடங்களில் வேலைக்கு அமர்வது ஏற்புடையதல்ல.
இப்படிப்பட்ட பணிதலங்களில் பங்கேற்காத நிலைபா் பாவம் வெளிப்படையாக செய்யப்படும் எல்லா இடங்களுக்கும் நீட்டிக்கப்பட வேண்டும் [உதாரணமாக, வாடிக்கையார்களிடம் பொய் சொல்வது]. பொருளாதார ஆதாயங்கள் வியக்கத்தக்கதாக தோன்றினாலும், விசுவாசிகள் தேவனுடைய வார்த்தையை மீறத் தூண்டப்படும் ஒரு பணித்தலத்தில் தங்களை அமர்த்திக்கொள்ளக்கூடாது.
சத்தியம் # 4 கர்த்தர் தான் உண்மையான முதலாளி என்ற நினைவோடு வேலைகள் செய்யப்பட வேண்டும்.
“ஓரு காரியத்தை இல்லை,” என்று நீங்கள் சொல்கிறீர்கள்! “ஓ -ஆம்,” என்கிறது தேவனுடைய வார்த்தை! எபேசியர் 6: 5-8 இந்த சத்தியத்தை தெளிவுபடுத்துகிறது [மேலும் கொலோசியர் 3: 22-25 ஐயும் பார்க்கவும்]. எபேசியர் 6: 5 இல், “வேலைக்காரரே, நீங்கள் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிகிறதுபோல, சரீரத்தின்படி உங்கள் எஜமான்களாயிருக்கிறவர்களுக்கும் பயத்தோடும் நடுக்கத்தோடும் கபடற்ற மனதோடும் கீழ்ப்படியுங்கள்” என்று நமக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது. கவனிக்கவும், நாம் “கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிவதுப் போல” நம்முடைய எஜமானர்களுக்கு கீழ்படிய வேண்டும்.
ஒரு விசுவாசிகளின் பணி நெறிமுறையானது அவர்கள் தங்கள் முதலாளியைப் பார்க்கும்போது மட்டும் அவர்களை மகிழ்விப்பதை அடிப்படையாகக் கொண்டிருக்கக்கூடாது, “மனுஷருக்குப் பிரியமாயிருக்க விரும்புகிறவர்களாகப் பார்வைக்கு ஊழியஞ்செய்யாமல்” [எபேசியர் 6: 6]. மாறாக, கர்த்தர் எப்பொழுதும் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பதை விசுவாசிகள் நினைவில் கொள்ள வேண்டும், கடைசியாக பார்ப்போமென்றால் விசுவாசிகள் அவருக்காகவே தங்கள் சேவையை செய்கிறார்கள். அவர்கள் எப்போதும் தங்கள் முதலாளிக்கு அடிபணிந்து ஒரு நல்ல வேலையைச் செய்வது “தேவனுடைய சித்தமாகும்” [எபேசியர் 6: 6].
பவுல் இவ்வாறு தொடர்ந்து கூறுகிறார், “அடிமையானவனானாலும், சுயாதீனமுள்ளவனானாலும், அவனவன் செய்கிற நன்மையின்படியே கர்த்தரிடத்தில் பலனை அடைவானென்று அறிந்து, மனுஷருக்கென்று ஊழியஞ்செய்யாமல், கர்த்தருக்கென்றே நல்மனதோடே ஊழியஞ்செய்யுங்கள்”. (எபே. 6:7 -8]. அதனால்தான் விசுவாசிகள் தங்கள் பணி நெறிமுறையை முதலாளிகள் தங்கள் வேலையை அங்கீகரிப்பதின் அடிப்படையில் வைத்துக்கொள்ளக்கூடாது.
அவர்களுடைய வேலையானது “பாராட்டப்படாமல், போனஸ் அல்லது ஊதிய உயர்வு தரப்படாமல் மற்றும் நன்றாக செய்தீர்கள்” என்ற வார்த்தைகள் கூறப்படாமல் போகும்போது, நான் ஏன் கவலைப்படவேண்டும்? என்று பலர் எரிச்சலடைந்து தங்கள் உழைப்பு கவனிக்கப்படாதால் கடினமாக வேலைச் செய்ய மறுக்கிறார்கள். இப்படிப்பட்ட மனப்பான்மையானது பலரிடம் காணப்படுகிறது. தேவன் உண்மையான எஜமானாராக இருக்கும்பட்சத்தில், அவர் விசுவாசிகளுக்கு ஒருநாள் பலனளிப்பார்! இப்படித்தான் அவர் வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிறார், நம்முடைய சேவைக்கு வெறும் மனித அங்கீகாரம் மட்டுமல்லாமல், தேவனுடைய வாக்குத்தத்தங்கள் அதற்கு ஊக்கமளிக்கும் காரணியாக இருக்க வேண்டும் – நமது முதலாளிகளையோ அல்லது மற்றவர்களையோ நம் நடத்தையில் ஆதிக்கம் செலுத்த அனுமதிக்க முடியாது!
கர்த்தரே நமது உண்மையான எஜமானார் போல் நாம் எப்போதும் வேலை செய்ய வேண்டும். கர்த்தரிடம் காட்டும் கீழ்படியும் மனப்பான்மையையே நாம் காட்ட வேண்டும். இது ஒரு மனத்தாழ்மையின் ஆவியை காட்டுவதற்கான அழைப்பை விடுக்கிறது. இதற்கு விதிவிலக்காக, நிச்சயமாக, வேதத்தை மீறும் ஒன்றைச் செய்ய நம் முதலாளி சொன்னால், நம் அந்த மனித முதலாளிக்குக் கீழ்ப்படிய நமக்கு எந்தக் கடமையும் இல்லை. இதுபோன்ற சமயங்களில், நாம் தேவனுக்குத் தான் கீழ்ப்படிய வேண்டும் – “மனுஷருக்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும் தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியமாயிருக்கிறது!” [அப்போஸ்தலர் 5:29].
நமக்கு ஒரு கிறிஸ்தவ முதலாளி இருந்தால், 1 தீமோத்தேயு 6:2 ல் கூறப்பட்டுள்ள உபதேசங்கள் பொருந்தும் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். “விசுவாசிகளாகிய எஜமான்களை உடையவர்கள், தங்கள் எஜமான்கள் சகோதரராயிருக்கிறதினாலே அவர்களை அசட்டைபண்ணாமல், நல்வேலையின் பலனைப் பெற்றுக்கொள்ள அவர்கள் விசுவாசிகளும் பிரியருமாயிருக்கிறபடியால், அவர்களுக்கு அதிகமாய் ஊழியஞ்செய்யக்கடவர்கள்.”
விசுவாசிகள் நல்ல பணியாளர்களாக இருப்பதோடு மட்டுமல்லாமல், நல்ல முதலாளிகளாகவும் இருக்க வேண்டும். எபேசியர் 6:9 இவ்வாறு கூறுவதை கவனியுங்கள், “எஜமான்களே, அப்படியே நீங்களும், வேலைக்காரருக்குச் செய்யவேண்டியவைகளைச் செய்து, அவர்களுக்கும் உங்களுக்கும் எஜமானானவர் பரலோகத்தில் இருக்கிறாரென்றும், அவரிடத்தில் பட்சபாதம் இல்லையென்றும் அறிந்து, கடுஞ்சொல்லை விட்டுவிடுங்கள்.”
கிறிஸ்துவ பணியாளர்கள் தங்கள் எஜமானர்களுக்கு கிறிஸ்துவை கனப்படுத்துவதைப் போன்ற விதத்தில் சேவை செய்வதால், கிறிஸ்தவ முதலாளிகளும் தங்கள் ஊழியர்களை அவ்வண்ணமாகவே நடத்த வேண்டும். அவர்களை அச்சுறுத்தவோ அல்லது அவர்களை சாதகமாக பயன்படுத்திக்கொள்ளவோ கூடாது. கர்த்தர் பட்சப்பாதத்தை காட்டாததால அவர்களை பாகுபாடோடு நடத்தக்கூடாது.
கர்த்தர் தாமே உண்மையான எஜமானர் என்பதை விசுவாசிகள் உணரும் போது நாம் சம்பளத்திற்காக மட்டும் வேலை செய்யவில்லை, நம் வாழ்வின் முன்னேற்றத்திற்காகவே வேலை செய்கிறோம். அப்படி செய்யும் பட்சத்தில் வேலையை ஒரு சுமையாக பார்க்க மாட்டோம், மாறாக தேவனை மகிமைப்படுத்தும் ஒரு ஆசீர்வாதமானவழிமுறையாக பார்ப்போம்.
சத்தியம் # 5 வேலையானது இறுதி முடிவில் தேவனுடைய மகிமைக்கான வழியாக இருக்கிறது.
1 கொரிந்தியர் 10:31 “தேவனுடைய மகிமைக்காக” எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என்று தெளிவாகக் கூறுகிறது. இந்த வசனத்தைப் புரிந்துகொள்ளும்போது, வேலையை தேவனை மகிமைப்படுத்துவதற்கான வழிமுறையாக பார்க்க விசுவாசிகளுக்கு மிகவும் உதவிகரமானதாக இருக்கும். இந்த முன்னோக்கு இல்லாதபோது, வேலை விரைவில் எஜமானராக மாறி, வேலைக்காரன் அடிமையாக மாறிவிடுவதற்கு வாய்ப்புகளுண்டு. மேலும் பணக்காரனாக மாற ஆசைப்படுதானது, கார்ப்பரேட் ஏணியில் ஏற விரும்புவதும், உலகப்பிரகாரமான சிறப்பானதை தொடர்வது போன்ற பிற பிரச்சனைகளுக்கு இது வழிவகுக்கும்.
மேலும் இது ஒருவருடைய ஆவிக்குரிய மற்றும் குடும்ப வாழ்க்கையையும் பாதிக்கும் (உதாரணமாக தனிப்பட்ட தியானத்திற்கும், குடும்பத்தோடு நேரத்தை செலவிடுவதற்கும் , சபை கூட்டங்களுக்கு செல்வதற்கும் நேரமில்லாமல், சமரசம் செய்யும் மனப்பான்மை அல்லது வெற்றி பெறுவதற்கு குறுக்கு வழிகளை தேட நேரிடும்]. ஆகவே தான் நீதிமொழிகள் 23:4 “”ஐசுவரியவானாகவேண்டுமென்று பிரயாசப்படாதே; சுயபுத்தியைச் சாராதே.” என்ற எச்சரிக்கையை விடுக்கிறது.
தெளிவாகச் சொல்வதென்றால், வேலையிலேயே மூழ்கி விட வேண்டாம்! ஒரு விசுவாசியின் அடையாளமானது வேலைக்காரர்களாக அல்லது எஜமான்களாக எவ்வளவு வெற்றிகரமாக செயல்படுகிறார்கள் என்பதிலிருந்து வருவதில்லை. மாறாக, ஒரு விசுவாசியின் அடையாளமானது – கிருபையால் இரட்சிக்கப்பட்ட ஒரு பாவியின் அடையாளமானது அவர்கள் கிறிஸ்துவில் நிலைத்திருப்பதிலிருந்து வருகிறது -.தேவன் ஏற்கனவே அவர்களை ஏற்றுக்கொண்டார், இறுதியில், இது மட்டுமே முக்கியத்துவம் பெறுகிறது!
ஆகவே வேலையை குறித்த 5 சத்தியங்களை நாம் பார்த்தோம். இவற்றுடன் சேர்த்து வேலை தொடர்பான மற்ற மூன்று பொதுவான கோட்பாடுகளை கவனத்தில் கொள்ளவும்.
கடினமான சூழலில் வேலைச் செய்வது. நாம் மன அழுத்தம் நிறைந்த சூழலில் வேலை செய்யும்போது நாம் சோர்வடையக்கூடாது. ஏனெனில் வாழ்க்கையின் அனைத்து விவகாரங்களிலும் தேவன் சர்வ வல்லமை கொண்டவராக இருக்கிறார். 1 பேதுரு 2: 18-21 நியாயமற்ற முதலாளிகளின் கீழ் நாம் பொறுத்துக் கொள்ள வேண்டிய சமய சூழ்நிலையும் வரலாம் என்பதை இவ்வசனம் நமக்கு நினைவூட்டுகிறது. தேவன் நம்மை ஒரு காரணத்திற்காக அங்கே வைத்திருக்கலாம் – ஒருவேளை நம்மைச் சுற்றியுள்ள மக்களை மாற்றுவதற்காகவோ அல்லது பெலனுக்காக நாம் அவரை இன்னும் அதிகமாக சார்ந்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருப்பதற்கோ, இதுபோன்ற கடினமான சூழ்நிலைகளுக்கு நம்மை மாற்றியிருக்கலாம்.
பணிகளை மாற்றுதல்.
வேறு வேலைகளை தேடுவதில் எந்த பாவமும் கிடையாது [1 கொரிந்தியர் 7:21 7]. இருப்பினும், வேலைகளை மாற்றும் போது இந்த அம்சத்தை ஜெபத்தோடும் சிந்தனையோடும் அணுகுவது நல்லது. நம்மை நாமே சில கடினமான கேள்விகளைக் கேட்க தயங்கக் கூடாது:
- நான் ஏன் வேலையை மாற்ற வேண்டும்?
- என்னுடைய எஜமானருக்கு கீழ்படியாமை என்ற பெருமையின் காரணமாக என் வேலையை மாற்றுகிறேனா?
- அதிகமான பணத்திற்காகவும், அதிகமான சௌகரியங்களுக்காகவும் மட்டுமே என் வேலையை மாற்றுகிறேனா?
- என்னுடைய தனிப்பட்ட தொழிலின் முன்னேற்றத்திற்காக மட்டுமா?
- எனது தனிப்பட்ட மற்றும் குடும்பத்தின் ஆவிக்குரிய வளர்ச்சியை பாதிக்குமா?
- கர்த்தருக்கான என்னுடைய சேவையையும், ஸ்தல சபையுடனான என்னுடைய ஈடுபாட்டையும் பாதிக்குமா?
- இது என்னுடைய நேரத்திலும், குடும்பத்திலும் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தும்?
நம்முடைய உள்நோக்கங்களை ஜெபத்துடனும், நேர்மைடனும் கேள்விகளை கேட்பது வேலைகளை மாற்றுவதைக் குறித்து சரியான தேர்வுகளை எடுக்க உதவுகிறது. வேலை மாற்றதிற்கான என்னுடைய விருப்பாமானது தேவனை மகிமைப்படுத்துகிறதா? என்ற பெரும் சித்திரத்தை நம் மனதில் எப்போதும் வைத்துக்கொள்ள வேண்டும். நாம் தேவனை முதன்மைப்படுத்தி பின்னர் இக்கேள்விகளை கேட்கும்போது, இதற்கான பதில்கள் விரைவாக நம்மை பின்தொடரும். உலகத்திற்குரிய விருத்திக்காக நாடுவது குறிப்பிடத்தக்க ஆவிக்குரிய பேரழிவுகளுக்கு வழிவகுக்கும் என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது.
தவிர, நம் எஜமான்களைப் பற்றி தவறாக பேசுவது அல்லது முணுமுணுப்பது மற்றும் நம் வேலையைப் பற்றி புகார் செய்வது ஆகியவை கிறிஸ்துவைப் போன்ற ஒரு நடைமுறையோ அல்லது தேவனைப் போற்றும் நடைமுறையோ அல்ல என்பதை நினைவில் கொள்வது நல்லது. ஒரு வேலையைக் உடையவர்களாயிருப்பதற்கு நாம் நன்றியுள்ள இருதயத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை மறந்துவிடக் கூடாது! – பலர் வேலையில்லாமல் இருக்கிறார்கள்! நாம் ஒரு வேலையை இன்னொரு வேலைக்காக விட்டுச் சென்றாலும், முந்தைய நிறுவனத்தைப் பற்றி தொடர்ந்து எதிர்மறையாகப் பேசுவது நல்லதல்ல. கடந்த காலத்தை பின்னால் வைத்து முன்னேறுவது நல்லது.
தயவுசெய்து கவனிக்கவும்: ஒருவர் வேலையில் எதிர்கொள்ளும் கடினமான சூழ்நிலையை வெளிப்படுத்துவதும், மற்றவர்களை ஜெபிக்கச் சொல்வதும் பாவமல்ல, அல்லது பணியிடத்தில் நடக்கும் உண்மையான கொடுமைகளைப் பற்றி பேசுவதும் பாவமல்ல. நம்மை நன்றாக நடத்தாதவர்களிடம் நாம் கசப்பை வளர்த்துக் கொள்வதே பாவமாக கருதப்படும். பணியிடத்திலுள்ள அம்சங்களைப் பற்றிய தொடர்ச்சியான எதிர்மறை பிரதிபலிப்பு நம்மை இத்தகைய பாவ மனப்பான்மைக்கு இட்டுச் செல்லும். எனவே, நாம் கவனமாக இருக்க வேண்டும்!
பணியிடத்தில் சுவிசேஷம். கிறிஸ்துவோடு இரட்சிப்பின் உறவு இல்லாத, பணித்தலத்தில் இருப்பவர்கள் உட்பட அனைவருக்கும் சுவிசேஷத்தை அறிவிக்கும்படிக்கு வேதாகமம் கட்டளையிடுகையில், அதற்கு ஞானம் தேவைப்படுகிறது. விசுவாசி ஒரு வேலையைச் செய்ய ஊதியம் பெறுகையில், சுவிசேஷம் அறிவிப்பது அவருடைய வேலையின் செயல்பாடுகளில் குறுக்கிடக்கூடாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், வேலை நேரத்தில் சுவிசேஷம் செய்வதை நாம் தவிர்க்க வேண்டும், அது நம் கடமைகளை புறக்கணிக்க வழிவகுக்கும். இத்தகைய அணுகுமுறை இயேசு கிறிஸ்துவை உயர்த்தாது மாறாக, அது கிறிஸ்தவ விசுவாசத்தை சேதப்படுத்தும் சாட்சியத்தைக் கொண்டுவரும். மதிய உணவு இடைவேளை அல்லது வேலை முடிந்தப் பிறகு சுவிசேஷத்தை அறிப்பதைக் கருத்தில் கொள்ளுதல் சாத்தியமானது. சுவிசேஷ செய்தியை அறிவிப்பதுடன், உண்மையுள்ள வேலைக்காராக அல்லது எஜமானாக இருப்பது கிறிஸ்துவை உயர்த்தும் ஒரு சக்திவாய்ந்த வழியாகும் என்பதை நினைவில் கொள்வதும் நல்லது.
இறுதி சிந்தனைகள்
நாம் ஒருபோதும் மறக்க கூடாதவை: ஆண்டவராகிய இயேசு நமக்கு பதிலாக ஒரு பரிபூரண வாழ்க்கையை வாழ்ந்து, நமது பாவங்களுக்கு பதிலாக மரிப்பதற்கு சிலுவையைச் சுமந்தப்போது அவர் ஒரு மிக முக்கியமான வேலையை செய்தார். “எல்லாம் முடிந்தது” [யோவான் 19:30] என்ற அவருடைய ஜெய கோஷமானது, நம்முடைய பாவங்களுக்காக அவர் செலுத்திய விலைக்கிரயம் போதுமானது என்பதை வெளிப்படுத்துகிறது – அவருடைய உயிர்த்தெழுதல் அவர் செய்த பணிக்கு தேவன் கூறும் “ஆமென்” ஆக இருக்கிறது. எனவே, நாம் அவரிடம் இளைப்பாற கூடும், வேலையை பற்றிய வேதாகம கோட்பாடுகளின்படி வாழ, அவருடைய கட்டளைகளை நிறைவேற்ற அவருடைய ஆவியின் பெலனைப் பெற கூடும்.
பல மதங்களின் கோட்பாடுகளை கொண்ட உலகில் கூட தேவன் மகிமைப்படுத்தப்படுகிறார். ஒருவர் “சபை” ஊழியத்தில் முழுநேர வேலை செய்தால் மட்டுமே தேவன் மகிமைப்படுத்தப்படுகிறார் என்று நாம் தவறாக முடிவு செய்ய வேண்டாம். ஒவ்வொரு விசுவாசியும் முழுநேர ஊழியத்தில் இருப்பதை வேதம் நமக்கு நினைவூட்டுகிறது-அவர்கள் அந்த பகுதியில் தேவனை மகிமைப்படுத்துகிறார்கள் என்றால், அவர் அவர்களை செயல்பட அழைத்திருக்கிறார் என்று பொருள். நாம் பல மதங்களின் கோட்பாடுகளை கொண்ட பணித்தலத்தில் இருந்தாலும், வீட்டில் பிள்ளைகளை வளர்ப்பது, அவர்களை தேவ பக்தியில் பராமரிப்பது அல்லது சபையில் சேவை செய்வது – போன்றவற்றில் தேவனுடைய வார்த்தைக்கு விசுவாசமாக இருப்பதே முக்கியமானதாக இருக்கிறது.