பாக்கியவான்கள் — பகுதி 1 முன்னுரை

(English version: “The Beatitudes – Introduction”)
இயேசுகிறிஸ்து பிரசங்கித்த மிகவும் பிரபலமான பிரசங்கம், “மலைப் பிரசங்கம்” என்று அழைக்கப்படுகிறது. இது 3 அதிகாரங்களை [மத்தேயு 5-7] உள்ளடக்கியது. மத்தேயு 5:3-12 இல் காணப்படும் அந்த பிரசங்கத்தின் ஆரம்பப் பகுதி, பெரும்பாலும் “பாக்கியங்கள்” என்று அழைக்கப்படுகிறது, கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்கள் என்று கூறும் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் இருக்க வேண்டிய 8 அணுகுமுறைகளின் பட்டியலை இது வழங்குகிறது. இந்த அறிமுக தொடர் பதிவுகளில் 8 அணுகுமுறைகளை ஒவ்வொன்றையும் ஆராய்வோம்.
ஆனால் அதைச் செய்வதற்கு முன், முழு வசனப்பகுதியையும் வாசிப்பது உதவியாக இருக்கும்.
மத்தேயு 5:3-12
3 ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது. 4 துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் ஆறுதலடைவார்கள். 5 சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள். 6 நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள். 7 இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள். 8 இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள். 9 சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள். 10 நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது. 11 என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்; 12 சந்தோஷப்பட்டு, களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்; உங்களுக்கு முன்னிருந்த தீர்க்கதரிசிகளையும் அப்படியே துன்பப்படுத்தினார்களே.
பொதுவாகவே, இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்காதவர்கள் எல்லா வகையான பாடுகளையும் தவிர்க்க முற்படுகிறார்கள். மேலும், மத்தேயு 5:3-12 இல், இயேசுகிறிஸ்துவின் கூற்றுப்படி, இந்த பாடுகள் யாவும் அவரைப் பின்பற்றுவதாகக் கூறும் அனைவரின் வாழ்க்கை முறையையும் அடையாளப்படுத்த வேண்டும். ஏன்? ஏனென்றால், தேவனுடைய ஆசீர்வாதங்களை அனுபவிக்கும் அத்தகைய வாழ்க்கை முறையானது, உலகத்தில் கேலிக்குரிய வாழ்க்கை முறையாக இருக்கிறது என்றாலும், அவருடைய அங்கீகாரத்தைப் பெறுகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இயேசு நம்மை ஒரு எதிர் கலாச்சார வாழ்க்கைக்கு அழைக்கிறார்!
மத்தேயு 5:3-12 ல் பெரும்பாலும் பாக்கியங்கள் “Beatitude” பீடிட்யூட்ஸ் என்று அழைக்கப்படுகிறது. இந்த வார்த்தை “Beatus” பீயடஸ் என்ற வார்த்தையின் லத்தீன் மொழிபெயர்ப்பிலிருந்து வந்தது, இது “Blessed” பிளசட் “ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஒரு எழுத்தாளர் இதை “அழகான அணுகுமுறை” என்று அழைக்கிறார், இந்த அணுகுமுறைகள் இயேசுகிறிஸ்துவை உண்மையாக பின்பற்றுபவர்களை அடையாளப்படுத்த வேண்டும். இந்த பிரிவில் 8 அணுகுமுறைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. வசனங்கள் 10 மற்றும் 11 இல் “பாக்கியவான்” என்ற வார்த்தையானது பயன்படுத்தப்பட்டிருந்தாலும். 10-12 வசனங்கள் உபத்திரவத்தின் மூலம் நிலைத்திருக்கும் ஒரு அணுகுமுறையை விவரிக்கின்றன.
நீங்கள் இதை சற்று கவனித்தால், இந்த அணுகுமுறைகள் ஒவ்வொன்றும் 9 முறை காணப்படும் “Blessed” “ஆசீர்வதிக்கப்பட்டவர்” என்ற வார்த்தையால் அடையாளப்படுத்தப்படுகிறது. சில மொழிபெயர்ப்புகள் இந்த வார்த்தையை “மகிழ்ச்சி” அல்லது “அதிர்ஷ்டம்” என்று குறிப்பிடுகின்றன. என்றாலும், “பாக்கியவான்கள்” என்ற வார்த்தையின் முழு சித்திரத்தையும் அது வெளிப்படுத்துவதில்லை. ஏன்? அதற்கு 2 காரணங்கள் இருக்கிறது.
காரணம் # 1. “மகிழ்ச்சி” என்பது ஒரு நபர் எப்படி உணர்கிறார் என்பதைக் குறிக்கிறது. மறுபுறம், பாக்கியவான்கள் என்பது தேவன் அவர்களைப் பற்றி என்ன நினைக்கிறார் என்பதைக் குறிக்கிறது. ஆவியில் எளிமை, துக்கம் போன்ற பண்புகளை வெளிப்படுத்தும் ஒரு நபருக்கு இது தேவனின் அங்கீகாரமாகும். அதனால்தான் “பாக்கியவான்கள்” என்ற வார்த்தையைப் பயன்படுத்த விரும்புகிறோம்.
காரணம் # 2. “மகிழ்ச்சி” அல்லது “சந்தோஷம்” என்பது நமது கலாச்சாரத்தில் புரிந்துக் கொள்ளப்படுகிற தன்மையை நாம் விரும்புகிறோம். நமது கலாச்சாரம் மகிழ்ச்சியை பூமிக்குரிய சூழ்நிலைகளை அடிப்படையாகக் கொண்ட மகிழ்ச்சியான உணர்வுகளாக சமன் செய்கிறது. தேவனால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், அதாவது, அவருடைய அங்கீகாரத்தைப் பெறுபவர்கள் மகிழ்ச்சியையும், சந்தோஷத்தையும் உணருவார்கள், ஆனால் அது வேறு வகையான மகிழ்ச்சி. உலகம் விவரிக்கும் மகிழ்ச்சியை விட மாறுபட்ட மகிழ்ச்சி. எந்தச் சூழ்நிலையை எதிர்கொண்டாலும் அவர்கள் மீது தேவனுடைய மகிழ்ச்சி மற்றும் அங்கீகாரத்தின் விளைவாக வரும் உணர்வே இது. உபத்திரவம் மற்றும் பாடுகளின் போது, அவர்கள் மகிழ்ச்சியாக உணராவிட்டாலும் கூட, விசுவாசிகள் இன்னும் தேவனால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு நேர்மறையான நிலையில் இருக்கிறார்கள்—எனவே, “பாக்கியவான்கள்” என்ற வார்த்தையைப் பயன்படுத்த விரும்புகிறேன்.
இறுதியில், பாக்கியம் அல்லது மகிழ்ச்சியின் உண்மையான அர்த்தத்தை நாம் புரிந்துகொள்ளும் வரை “பாக்கியவான்கள்” அல்லது “மகிழ்ச்சியானவர்கள்” என்ற வார்த்தையை நாம் பயன்படுத்துவது ஒரு பெரிய பிரச்சினை அல்ல.
இவ்வசனங்கள் பாக்கியங்கள் [Beatitudes] குறித்த ஒரு கட்டமைப்பை உருவாக்குகிறது ஒவ்வொரு பாக்கியத்திலும் 3 கூறுகள் உள்ளன. முதலாவதாக, ஒரு ஆசீர்வாதம் [“பாக்கியவான்கள்”—மத்தேயு 5:3a]. இரண்டாவதாக, ஒரு குறிப்பிட்ட அணுகுமுறையை அடிப்படையாகக் கொண்ட பாக்கியத்திற்கான காரணம் [“அவர்கள் ஆவியில் எளிமையுள்ளவர்கள்”—மத்தேயு 5:3b]. இறுதியாக, அத்தகைய மனப்பான்மையைக் காட்டுவதற்கு ஒரு வெகுமதி [“பரலோக ராஜ்யம் அவர்களுடையது”—மத்தேயு 5:3a].
இப்போதும், எதிர்காலத்திலும் “பரலோக இராஜ்ஜியத்தின்” ஆசீர்வாதங்களை முழுமையாய் அனுபவிப்பதே பாக்கியங்களின் மையக் கருப்பொருளாகும். 3 மற்றும் 10 வசனங்களின் முடிவில் தோன்றும் “பரலோக ராஜ்யம் அவர்களுடையது” என்ற சொற்றொடரிலிருந்து இந்த கருப்பொருள் வருகிறது! “அவர்களுடையது” என்பது தற்போதைய உடைமையைக் குறிக்கிறது.
பரலோக இராஜ்ஜியம் தற்போதைய மூலக்கூறு மற்றும் எதிர்கால மூலக்கூறு ஆகிய இரண்டையும் கொண்டுள்ளது. பழைய ஏற்பாட்டில் தேவன் வாக்குறுதியளித்தபடி, எதிர்கால மூலக்கூறு இயேசுகிறிஸ்து பூமிக்கு திரும்பும்போது அவர் அமைக்கும் அவரது சரீரபிரகரமான ராஜ்யத்தைக் குறிக்கிறது. இருப்பினும், இப்போதும் கூட, சில ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள் உண்மையான விசுவாசிகளால் அனுபவிக்கப்படுகின்றன—அதாவது, ராஜாவான இயேசுகிறிஸ்துவின் ஆளுமை அல்லது ஆட்சியின் கீழ் வாழ்பவர்களாக இருக்கிறார்கள்.
இரட்சிப்பை அனுபவித்ததன் விளைவாக, இந்த 8 அணுமுறைகளை தங்கள் அன்றாட வாழ்க்கையில் வெளிப்படுத்துபவர்களுக்கு மட்டுமே பரலோகராஜ்யத்தின் ஆசீர்வாதங்கள் சாத்தியமானது என்பதைப் புரிந்துகொள்வது அவசியம், இதனால் அவர்களுக்குள் பரிசுத்த ஆவியானவர் வாழ்கிறார். விசுவாசிகள் இந்த அணுகுமுறைகளை எல்லா நேரத்திலும் முழுமையாக வெளிப்படுத்துவார்கள் என்று அர்த்தமல்ல. ஆவியானவர் உள்ளத்தில் வாழும் கிரிஸ்துவர்களாக இருந்தாலும், விசுவாசிகள் இந்த வாழ்க்கை முறையிலிருந்து அடிக்கடி தவறிவிடலாம்.
எனினும், பாக்கியங்கள் மட்டுமல்ல, மலைப்பிரசங்கம் முழுவதிலும் விவரிக்கப்பட்டுள்ள வாழ்க்கை முறையைப் பின்தொடர்வது பூமியில் இராஜாவாகிய இயேசுவின் ஆட்சியின் கீழ் வாழும் ஒவ்வொரு விசுவாசிகள் மீதும் ஆதிக்கம் செலுத்த வேண்டும். விசுவாசிகள் இந்த வசனப்பகுதியுள்ள பரலோக இராஜ்ஜியத்தின் இலக்கை ஒருபோதும் முழுமையாக அடைய மாட்டார்கள் என்றாலும், அவர்கள் முழு மனதுடன் அதைத் தொடர வேண்டும். மறைந்த ஹாடன் ராபின்சன் தனது புத்தகத்தில், இயேசுகிறிஸ்துவிலுள்ள வெற்றிகரமான வாழ்க்கையைப் பற்றி இப்படியாக கூறுகிறார், “தேவன் இலக்கை அடைவதை விட செயல்பாட்டில் அதிக ஆர்வம் காட்டுகிறார். அப்போது இலக்கைப் பின்தொடர்வது அதன் சொந்த வெகுமதியாக மாறும்.”
எனவே, அடுத்த பதிவில் முதல் பாக்கியத்தைப் பார்ப்போம்! அதுவரை, ஜெபத்துடன் இதுபோன்ற வாழ்க்கை முறையைத் தொடர உங்களை அனுமதிக்க ஆண்டவரிடம் ஏன் கேட்கக்கூடாது?