பாக்கியவான்கள்—பகுதி 2 ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்

Posted byTamil Editor December 12, 2023 Comments:0

(English Version: “The Beatitudes – Blessed Are The Poor In Spirit”)

மத்தேயு 5:3-12 வரையுள்ள வசனப் பகுதி. இயேசுகிறிஸ்துவைப் பின்பற்றுபவர்கள் ஒவ்வொருவரின் வாழ்விலும் இருக்க வேண்டிய 8  அணுகுமுறைகளை விவரிக்கும் பாக்கியம் பற்றிய பதிவுகளின்  2 வது தொடர் இதுவாகும்.

*******************

கர்த்தராகிய இயேசுகிறிஸ்து தம் மலைபிரசங்கத்தை இந்த குறிப்பிடத்தக்க அறிக்கையுடன் தொடங்குகிறார், “ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது.” [மத்தேயு 5:3]. “ஆவியின் எளிமை” என்பது ஒரு அடிப்படை அணுகுமுறையாகும். ஆவியில் பலமுள்ளவர்களை உலகம் மேன்மைப்படுத்தும் அதே வேளையில், ஆவியின் எளிமையை வெளிப்படுத்த விசுவாசிகளை வேதம் அழைக்கிறது. அது  ஒரு எதிர் கலாச்சார வாழ்க்கை!

“ஆவியில் எளிமை” என்பது பலவீனமான ஆவி அல்லது விசுவாசத்தில் பலவீனமான ஒருவரையோ குறிக்காது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும், “நான் ஒன்றும் இல்லை” என்று கூறி திரிந்துக் கொண்டிருப்பதையும்  இது குறிக்கவில்லை. மாறாக, “தேவனே, உமது தரத்திற்கு ஏற்ப வாழ எனக்கு ஆவிக்குரிய ஆதாரங்கள் எதுவும் இல்லை. நீர் என்னை வாழும்படி அழைத்த வாழ்க்கையை வாழ எனக்கு தகுதிகள் இல்லை! எல்லாவற்றிற்கும் எனக்கு நீர் வேண்டும். எல்லாவற்றுக்கும் நான் உம்மையே சார்ந்திருக்கிறேன். உம்மையல்லாமல் நான் ஆவிக்குரியரீதியில் ஒன்றுமற்றவன்! என்பதை குறிக்கிறது”

“எளிமை” என்று மொழிபெயர்க்கப்பட்ட கிரேக்க வார்த்தை, பொருள் வளங்கள் எதுவும் இல்லாத ஒருவரை விவரிக்கப் பயன்படுத்தப்படுகிறது, அதன் விளைவாக, அடிப்படை உயிர்வாழ்விற்காக வேறொருவரை முழுமையாகச் சார்ந்து இருப்பது இதன் அர்த்தம் [பார்க்க லுக்கா 16:19-20]. ஒரு பிச்சைக்காரன், தரையில்  குனிந்து, தலையை மூடிக்கொண்டு, நிமிர்ந்து பார்க்கக்கூட வெட்கப்பட்டு, பணத்திற்காக கையை நீட்டுவதுதான் இதன் சித்திரம்.

இருப்பினும், மத்தேயு 5:3-ல், இயேசு “எளிமை” என்ற வார்த்தையோடு “ஆவியில்” என்ற வார்த்தையையும் சேர்த்துள்ளதால், அவர் ஏழ்மையைக் குறிப்பிடவில்லை என்பது நமக்குத் தெளிவாகிறது. அவர் முக்கியமாக ஆவிக்குரிய வறுமையைக் குறிப்பிடுகிறார் [வெளிப்படுத்துதல் 3:17-18 ஐப் பார்க்கவும்] இது ஒரு ஆவிக்குரிய வறுமை. பணக்காரனும், ஏழையும் பாவம் செய்தார்களென்றால் அவர்களிருவரிடமும் தேவனை ஏற்றுக்கொள்ளும் வாழ்க்கைக்கான ஆதாரங்கள் இல்லை. இருவரும் இந்த உண்மையைப் புரிந்துகொண்டு, தேவனுக்குப் பிரியமான வாழ்க்கை வாழ்வதில் இல்லாததைத் தங்களுக்கு அளிக்கக்கூடிய இயேசு கிறிஸ்துவிடம் திரும்ப வேண்டும். இது தான் ஆவியின் எளிமை!

லூக்கா 18:8-14 இல் இயேசு கற்பித்த “பரிசேயன் மற்றும் ஆயக்காரனின் உவமை”, ஆவியில் எளியவர்கள் மட்டுமே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பார்கள் என்பதற்கு  ஓர் சிறந்த எடுத்துக்காட்டாகும். அந்த உவமையில் சுய நீதியுள்ள பரிசேயன் தனது சொந்த ஆவிக்குரிய சாதனைகளால் நிறைந்திருந்தான் என்ற கூறப்பட்டிருக்கிறது, அவன் தனது பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டியதன் அவசியத்தைக் காணாதபடிக்கு முற்றிலும் குருடனாக இருந்தான். மறுபுறம்,  ஆயக்காரன் பரிசுத்த தேவனுக்கு எதிரான தனது பாவங்களைத் தவிர வேறு எதையும் தன்னிடம் காணவில்லை, அதன் விளைவாக, “தேவனே,  பாவியான என் மீது கிருபையாயிரும்” [லூக்கா 18:13] என்று அவனது மார்பில் அடித்துக் கொண்டான். இது ஒரு ஆவிக்குரிய பிச்சைக்காரனின் சித்திரம்—ஆவியில் எளிமையுள்ளவர்களை விவரிக்கும் மற்றொரு வழி. அவன் தனது பாவங்கள் மன்னிக்கப்பட்டவனாய் வீட்டிற்குச் சென்றான் என்பதில் ஆச்சரியமில்லை, இவன் தன்னுடைய பெருமையின் காரணமாக, தனது ஆவிக்குரிய வெறுமையைக் காணத் தவறிய பரிசேயன் அல்ல.

ஆவிக்குரியரீதியில்  தேவனுடன் சரியானவர்களாக இருப்பதற்கான தேவை  என்ன என்பதை நாம் காணும் வரை, பாவ மன்னிப்புக்காக நாம் ஒருபோதும் இயேசுகிறிஸ்துவை நோக்கிப் பார்க்க மாட்டோம். இதன் அர்த்தம் என்னவென்றால் நாம் ஒருபோதும் நித்திய ஜீவனைப் பெற மாட்டோம், இதனால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க முடியாது. ஆனால், தேவனின் கிருபையால், ஆவிக்குரிய ரீதியில் நம்மை வெறுமையாகக் காணும்போது, பாவ மன்னிப்புக்காக கிறிஸ்துவிடம் மட்டுமே திரும்புவோம். அதன் விளைவாக, நாம் நித்திய ஜீவனைப் பெற்று, தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்போம்.

இருப்பினும், ஆவியில் எளிமையான அணுகுமுறையானது மனமாற்றத்துடன் நின்றுவிடாது. நாம் இரட்சிக்கப்பட்டாலும், சொந்த பலத்தில் கிறிஸ்தவ வாழ்க்கையை வாழ முடியாது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். தேவனைப் பிரியப்படுத்துவதற்குத் தேவையானது நம்மிடம் இல்லை. உள்ளே வாசம் செய்யும் பரிசுத்த ஆவியின் வல்லமையின் மூலம் அவர் நம்மை அழைத்த வாழ்க்கையில் உதவுமாறு நாம் தொடர்ந்து தேவனை சார்ந்து,  அவரிடம் மன்றாட வேண்டும்.

மேலும் இங்குதான் நாம் அடிக்கடி தோல்வி அடைகிறோம். பயிற்சி சக்கரங்கள் மூலம் இரு சக்கர வாசனம் ஓட்டுவது எப்படி என்று கற்றுக் கொள்ளத் தொடங்கி, பயிற்சி சக்கரங்களை அகற்றி, சொந்தமாக ஓட்டும் நிலைக்கு வரும் சிறு குழந்தையைப் போல நாம் இருக்கிறோம். நாம் அதை ஒருபோதும் வெளிப்படையாக சொல்ல மாட்டோம் என்றாலும், அடிக்கடி அதையே செய்கிறோம். நாம் சொந்தமாக விஷயங்களைச் செய்ய முனைகிறோம், வீழ்ச்சியடைகிறோம், பின்னர் தேவன் மீது சாய்ந்து கொள்கிறோம்.

எனினும், இயேசுகிறிஸ்துவின் இந்த வார்த்தைகளை நாம் சரியாகப் படித்தால், இந்த ஆவியில் எளிமையான  அணுகுமுறையின்  வாழ்க்கையை முறையாகக் காட்டுபவர்கள் மட்டுமே, பரலோகராஜ்யத்தின் உண்மையான குடிமக்கள் என்று அவர் கூறுகிறார். எனவே, இதை நாம் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். பரிசுத்த ஆவியின் வல்லமையுடன், நாம் இந்த வகையான வாழ்க்கை முறையை வாழ விரும்ப வேண்டும்—தேவனின் இராஜ்ஜியத்தில் பிரவேசிப்பதற்கு மட்டுமல்ல, நாம் உண்மையில் பரலோக ராஜ்யத்தின் குடிமக்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காகவும் வேண்டும்!

இறுதியாக, ஆவியின் எளிமை வாழ்க்கை முறையாகப் பின்பற்றுபவர்களுக்கான வெகுமதி: “பரலோகராஜ்யம் அவர்களுடையது” என்பதாகும் [மத்தேயு 5:3]. “அவர்களுடையதும், அவர்களுக்கும் மட்டுமே பரலோகராஜ்யம்” அல்லது தேவனுடைய ராஜ்யத்தின் சொந்தக்காரர்கள் என்று இந்த கடைசிப் பகுதியைச் சிறப்பாக மொழிபெயர்க்கலாம்.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஆவியில் எளியவர்கள், இந்த வாழ்க்கையில், பரலோகத்தின் ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை அனுபவிப்பார்கள். இதன் அர்த்தம் என்னவென்றால், மகிழ்ச்சியை அனுபவிப்பதாகும்.  தேவன் அவர்களை ஏற்றுக்கொண்ட அறிந்த மகிழ்ச்சியை அனுபவித்து, இயேசு ராஜாவின் ஆட்சியின் கீழ் இவ்வுலக வாழ்வில் அவர் மூலமாக செயல்படுகிறார்கள். எதிர்காலத்தில், ராஜாவாகிய இயேசு தம்முடைய பூமிக்குரிய ராஜ்யத்தை ஸ்தாபிக்கத் திரும்பும்போது, இந்த ஆசீர்வாதங்களின் முழுமையை அனுபவிப்பார்கள்.

இந்த “ஆவியின் எளிமை” அணுகுமுறையை ஒரு வாழ்க்கைமுறையாக நடைமுறையில்  காட்டுவதற்கு கருத்தில் கொள்ள வேண்டிய 4 கோட்பாடுகள் இங்கே உள்ளன.

1. நாம் தினசரி விடாமுயற்சியுடன் ஜெபிக்க வேண்டும்.

ஜெபம் என்பது எப்பொழுதும் நமது கடமையை நாம் ஒப்புக்கொள்ளும் ஒரு வழிமுறையாக இருப்பதால், பாவத்தையோ அல்லது வேறு ஏதேனும் பிரச்சினைகளையோ சமாளிக்க நமக்கு உதவுமாறு நாம் அவரிடம் தயக்கமின்றி தொடர்ந்து முறையிட வேண்டும். நாம் எவ்வளவு அதிகமாக ஜெபிக்கிறோமோ, அவ்வளவு அதிகமாக நாம் எவ்வளவு பாவம் செய்கிறோம் என்பதை உணர்ந்துகொள்கிறோம் [இது நாம் எவ்வளவு ஆவிக்குரியரீதியில் வறுமையாகிவிட்டோம் என்பதைக் கூறுவதற்கான மற்றொரு வழி]. அத்தகைய உணர்தல், ஜெபத்திலும் அறிக்கையிடுதலிலும் தேவனை இன்னும் அதிகமாகக் கூப்பிடச் செய்யும்.

2. தேவனுடைய சித்தத்திற்கு முரணான எதையும் செய்யாதப்படிக்கு நாம் நம்மை அர்ப்பணிக்க வேண்டும்.

ஆவியில் எளிமையுள்ளவர்கள் தேவனுடைய வார்த்தைக்கு அஞ்சி நடுங்க வேண்டும் [ஏசாயா 66:2] மற்றும் பரிசுத்த எழுத்துக்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ள தேவனுடைய சித்தத்திற்கு மாறாக செய்வதெதையும் நினைத்து நடுங்க வேண்டும்.

3. சுயத்தை மேன்மைப்படுத்தும் எண்ணங்களைத் தவிர்ப்பதற்கு நாம் நம்மை அர்ப்பணிக்க வேண்டும்.

நமது எண்ணங்களே நமது செயல்களை இயக்குகின்றன. பாவமான வாழ்க்கை என்பது பாவ சிந்தனையின் விளைவாகும். எனவே, தேவனுடைய வார்த்தை நம் மனதையும் [ரோமர் 12:2] மற்றும் இருதயத்தையும் [நீதிமொழிகள் 4:23] கட்டுப்படுத்த அனுமதிப்பதன் மூலம் தெய்வீக சிந்தனை வளர்ப்பதில் நாம் விருப்பத்துடன் இருக்க வேண்டும்.

4. நாம் தேவனை அதிகமாக சார்ந்திருக்கவும், நம்மை குறைவாகவும் சார்ந்திருக்கச் செய்யும் வழிமுறையாக வாழ்க்கையின் சோதனைகளை எதிர்கொள்ள நம்மை அர்ப்பணிக்க வேண்டும்.

சோதனைகளை இகழ்வதற்குப் பதிலாக, ஏகாதிபத்தியத்தையும் அன்பையும் கொண்ட தேவனின்  கரத்திலிருந்து வருவதைப் பார்க்க நாம் கற்றுக்கொள்ள வேண்டும்அதே தேவன் நமக்காக தம்முடைய குமாரனை சிலுவையில் அறைந்து மட்டுமல்லாமல், நம்மையும் அவருடைய மற்ற பிள்ளைகளையும் தமது கரத்தில் வைத்திருக்கிறார். சோதனைகள் என்பது சில சமயங்களில் அக்கினி போன்று கடுமையானதாகவும்  வரலாம் [1 பேதுரு 4:12]—இது நம்முடைய சொந்த பலத்தில் அல்லாமல் அவரை மட்டுமே சார்ந்திருக்கச் செய்கிறது [2 கொரி 1:9-10; 12:7-10].

இவற்றை பார்த்துவிட்டு, நாம் விரக்தியில் விழுந்துவிடாமல் இருக்க அல்லது தவறான முடிவுக்கு வருவதைத் தடுக்க, கீழ்காணும் ஆலோசனையையும் சேர்த்துக் கொள்கிறேன்: நம்மில் எவராலும் இந்த அருட்கொடையையோ அல்லது வேறு எந்த ஆசீர்வாதத்தையோ முழுமையாக காத்துக்கொள்ள முடியாது. நம் சார்பாக அவற்றைப் பரிபூரணமாகக் காத்துக்கொள்கிறவர் ஒருவர் இருக்கிறார்: அவர் கர்த்தராகிய இயேசுவே!

ஜெபிக்க வேண்டிய அவசியமில்லாதவர் ஒருவர் இருப்பாரென்றால் அது இயேசுகிறிஸ்துவேயாகும். எனினும், இதுவரை வாழ்ந்தவர்களிலேயே மிகவும் பரபரப்பான மனிதராக இருந்தபோதிலும், இயேசுகிறிஸ்துவை விட ஜெபத்திற்கு அதிக முக்கியத்துவம் செலுத்தியவர்கள் யாரும் இருக்கமுடியாதுஎல்லாவற்றிற்கும் மேலாக, உலகை இரட்சிக்கும் மகத்தான பணி அவரைத் தவிர வேறு யாருக்கும் கொடுக்கப்படவில்லை!

தாம் விரும்பிய எதையும் செய்ய கூடிய ஒருவர் இருப்பாரென்றால், அது இயேசுகிறிஸ்துவேயாகும். ஆனாலும், அவர் பிதாவின் ஆலோசனையின்றி எதையும் செய்யாதவர். அதுமட்டுமல்லாமல், அது அவரை சிலுவைக்கு கொண்டுச் சென்றபோதும்,  அவருடைய சித்தத்தைச் செய்வதில் அவர் எப்பொழுதும் விரும்பினார்.

சுயமரியாதை பற்றி சிந்திக்க யாருக்காவது உரிமை இருக்குமென்றால், அது இயேசுகிறிஸ்து ஒருவருக்கு மாத்திரமே இருந்த்த. அவர் தம்மை  மகத்துவமானவர் என்று கூறியிருந்தால்  அது பாவமாக இருந்திருக்காது. ஆயினும்கூட, அவர் தம்மை “நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்”  என்று கூறுகிறார். [மத்தேயு 11:29]—இங்கே “இருதயத்தை”—எல்லா எண்ணங்களின் இடமாக விவரித்தார்.

ஒவ்வொரு சோதனையையும் சகித்து, வீழ்ந்துப்போகாதவர்  ஒருவர் இருப்பார்  என்றால், அது இயேசுகிறிஸ்து ஒருவரே.

அதனால்தான் இயேசுகிறிஸ்துவின் மூலம் தேவன் நம்மை முதலில் ஏற்றுக்கொள்கிறார். இயேசுகிறிஸ்துவின் மூலமாகவே நாம் தேவனால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்களாக தொடர்ந்து இருக்கிறோம். எனவே, தேவனால் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு, இந்த ஆவியின் எளிமையை நாம் கச்சிதமாக வெளிப்படுத்த வேண்டும் என்ற வலையில் விழ வேண்டாம். அதற்குப் பதிலாக நாம் இந்தப் பந்தயத்தில் ஓடும்போது, , இயேசுவைகிறிஸ்துவைப் போல நாம் மாறுவதற்கு அவரை நம் முன்மாதிரியாகப் பார்ப்போம்—பரிசுத்த ஆவியானவர் உள்ளிருந்து செயல்படுகிறார் [2 கொரிந்தியர் 3:18].

ஆம், உலகம் “அதிகார உணர்வையும், அதிகாரத்திற்கான விருப்பத்தையும், மனிதனிடம் சக்தியை உயர்த்தும் அனைத்தையும்” நல்லது என்றும், “பலவீனத்திலிருந்து விளைவதை” கெட்டது என்றும் வரையறுக்கிறது. உலகம் தன் தசைகளை வளைத்து, தன் சொந்த பலத்தில் பெருமை கொள்கிறது.

ஆனாலும், ஆவியில் எளிமையாக இருக்கும் நாம் வெட்கப்படாமல், நம்முடைய எல்லா பலவீனங்களோடும்—தொடர்ந்து நமது வெறுமையான கைகளை பரலோகம் நோக்கி உயர்த்தி, “ஆண்டவரே, எனக்கு நீர் வேண்டும்; நீர் இல்லாமல் என்னால் ஒன்றும் செய்ய முடியாது; எனக்கு உதவும். என்று கேட்க வேண்டும்.” நமது பலவீனங்களில் தேவனுடைய வல்லமை செயல்படுகிறது என்பதையும், நமது பலவீனங்கள் மூலம் தேவனின் மகிமை வெளிப்படுகிறது என்பதையும் நாம் தொடர்ந்து நினைவில் கொள்ள வேண்டும். நமது ஆவிக்குரிய வாழ்க்கையின் எளிமையை உலகம்  பார்த்து சிரிக்கிறது என்றால் நாம் கவலைப்பட வேண்டியதில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, இது ஒரு எதிர் கலாச்சார வாழ்க்கை முறை. அத்தகைய வாழ்க்கை முறையின் மீது தேவனின் அங்கீகாரத்தின் புன்னகை நமக்கு இருக்கிறது என்று நாம் இளைப்பாறலாம்.

“நீங்கள் பாக்கியவான்கள்” என்று இயேசுகிறிஸ்து சொல்வதைக் கேட்கக்கூடிய எதிர் கலாச்சார வாழ்க்கை வாழ்பவர்களை மட்டுமே நாம் தொடர்ந்து மாதிரியாக கொள்ள வேண்டும். உங்களுக்கு ஐயோ, உங்களுக்கு ஒரு பயங்கரமான நியாயத்தீர்ப்பு காத்திருக்கிறது என்று இயேசுகிறிஸ்து சொல்வதை மட்டுமே மற்றவர்கள் கேட்கும் நிலை ஏற்படும். எனவே,  நித்திய மகிழ்ச்சிக்கும் நித்திய துக்கத்திற்கும், நித்திய சமாதானம் மற்றும் நித்திய வலிக்கு இடையே  உங்களுடைய தேர்வு உள்ளது. உலகம் அளிக்கும் தற்காலிக “மகிழ்ச்சியை” விட, ஞானமாக இருந்து, இயேசுகிறிஸ்து  அளிக்கும் நித்திய பாக்கியத்தைத் தேர்ந்தெடுப்போம்!

கடந்தவை கடந்தவையாக இருக்கட்டும். இன்று ஒரு புதிய நாள். இந்த மாபெரும் சத்தியத்தை விசுவாசித்து செயல்படுவதன் மூலம் நாம் மீண்டும் ஒரு புதிய தொடக்கத்தை தொடங்கலாம்: ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது.

Category
Subscribe
Notify of
guest
0 கருத்துக்கள்
Oldest
Newest
Inline Feedbacks
View all comments