பாக்கியவான்கள்—பகுதி 4 சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்

Posted byTamil Editor January 9, 2024 Comments:0

(English Version: “The Beatitudes – Blessed Are The Meek”)

இந்த பதிவானது மத்தேயு 5:3-12  ஆகிய வசனங்கள் வரை விரவியிருக்கும் பாக்கியங்களைப் பற்றிய தொகுப்புகளின் தொடரின் 3வது பதிவாகும். இந்த பகுதியில், ஆண்டவராகிய இயேசு தம்மைப் பின்பற்றுபவர்கள் என்று கூறிக்கொள்ளும் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் இருக்க வேண்டிய 8 அணுகுமுறைகளை விவரிக்கிறார். எனினும், இந்த பதிவில், மத்தேயு 5:5 ல் விவரிக்கப்பட்டுள்ளபடி நாம் மூன்றாவது அணுகுமுறையைப் பார்ப்போம்: “சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கிவான்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்.” என்ற மூன்றாவது வது அணுகுமுறையைப் பார்ப்போம். இந்த வசனமானது சங்கீதம் 37:11 லிருந்து எடுக்கப்பட்டது. 

*******************

ஆற்றல் என்பதே உலகம் போற்றகூடிய ஒரு தரநிலையாக இருக்கிறது. உங்களை நீங்களே ஆற்றல்மிக்கவர்களாக மாற்றிக் கொள்ளுங்கள் என்று உலகம் சொல்கிறது. இருப்பினும், இயேசுகிறிஸ்து  இதற்கு நேர்மாறாக கூறுகிறார்:

1. மென்மையாக இருங்கள்.

2. உங்களை ஆற்றல்மிக்கவர்களாக மாற்றிக் கொள்ளாதீர்கள்.

3. புகழின் பின் ஓடாதிருங்கள்.

4. அங்கீகாரத்திற்காக போராடாதீர்கள்.

அதுவே தேவனின் ஆசீர்வாதத்தையும், அவருடைய அங்கீகாரத்தையும், அவருடைய தயவையும் பெறுவதாக அவர் கூறுகிறார். அந்த வாழ்க்கை முறைதான் இறுதியில் அனைத்தையும் பெறும்—அவர்கள் மட்டுமே, ஒட்டுமொத்த பூமியின் உண்மையான சுதந்திரவாளிகளாக இருப்பார்கள் என்று அவர் கூறுகிறார்.

எனவே, உலகம் 2 எதிர் கருத்துக்களை கூறுகிறது, “நீங்கள் வல்லவர்கள் நீங்கள் வலிமையானவர்கள்.” ஆனால், மறுபுறம் இயேசு இவ்வாறு கூறுகிறார், “சாந்தகுணமுள்ளவர்கள் வல்லவர்கள்.” இது முற்றிலும் ஓர் எதிர் கலாச்சாரம்! நமது இயற்கையான மாம்சம் விரும்புவதற்கு முற்றிலும் எதிரானது! இருப்பினும், பரிசுத்த ஆவியானவரின் வல்லமையால், நாம் சாந்தமான மனப்பான்மையைக் காட்ட அழைக்கப்பட்டுள்ளோம். முதலில் “சாந்தகுணம்” என்ற இந்த வார்த்தையைக் கூர்ந்து கவனிப்பதன் மூலம் அதை எப்படிச் செய்யலாம் என்று பார்ப்போம். இதற்கு என்ன பொருள்? அதை நாம் எப்படி வரையறுக்க முடியும்?

சாந்தம் என்றால் என்ன? 

சாந்தம் அல்லது கனிவு என்பது  பலவீனம் அல்ல. மோசே “மோசேயானவன் பூமியிலுள்ள சகல மனிதரிலும் மிகுந்த சாந்தகுணமுள்ளவனாயிருந்தான்.” என்று விவரிக்கப்பட்டார் [எண்ணாகமம் 12:3]. இயேசு தம்மை இவ்வாறு விவரித்தார் நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்” [மத்தேயு 5:5-ல் சாந்தம் என்று மொழிபெயர்க்கப்பட்ட அதே வார்த்தை] [மத்தேயு 11:29]. மோசேயையோ அல்லது இயேசுவையோ பலவீனமான அல்லது முதுகெலும்பில்லாத நபர்கள் என்று யாராவது சொல்லத் துணிவார்களா?

இருப்பினும்,  சாந்தம் என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன? என்ற கேள்விக்கு பதில் இன்னும் அளிக்கப்பாமல் இருக்கிறது சாந்தகுணம்” [சங்கீதம் 37:11] சங்கீதம் 37 லிருந்து இயேசுகிறிஸ்து எடுத்துரைத்த இந்த வார்த்தையின் ஒரு சிறிய பின்னணி, இந்தக் கேள்விக்கு பதிலளிக்க நமக்கு உதவும்.  இந்த சங்கீதத்தை தாவீது எழுதினான், தேவனுடைய மக்கள் தங்கள் சத்துருக்களின் கைகளில் அடக்குமுறைக்கு ஆளாகிறார்கள் [சங்கீதம் 37:1]. பழிவாங்குவதைத் தவிர்க்கவும் [சங்கீதம் 37:8], சரியான நேரத்தில் நீதியைக் கொண்டுவர தேவனை முழுவதுமாகச் சார்ந்திருக்கவும், அதே சமயம் தொடர்ந்து நல்லதைச் செய்யவும் அவன் அவர்களை அழைத்தான் [சங்கீதம் 37:27]. 

அப்படியானால், சாந்தகுணமுள்ளவர்கள் யார்? அவர்கள் ஒடுக்கப்படும் போது முழுவதுமாக தேவனை நம்பியவர்கள். அவர்கள் தீமை செய்வதையோ, பழிவாங்குவதையோ  தங்கள் கைகளில் எடுத்துக்கொள்ள மாட்டார்கள். மாறாக, அவர்களைக் காயப்படுத்துகிறவர்களுக்கும்கூட தொடர்ந்து நன்மையைச் செய்கிறார்கள்!

சாந்தகுணமுள்ளவர்கள் வலிமையானவர்கள். அவர்கள் தங்கள் பலத்தை கட்டுக்குள் வைத்திருக்கிறார்கள். சாந்தகுணமுள்ள ஒருவன் ஒருபோதும் கோபப்படுவதில்லை என்பதல்ல. அவர்கள் கோபப்படவும் செய்கின்றார்கள். ஆனால் சரியான காரணங்களுக்காக கோபப்படுவார்கள். தேவனின் மகிமை தூற்றப்படும்போது அல்லது மற்றவர்களுக்கு அநீதி இழைக்கப்படும்போது அவர்கள் கோபமடைகிறார்கள். ஆனால், அவர்கள் தனிப்பட்ட அவமானங்களை எதிர்கொள்ளும்போது அல்ல. கனிவான மனப்பான்மை கொண்டவர்கள் மற்றவர்களின் உணர்வுகளையும் தேவைகளையும் கவனித்துக்கொள்கிறார்கள்—தங்கள் எதிரிகள் உட்பட! அவர்கள் எப்போதும் தங்கள் தேவைகளை விட மற்றவர்களின் தேவைகளை சந்திக்க முயற்சி செய்கிறார்கள். அவர்கள் பழிவாங்க மாட்டார்கள், ஆனால் நன்மையைச் செய்கிறார்கள், ஏனென்றால் அவர்கள் சரியான நேரத்தில் நீதியைக் கொண்டுவர தேவனை சார்ந்திருக்கிறார்கள்.

சாந்தத்தின் வரையறையின்படியே தான் இயேசுகிறிஸ்து  வாழ்ந்தார்.  நாமும் அப்படித்தான் வாழ வேண்டும்! ஒரு கனிவான மனப்பான்மையைக் காட்டுவதற்காக இயேசுகிறிஸ்து எதிர்வரவிருக்கும் ராஜ்யத்தை ராஜாவாகச் சுதந்தரிப்பது போல, நாம் மனத்தாழ்மையுள்ள வாழ்க்கையைத் தொடர்ந்தால், அந்தச் சுதந்தரத்தில் பங்குகொள்வதற்கான உறுதியும் நமக்கு கிடைக்கிறது.

சாந்தமான வாழ்க்கை முறைக்கான பலன்.

மத்தேயு 5:5 இல் இயேசு மேற்கோள் காட்டிய இந்த வசனம் பழைய ஏற்பாட்டை அடிப்படையாகக் கொண்டது, குறிப்பாக சங்கீதம் 37:11 ன் முதல் பகுதி, “சாந்தகுணமுள்ளவர்கள் தேசத்தைச் சுதந்தரிப்பார்கள்,”  இதில் ஒரு சிறிய மாற்றம் என்றவென்றால், இயேசு இந்த பாக்கியத்தில் “தேசம்” என்ற வார்த்தையை “பூமி” என்று மாற்றினார். தம்மைப் பின்பற்றுபவர்கள் சாந்தமான மனப்பான்மையைக் கடைப்பிடித்ததால் அவர் திரும்பி வரும்போது எதிர்காலத்தில் பாலஸ்தீனத்தை மட்டுமல்ல, முழு பூமியையும் சுதந்திரமாகப் பெறுவார்கள் என்பதைக் குறிக்க அவர் இதைச் செய்தார். அதுதான் சாந்தமான வாழ்க்கை முறைக்கான பலன்!

சாந்தகுணமுள்ளவர்களாக இருக்க வேதம் அழைப்பு விடுக்கிறது.

இந்த மலைப்பிரசங்கத்தில் மட்டுமல்ல, இன்னும் பல வசனங்களில், விசுவாசிகள் மனத்தாழ்மையை ஒரு வாழ்க்கைமுறையாக பின்பற்றும்படி வேதம் வலியுறுத்துகிறது-குறிப்பாக நம் உறவுகளில் கடைப்பிடிக்க வலியுறுத்துகிறது . “உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக் கொள்ள வேண்டும்…” என்று நமக்குக் கூறப்பட்டுள்ளது. எபேசியர் 4:2 ல், “மிகுந்த மனத்தாழ்மையும் சாந்தமும் நீடிய பொறுமையும் உடையவர்களாய்” இருக்க நமக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது. கிறிஸ்தவர்கள் அல்லாத கணவர்களுடன் வாழும் கிறிஸ்தவ மனைவிகள் கூட, “சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியைக் காட்டும்படி கட்டளையிடப்பட்டுள்ளனர்” [1 பேதுரு 3:4].

அதே அதிகாரத்தில், அனைத்து விசுவாசிகளுக்கும் இந்த பழிவாங்கல் இல்லாத நடத்தையை குறித்து பேதுரு பின்னர் வலியுறுத்துகிறார். 1 பேதுரு 3:9 கூறுகிறது, “தீமைக்குத் தீமையையும், உதாசனத்துக்கு உதாசனத்தையும் சரிக்கட்டாமல், அதற்குப் பதிலாக, நீங்கள் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி அழைக்கப்பட்டிருக்கிறவர்களென்று அறிந்து, ஆசீர்வதியுங்கள்” [1 பேதுரு 3:9]. பழிவாங்க வேண்டாம்—தீமைக்கு தீமை செய்ய வேண்டாம்—ஆனால் உங்களிடம் கடுமையாக நடந்துகொள்பவர்களுக்கு இரக்கத்துடனும், நன்மையுடனும் பதிலளியுங்கள். அப்படிப்பட்டவர்கள் இறுதியில் தேவனின் ஆசீர்வாதத்தை அனுபவிப்பார்கள் என்பது உறுதி!

எனவே, கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொள்பவர்களுக்கு சாந்தம் என்பது ஒரு விருப்பத்தேர்வு அல்ல. இயேசுகிறிஸ்து மிகத் தெளிவாகக் கூறுகிறார்: அவர் அமைக்கவிருக்கும் ராஜ்யத்தில் சாந்தகுணமுள்ளவர்கள் மட்டுமே இருப்பார்கள். அவர்கள் மட்டுமே பூமியை சுதந்தரித்துக்கொள்வார்கள்.

அப்படியானால், இந்த சாந்த மனப்பான்மையை நாம் எவ்வாறு வளர்த்துக் கொள்வது?

நாம் எவ்வாறு சாந்தத்தில் வளர முடியும்?  நம்மில் உருவாக்கும் பரிசுத்த ஆவியானவரின் மீது நம்பிக்கை வைப்பதே இதை வளர்ப்பதற்கான ஒரே ஒரு வழியாக இருக்கிறது. கலாத்தியர் 5:22-23, “ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம். சாந்தம்…” சாந்தம் என்பது பரிசுத்த ஆவியானவர் மட்டுமே நம்மில் [“ஆவியின் கனியை” அல்லது ஆவியானவரால் விளைவிக்கப்படும் கனியை] உண்டாக்கக்கூடிய ஒரு பண்பாக கூறப்பட்டிருப்பதை கவனியுங்கள். இந்த பாக்கியத்தை நம் சொந்த முயற்சியால் உருவாக்கவோ இல்லது வெளிக்காட்டவோ முடியாது. சாந்தத்தில் வளர நாம் பரிசுத்த ஆவியானவரைச் சார்ந்து பணிந்தாக வேண்டும்.

இப்போது, பரிசுத்த ஆவியானவர் இந்த வகையான வாழ்க்கை முறையை உருவாக்க வழிவகைகளைப் பயன்படுத்துகிறார் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். மேலும் குறிப்பாக, சாந்தமாக வளர உதவும் 2 வழிகளைப் பயன்படுத்துகிறார்.

நம்மில் சாந்தத்தை உண்டாக்க பரிசுத்த ஆவியானவர் பயன்படுத்தும் முதல் வழி தேவனுடைய வார்த்தை. ஆவியானவர் பயன்படுத்தும் பட்டயம் தேவனுடைய வார்த்தையாகும் [எபே. 6:17]. யாக்கோபு விசுவாசிகளுக்கு இவ்வாறு எழுதுகிறார், “ஆகையால், நீங்கள் எல்லாவித அழுக்கையும் கொடிய துர்க்குணத்தையும் ஒழித்துவிட்டு, உங்கள் உள்ளத்தில் நாட்டப்பட்டதாயும் உங்கள் ஆத்துமாக்களை இரட்சிக்க வல்லமையுள்ளதாயுமிருக்கிற வசனத்தைச் சாந்தமாய் ஏற்றுக்கொள்ளுங்கள்” [யாக்கோபு 1:21]. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நாம் இரட்சிக்கப்படும்போது தாழ்மையுடன் தேவனுடைய வார்த்தைக்கு அடிபணிய வேண்டும் என்பது மட்டுமல்லாமல், அதன் பிறகான நம்முடைய கிறிஸ்தவ வாழ்க்கை முழுவதும் அவருடைய வார்த்தையைப் பற்றிய அதே அணுகுமுறையைக் கொண்டிருக்க வேண்டும். தேவனின் வார்த்தைக்கு செவிசாய்ப்பதில் இருந்து செயல்படுதலுக்கு மாறும்போதுதான் உண்மையான மாற்றம் வரும் [லூக்கா 11:28]!

நாம் சாந்தத்தில் வளர வேண்டுமானால், நம்மை மாற்ற பரிசுத்த ஆவியானவர் தேவனுடைய வார்த்தையைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். எனவேதான், தேவனுடைய வார்த்தையை நாம் தனிப்பட்ட முறையில் தினமும் படிக்க வேண்டும், அதை பிரசங்கிக்கப்படுவதை தெளிவாக கேட்க வேண்டும், நாம் வாசிப்பதையும் கேட்கிறதையும் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். ஒரு மனிதன் பரிசுத்த ஆவியானவரின் வல்லமையால் கட்டுப்படுத்தப்படுவதற்கு இதுவே ஆதாரம்! அத்தகைய மனிதனின் வாழ்க்கையில், பரிசுத்த ஆவியானவர் சாந்தம் அல்லது கனிவின் இனிமையான பண்புகளை உருவாக்குவார்.

ஆகவே, பரிசுத்த ஆவியானவர் நம்மில் சாந்தத்தை உண்டாக்கப் பயன்படுத்தும் முதல் வழி தேவனுடைய வார்த்தையாகும்.

நம்மில் சாந்தத்தை உண்டாக்க பரிசுத்த ஆவியானவர் பயன்படுத்தும் இரண்டாவது வழிமுறை சோதனைகள். சுவாரஸ்யமாக, மத்தேயு 5:5-ல் “சாந்தகுணமுள்ளவர்கள்” என்று மொழிபெயர்க்கப்பட்ட கிரேக்க வார்த்தையானது, இயேசுகிறிஸ்துவின் காலத்தில் ஒரு வலிமையான காட்டுக் குதிரையை அதன் சவாரி செய்பவரின் முழு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர மிகுந்த வலி தரும் சில அடிகளை கொடுத்து அதை அடக்குவதை விவரிக்க பயன்படுத்தப்பட்டது. அந்த அடக்கும் செயல்முறையை வெற்றிகரமாக மேற்கொண்ட ஒரு விலங்கு “சாந்தப்படுத்தப்பட்ட விலங்கு” [MEEKED] என்று விவரிக்கப்பட்டது.

பரிசுத்த ஆவியானவர் நமக்கும் அப்படியே செய்கிறார். அவர் சோதனைகளைப் பயன்படுத்தி நம்முடைய விருப்பத்தை உடைக்கிறார், அந்த வகையில், விஷயங்களை நம் கைகளில் எடுத்துக் கொள்ளாமல் தேவனைச் சார்ந்திருக்கும்படி நம்மை வலியுறுத்துகிறார். அந்த செயல்முறையின் மூலம், பரிசுத்த ஆவியானவர் நம்மில் சாந்தம் எனப்படும் இந்தப் பண்புகளை அதிகமாக உருவாக்கத் தொடங்குகிறார். அதனால்தான் நாம் சோதனைகளை வெறுக்காமல், அவற்றை பரிசுத்த ஆவியானவர் நம்மை மிகவும் கனிவாக்கும் வாய்ப்புகளாக பார்க்க வேண்டும்.

சோதனைகளைச் சந்தித்தவர்கள் பொதுவாக மற்றவர்களிடம் அதிக பொறுமையுடன் இருப்பார்கள், மற்றவர்கள் அனுபவிக்கும் வலிகளுக்கு அதிக உணர்திறன் உடையவர்கள். மேலும், அவர்கள் மற்றவர்களுக்கு நன்மையை செய்ய தீவிரமாக முயற்சி செய்கிறார்கள். அவர்கள் தங்கள் சொந்த நலன்களைப் பின்தொடராமல், எப்போதும் மற்றவர்களின் நலன்களை தங்கள் சொந்த நலன்களுக்கு மேலாக வைக்க முயற்சி செய்கிறார்கள் [பிலிப்பியர் 2:4]!

சாந்தகுணமுள்ளவர்கள் தங்களைத் தற்காத்துக் கொள்வதில் அக்கறை காட்டுவதில்லை, ஏனென்றால் அவர்கள் எதற்கும் தகுதியற்றவர்கள் என்று அறிந்திருக்கிறார்கள். தங்களுக்கு பிறர் செய்த தீமையைக் குறித்துஅவர்கள் கோபப்படுவதில்லை. அவர்கள் ஏற்கனவே தாழ்மையான நிலையில் இருப்பதால், தாழ்ந்துப்போவதற்கு அஞ்ச மாட்டார்கள்! அவர்களின் தாழ்மையான ஆவி மற்றவர்களை பழிவாங்குவதைத் தடுக்கின்றன. மாறாக, அவர்கள் மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக இருக்க முயல்கிறார்கள். மேலும் இத்தகைய மனப்பான்மை சோதனைகளால் உடைக்கப்பட்டதின் விளைவாகும். அது அர்த்தமுள்ளதாக இருக்கிறது.

எனவே, தேவனின் வார்த்தை மற்றும் சோதனைகள்-இரண்டு வழிமுறைகள் நம்மை சாந்தத்தில் வளர பரிசுத்த ஆவியானவர் பயன்படுத்துகிறார்.

பழிவாங்கும் மனப்பான்மையை விட்டுவிட்டு சாந்தத்தைப் பின்தொடர்வதற்கான ஊக்கப்படுத்துதல்.

நீங்கள் பார்க்க வேண்டியது என்னவென்றால், பழிவாங்கல் ஒருபோதும் நம் ஆத்துமாக்களுக்கு அமைதியைத் தராது. துன்பம் வந்தாலும் பரவாயில்லை, தங்களுக்குத் தகுதியான ஒன்றைப் பெற வேண்டும் என்று வலியுறுத்துவது ஒருபோதும் கிறிஸ்துவைப் போல் காட்டாது. பழிவாங்கும் மனப்பான்மையால் பல வீடுகள், பல உறவுகள் முறிந்துப்போனது. ஒரு பழிவாங்கும் மனப்பான்மை வீட்டிலும் வெளியிலும் உள்ள உறவுகளுக்குள் சேதத்தைத் தவிர வேறு எதையும் ஏற்படுத்தாது. இது பரிசுத்த ஆவியானவருக்கு வருத்தத்தையும் இறுதியில் கிறிஸ்துவின் பெயருக்கு அவமானத்தையும் தருகிறது.

இருப்பினும், தேவனுடைய தக்க நேரத்தில் நீதியை நிலைநாட்ட அவர் மீது நம்பிக்கை வைப்பதும், அதே சமயம் மற்றவர்களுக்கு நன்மை செய்ய விரும்புவதும் தேவனுக்கு மிகுந்த மகிமையையும் நமக்கும் ஆசீர்வாதத்தையும் தருகிறது. அப்படிப்பட்டவர்களுக்கு மட்டுமே, நீங்கள் எதிர்வரவிருக்கும் உலகத்தை சுதந்தரிப்பீர்கள் என்று இயேசு வாக்களிக்கிறார்.

நிகழ்காலத்திலும், சாந்தகுணமுள்ளவர்கள் தேவனின் வழிகாட்டுதலை அனுபவிக்கிறார்கள். சங்கீதம் 25:9 இவ்வாறு சொல்கிறது, “சிறுமைபட்டவர்களை [சாந்தகுணமுள்ளவர்களை]  நியாயத்திலே நடத்தி, சிறுமைபட்டவர்களுக்குத் தமது வழியைப் போதிக்கிறார்.”

உங்கள் வாழ்க்கையில் தேவனின் விருப்பத்தை அறிய விரும்புகிறீர்களா? அடக்கமாக இருங்கள். உங்கள் பெருமையிலிருந்து மனந்திரும்புங்கள். தேவனின் வழிகளுக்கு அடிபணியுங்கள். அவர் சரியான முடிவுகளை எடுப்பார்!

நமக்குள் ஒரு கனிவான மற்றும் பழிவாங்காத மனப்பான்மையை உலகம் காண வேண்டும். அவர்கள் அதைப் பார்க்கும்போது, இயேசுகிறிஸ்துவைப் பார்ப்பார்கள். உலகம் பார்க்க வேண்டிய ஒருவர் அவர் மட்டுமே! நாம் அவரை உண்மையாக பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக அழைக்கப்பட்ட அவரது தூதர்கள் மட்டுமே. கோபமான மற்றும் புண்படுத்தும் மனப்பான்மையை வெளிப்படுத்துவதன் மூலம் நாம் ஒருபோதும் கிறிஸ்துவிடம் ஒருவரை கொண்டுச் செல்ல முடியாது-அது நம் வீட்டிலோ அல்லது வெளியிலோ இருந்தாலும் சரி. ஆனால் ஒரு கனிவான ஆவி கடினமான இருதயங்களைக் கூட அசைக்க வல்லது!

உங்கள் வாழ்க்கையை ஆராயுங்கள். நீங்கள் சாதுவான நபரா? யாராவது உங்களை அவமானப்படுத்தினால் நீங்கள் எப்படி பதிலளிப்பீர்கள்? சிறிய விஷயங்கள் கூட உங்கள் விருப்பப்படி நடவாதபோது உங்கள் எதிர்வினை என்ன? நீங்கள் எப்போதும் உங்கள் விருப்பத்தின்படி விஷயங்கள் நடக்க  விரும்பும் கோபக்காரரா? அதுவே உங்கள் வாழ்க்கை முறை என்றால், நீங்கள் உண்மையிலேயே தேவனுடைய ராஜ்யத்தில் உள்ளவரா என்பதை சற்று சீர்தூக்கி பார்க்க வேண்டியிருக்கலாம் – நீங்கள் உங்கள் வாயால் எதைச் சொன்னாலும் பரவாயில்லை. அவர்கள் உண்மையிலேயே தம்மைப் பின்பற்றுபவர்களா என்பதை ஒருவர் ஆராய்வதற்கு உதவுவதற்காக, மலை  பிரசங்கம் முழுவதும் ஒரு கண்ணாடி என்பதை நினைவில் வையுங்கள். மனந்திரும்புவதற்கு இனியும் காலஞ் சென்றுவிடவில்லை.

அவருடைய குமாரனாகிய இயேசுவை ஏற்றுக்கொள்ளாமலிருப்பதினால் நீங்கள் இன்னமும் தேவனுக்கு அடிபணியவில்லை என்றால், இன்று நீங்கள் அதைச் செய்யும்படி நான் பிரார்த்தனை செய்கிறேன். உங்கள் பாவங்களை அறிக்கையிடுங்கள். தேவனின் பரிபூரண தராதரங்களை பூர்த்தி செய்ய உங்கள் முழு இயலாமையையும் ஒப்புக் கொள்ளுங்கள். உங்கள் பாவங்களுக்காக அழுங்கள், நீங்கள் செய்த மற்றும் செய்யப்போகும் எல்லா பாவங்களுக்காகவும் மரித்த கிறிஸ்துவிடம் விசுவாசத்துடன் திரும்புங்கள்! அவர் தரும் மன்னிப்பை ஏற்றுக்கொண்டு, உங்கள் வாழ்க்கையை அவரிடம் அர்ப்பணியுங்கள். அப்போது, நீங்கள் தேவனின் குடும்பத்திற்குள் வருவதோடு மட்டுமல்லாமல், பரிசுத்த ஆவியானவரால் பலப்படுத்தப்பட்ட இந்த சாந்த மனப்பான்மையைத் தொடரவும் முடியும். சாந்தகுணமுள்ளவர்கள் உண்மையில் பாக்கியவான்கள், ஏனென்றால் அவர்கள் மட்டுமே பூமியைச் சுதந்தரிப்பார்கள்!

Category
Subscribe
Notify of
guest
0 கருத்துக்கள்
Oldest
Newest
Inline Feedbacks
View all comments