மறுரூபமாக்கப்பட்ட வாழ்க்கை—பகுதி 4 உண்மையுள்ள அன்பின் மூன்று பண்புகள்.

Posted byTamil Editor May 14, 2024 Comments:0

(English version: “The Transformed Life–3 Characteristics of Sincere Love”)

ஒரு மானுடவியலாளர் ஆப்பிரிக்க பழங்குடி குழந்தைகளுக்கு ஒரு விளையாட்டை கற்றுக்கொடுக்க விரும்பினார். அவர் ஒரு மரத்தின் அருகே ஒரு கூடை நிறைய இனிப்பு வகைகளை வைத்துவிட்டு, அவர்களை 100 மீட்டர் தொலைவில் நிற்கும்படி கூறி,  யார் முதலில் சென்றடைகிறார்களோ அவர்களுக்கு அந்த கூடையிலுள்ள அனைத்து இனிப்பு பண்டங்களும் கொடுக்கப்படும் என்று அறிவித்தார்.

ரெடி, ஸ்டெடி, கோ என்று அவர் சொன்னதும், இந்த சிறு குழந்தைகள் என்ன செய்தார்கள் தெரியுமா? அனைவரும் ஒருவரையொருவர் கைகளைப் பிடித்துக் கொண்டு மரத்தை நோக்கி ஓடி, இனிப்புகளை பகிர்ந்து, சாப்பிட்டு மகிழ்ந்தனர். ஏன் அப்படிச் செய்தார்கள் என்று மானுடவியலாளர் அவர்களிடம் கேட்டதற்கு, அவர்கள் “உபுண்டு” என்று பதிலளித்தார்கள், அதாவது, “அனைவரும் சோகமாக இருக்கும்போது ஒருவர் மட்டும் எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடியும்?” உபுண்டு என்பதற்கு அவர்களின் மொழியில், “நாங்கள் இருக்கின்றதால் நான் இருக்கிறேன்!” என்று பொருளாகும். இதுதான் ஒபன் சோர்ஸ் லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு [Open-Source Linux Operating System] உபுண்டு [Ubuntu] என்று சுவாரஸ்மான பெயர் கொடுக்கப்பட்டதின் உள்ள பின்னணி. 

அது தான் அன்பு—அது தனக்காக செயல்படாமல், மற்றவர்களுக்காக செயல்படும் தன்மையுடையது. வேதாகமம் இவ்வகையான அன்பை அடிக்கடி வலியுறுத்துகிறது. அன்பின் பொருள் மிகவும் இன்றியமையாதது,  ஏனென்றால் இயேசுகிறிஸ்து மரிப்பதற்கு முந்தைய இரவில் கூட மேல் வீட்டு அறையில் ஒருவரையொருவர் நேசிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார், யோவான் 13:34-35 நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள் என்றார்.” நம்மீது வைத்த இயேசுகிறிஸ்துவின் அன்பு உண்மையானது. அது முகமூடி இல்லாத அன்பு! இதே வழியில் தான் நாம் மற்ற விசுவாசிகள் மீது அன்புகூறவேண்டும்! மேலும், மற்றவர்களிடம் அன்புகூறுவது தான் நாம் உண்மையில் இயேசு கிறிஸ்துவின் சீஷர்கள் என்பதற்கு சான்றாகும்!

ம் வாழ்வில் ஒருவரையொருவர்—குறிப்பாக சக விசுவாசிகளை அன்பினால் தாங்க வேண்டும் என்பதில் இயேசுகிறிஸ்து மிகவும் குறிப்பாக இருந்தார்.  [யோவான் 15:12, 17]. இதைத்தான் ரோமர் 12:9-10 ல் அப்போஸ்தலனாகிய பவுல் குறிப்பிடுகிறார், தேவனின் இரக்கத்தின் மூலம் இரட்சிக்கப்பட்டதன் விளைவான மருரூபமாக்கப்பட்ட வாழ்க்கையை வாழவேண்டும் என்று கூறுகின்றார் [ரோமர் 12:1-2].

 9 ஆம் வசனத்தை பவுல் எவ்வாறு தொடங்குகிறார் என்பதை கவனியுங்கள். “உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக” என்று கூறுகிறார். “மாயமற்றதாயிருப்பதாக” என்ற வார்த்தை “முகமூடி அணியாத” என்று பொருள்படும் ஒரு வார்த்தையிலிருந்து வந்தது.  இது ஒரு மனிதனின் உணர்ச்சிகளை வெளிப்படுத்த வெவ்வேறு முகமூடிகளை அணிகிற மேடை நடிகர்களை விவரிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு வார்த்தையாகும். நடிகர் மகிழ்ச்சியான உணர்ச்சிகளைக் காட்டினால், அவர் புன்னகை முகமூடியை அணிவார்; சோக உணர்வுகளை வெளிப்படுத்த சோக முகமூடியை பயன்படுத்துவார். முகமூடி தான் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும்; நடிகர் உணர மாட்டார். அவர் வெளிப்புறமாக ஒரு பாத்திரத்தில் நடிக்கின்றார்.

இருப்பினும், ஒருவரையொருவர் அன்புக்கூறுவதில், நாம் அன்பின் வெளிப்புற முகமூடியை மட்டும் அணிய முடியாது என்று பவுல் கூறுகிறார். நம் அன்பு இருதயத்திலிருந்து உண்மையாக இருக்க வேண்டும்! அன்பும் மாய்மாலமும் ஒன்றாக ஒருவரிடம் இருக்க முடியாது, அவை இரண்டு உச்சநிலைகள். பொய்யான அன்புடன் முத்தமிட்ட யூதாஸைப் போலவே, விசுவாசிகள் என்று கூறுபவர்களும் பல நேரங்களில் இப்படியே செய்கிறார்கள். ஒரு எழுத்தாளரின் நேரடியான வார்த்தைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது:

 பரிசேயர்கள் தாங்கள் பக்தியுள்ளவர்கள் என்பதை உலகுக்குக் காட்ட முகமூடி அணிவதில் வல்லுநர்கள். இருப்பினும், உண்மையில், அவர்கள் இருதயத்தில் பொல்லாதவர்கள். இயேசுகிறிஸ்து அவர்களை மாய்மாலக்காரர்கள் என்று அடிக்கடி அழைத்து அவர்களுடைய மதத்தை நிராகரித்ததில் ஆச்சரியமேதுமில்லை. அவர் இருதயத்திலிருந்து அன்பை எதிர்பார்க்கின்றார் அல்லது பவுல் கூறுவது போல், “உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக! இருக்க வேண்டும்

 இந்த உண்மையான அன்பு 3 குணாதிசயங்களால் அடையாளப்படத்தப்பட வேண்டும் என்று பவுல் கூறுகிறார்.

குணாதிசயம் # 1. உண்மையான அன்பின் சிறப்பியல்பு: பரிசுத்தம்

நன்மையை நேசிக்க வேண்டும் என்று கட்டளையிட்ட பிறகு, பவுல் ரோமர் 12:9 ன் இரண்டாம் பகுதியில், “தீமையை வெறுத்து” என்று கூறுகிறார். நாம் ஒரே நேரத்தில் அன்பு மற்றும் வெறுப்பு என்ற இரண்டிற்கும் அழைக்கப்படுவது சற்று வித்தியாசமாகத் தெரிகிறது. இருப்பினும், அன்பைப் பற்றிய வேதாகமத்தின் துல்லியமான போதனை அதுதான். நம் அன்பில் பகுத்தறிவு உள்ளவர்களாக இருக்க வேண்டும்—அன்பு என்பது வெறும் உணர்ச்சிகரமான உணர்வு அல்ல என்பதைக் குறிக்கிறது. இது பகுத்தறிவுடன் செயல்படுத்தப்பட வேண்டும். அன்பாகவே இருக்கும் அதே தேவன் தீமையை வெறுக்கிறார். நாமும் அதே பாதையை பின்பற்ற வேண்டும்.

 பழைய மெதடிஸ்ட் சர்க்யூட் ரைடர்கள் [old Methodist circuit riders] பாவத்தைத் தவிர வேறு எதையும் வெறுக்காத மனிதர்களாக விவரிக்கப்பட்டனர். அவர்கள் தாவீதின் சங்கீதமான “கர்த்தரில்  அன்புகூருகிறவர்களே, தீமையை வெறுத்துவிடுங்கள்” [சங்கீதம் 97:10] மற்றும் கேட்பவர்களின் உள்ளத்தைத் தூண்டும் ஆமோஸ் தீர்க்கதரிசியின் “நீங்கள் தீமையை வெறுத்து, நன்மையை விரும்பி” [ஆமோஸ் 5:15] என்ற வார்த்தைகளை  தீவிரமாக எடுத்துக் கொண்டனர்.

இங்கே பவுல் பயன்படுத்திய வெறுப்பு” என்ற வார்த்தை சக்தி வாய்ந்தது. இது புதிய ஏற்பாட்டில் ஒருமுறை மட்டுமே காணப்படுகிறது, மேலும் ஒரு கிரேக்க அகராதியின்படி, இது “அருவருப்பிலிருந்து வெறுத்து ஒதுங்குவது” என்ற கருத்தை கொண்டுள்ளது. இது ஒரு வலுவான வெறுப்பைக் கொண்டிருக்கும் எண்ணம் கொண்டது. வேதாகமம் பாவம் என்று எதை கூறுகிறதோ அதை நாம் வெறுக்க வேண்டும். பாவத்தை தவிர்க்க நாம் அழைக்கப்படவில்லை, ஆனால் பாவத்தை வெறுக்கவும், அருவருக்கவும், வெறுத்து ஒதுக்கவும் அழைக்கப்பட்டிருக்கிறோம்! தீமையை நம்மால் வெறுக்க முடியாவிட்டால், நல்லதை நேசிக்க முடியாது.

மேலும், அந்த வெறுப்பு நம்மை நாமே அதிலிருந்து விலகி ஓடச் செய்ய வேண்டும், மேலும், நம் சக விசுவாசிகள் தீமையை கடைப்பிடிப்பதைப் பார்த்தால், அன்பினால் அவர்களிடம் மன்றாட வேண்டும். சக கிறிஸ்தவர்களை எது காயப்படுத்துகிறதோ அதை வெறுக்காமல் நாம் அவரை உண்மையாக நேசிக்கிறோம் என்று சொல்ல முடியாது. உண்மையான அன்பு அவர்களைப் பாதுகாக்க முற்படும். நாம், அன்பில், பாவத்தின் ஆபத்துக்களைப் பற்றி அவர்களை எச்சரிப்போம், அதிலிருந்து விலகிச் செல்லும்படி அவர்களைத் தூண்டுவோம்-அந்த எச்சரிக்கையை கொடுப்பதால் நாம் ஒரு விலை கொடுக்க வேண்டியதாக இருந்தாலும் அதை செய்யவேண்டும்!

பவுல், தீமையை வெறுக்கச் சொல்வதோடு நின்றுவிடாமல், “நன்மையானதைப் பற்றிக்கொள்ளுங்கள்” என்று நேர்மறையான ஒன்றைத் தொடரவும் கூறுகிறார். “கிளிங்” [Cling] என்ற வார்த்தையானது எதையாவது ஒட்டுவது அல்லது சேர்ப்பது என்ற கருத்தை கொண்டுள்ளது. வேதாகமத்தில் விவரிக்கப்பட்டுள்ளபடி [பிலிப்பியர் 4:8] நன்மையானவற்றில் நாம் ஒட்டப்பட வேண்டும், ஆனால், நமது வரையறையால் அல்ல. ஒரு நடைமுறை அர்த்தத்தில் கூறுவதென்றால், உண்மையான அன்பு நம் சொந்த வாழ்க்கையில் நன்மையானதைப் பற்றிக்கொள்ளச் செய்யும், அதேபோல நன்மையானதை பற்றிக்கொள்ள மற்ற விசுவாசிகளை ஊக்குவிக்கும். நீதியை விரும்புகிற அதே தேவன் தீமையை வெறுக்கிறார். மேலும் பிறர் மீது காட்டும் அன்பில் தேவனின் அன்பைப் வெளிப்படுத்த நாம் அழைக்கப்பட்டிருப்பதால், நாமும் தேவன் வெறுப்பதை வெறுக்க வேண்டும், தேவன் விரும்புவதை நாமும் நேசிக்க வேண்டும். எனவே, இதை நம் இருதயங்களிலும் வாழ்விலும் பின்பற்ற வேண்டும், மற்ற விசுவாசிகளையும் இதைச் செய்ய நாம் ஊக்குவிக்க வேண்டும்.

எனவே, உண்மையான அன்பின் முதல் பண்பு புனிதமான அன்பாகும். பவுல் இதன் பிறகு இந்த உண்மையான அன்பின் இரண்டாவது பண்பை விளக்குகிறார். 

குணாதிசயம் # 2. நேர்மையான அன்பின் சிறப்பியல்பு: குடும்பப் பாசம்

ரோமர் 12:10, “சகோதர சிநேகத்திலே ஒருவர் மேலொருவர் பட்சமாயிருங்கள்” என்று கூறுகிறது. “பட்சமாயிருங்கள்” என்ற சொல் உறவினர்கள் மீதான அன்பையும், நண்பர்களிடையே உள்ள அன்பையும் விவரிக்கிறது. இது ஒருவருக்கொருவர் இடையே மென்மையான குடும்ப பாசத்தை காட்டுகிறது. சபை ஒரு குடும்பம், நம் மாம்சமாகவும் இரத்தமாகவும் இருக்கும் மக்களிடம் நாம் வைத்திருக்கும் அன்பை வெளிப்படுத்துவதில் ஆச்சரியமில்லை. “தண்ணீரை விட இரத்தம் உறுதியானது” என்பது குடும்ப உறுப்பினர்களுக்கு இடையிலான அன்பில் தவறுகளை மேலோட்டமாக பார்ப்பதை குறிப்பிடும்போது அடிக்கடி கூறப்படும் வாக்கியமாகும்.

அதுபோலவே, நாம் எந்தப் பின்னணியில் இருந்தாலும் கிறிஸ்து சிந்திய இரத்தத்தின் காரணமாக நாம் தேவனுடைய குடும்பத்தில் இருக்கிறோம். நாம் அவரில் ஐக்கியமாகி, இப்போது தேவனுடைய குடும்பத்தின் அங்கமாக இருக்கிறோம். நாம் “தேவனுடைய வீடு என்று அழைக்கப்படுகிறோம் [1 தீமோத்தேயு 3:15]. எனவே, நாம் ஒருவருக்கொருவர் குடும்பப் பாசத்தை வெளிப்படுத்த வேண்டும். இது உண்மையான அன்பின் இரண்டாவது பண்பு.

குணாதிசயம் # 3. நேர்மையான அன்பின் சிறப்பியல்பு: தாழ்மை

ரோமர் 12:10 ன் கடைசிப் பகுதி, “கனம்பண்ணுகிறதிலே ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளுங்கள்” என்று கூறுகிறது. நாம் அன்பில் ஒருவருக்கொருவர் அர்ப்பணிப்புடன் இருக்கும்போது, ​​ இயல்பாகவே நம்மை விட மற்றவர்களை மதிக்க முயல்வோம். நமக்காக மரியாதை தேடுவதற்கு பதிலாக, மற்றவர்களை மேம்படுத்துவதற்கு நாம் அழைக்கப்படுகிறோம். தனிப்பட்ட மரியாதையைப் பெற முயுற்சி செய்ய வேண்டாம்—ஆனால் மற்றவர்களின் மரியாதையை உயர்த்த முயுற்சி செய்ய வேண்டும். அதுதான் அழைப்பு. அன்பு மனத்தாழ்மையிலிருந்து எழுகிறது!

வேதாகமத்தின் மற்றொரு வசனப்பகுதியில், பவுல் இதையே கூறுகிறார்: “ஒன்றையும் வாதினாலாவது வீண்பெருமையினாலாவது செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள்,  அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குவானாக” [பிலிப்பியர் 2:3-4]. இதை ஏன் செய்ய வேண்டும்? ஏனென்றால், இயேசுகிறிஸ்து அதைத்தான் செய்தார் [5-8]! நாம் நமது அன்றாட செயல்களில் அவரைப் பின்பற்ற வேண்டும்! 

சிறிய விஷயங்களில் கூட, மற்றவர்களின் தேவைகளை முதன்மைப்படுத்த நாம் அழைக்கப்படுகிறோம். மற்றவர்களை ஊக்குவிப்பதிலும், நம்மை முக்கியமற்றவர்களாக கருதுவதில் நாம் மகிழ்ச்சியடைவும், திருப்தியடையவும் வேண்டும். தாழ்மையான இருதயத்திலிருந்து வரும் உண்மையான அன்பு அப்படித்தான் இருக்கிறது! எப்பொழுதும் பின் இருக்கையில் அமர்வதற்கு தயாராக இருக்கிறது! கணவனும் மனைவியும், பெற்றோர்களும் பிள்ளைகளும், சபை அங்கத்தினர்களும் மற்றவர்களை மனத்தாழ்மையினால் அன்பினிமித்தம் ஊக்குவிக்க முயற்சி செய்கிறார்கள் என்று கற்பனை செய்து பாருங்கள், அப்படி நடந்தால் கிறிஸ்து எவ்வளவு அதிகமாக மகிமைப்படுத்தப்படுவார் என்று சிந்தனை செய்து பாருங்கள்!

இறுதி சிந்தனைகள்.

எனவே, கடைசியாக—உண்மையான அன்பு என்பது பரிசுத்தம், குடும்பப் பாசம் மற்றும் தாழ்மை ஆகியவற்றால் வகைப்படுத்தப்பட வேண்டும். இவை வெறும் பரிந்துரைகள் அல்ல. மாறாக, மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய கட்டளைகள். அன்பின் அப்போஸ்தலன் என்று அடிக்கடி அழைக்கப்படும் யோவான் சுட்டிக்காட்டியபடி, அன்பின் பற்றாக்குறையானது கடுமையான தாக்கங்களைக் கொண்டுள்ளது, ளியிலே இருக்கிறேன் என்று சொல்லியும் தன் சகோதரனைப் பகைக்கிறவன் இதுவரைக்கும் இருளிலே இருக்கிறான். தன் சகோதரனிடத்தில் அன்புகூருகிறவன் ஒளியிலே நிலைகொண்டிருக்கிறான்; அவனிடத்தில் இடறல் ஒன்றுமில்லை. தன் சகோதரனைப் பகைக்கிறவன் இருளிலே இருந்து இருளிலே நடக்கிறான்; இருளானது அவன் கண்களைக் குருடாக்கினபடியால் தான் போகும் இடம் இன்னதென்று அறியாதிருக்கிறான்” [1 யோவான் 2:9-11]. உண்மையான இரட்சிப்பின் அத்தாட்சியாக யோவான் ஒருவருக்கொருவர் மீது கொண்டுள்ள அன்பைக் காட்டுகிறார் [1 யோவான் 3:10 மற்றும் 1 யோவான் 3:16-18 ஐயும் பார்க்கவும்].

அப்படியானால் நாம் எப்படி உண்மையான அன்பின் வாழ்க்கையைப் கடைபிடிப்பது? கீழே 4 பரிந்துரைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

1. பிரதிபலிப்பு. நம்முடைய பல பாவங்களுக்கு மத்தியில் நாம் பெற்ற இரக்கத்தையும், சிலுவையையும் தொடர்ந்து பிரதிபலித்துக் கொண்டு இருக்க வேண்டும் [ரோமர் 12:1]. 

2. சார்பு. நாம் தொடர்ந்து பரிசுத்த ஆவியானவரைச் சார்ந்திருக்க வேண்டும், அவர் மட்டுமே மற்றவர்களை நேசிக்கும்படி நம்மை மருரூபமாக்க முடியும் [ரோமர் 12:2].

3. தியானம். 1 கொரிந்தியர் 13:4-7 போன்ற வசனங்களை நாம் தொடர்ந்து தியானிக்க வேண்டும், இது விவிலிய அன்பின் பண்புகளை நமக்கு நினைவூட்டுகிறது. நம்மை மனமாற்ற தேவனுடைய வார்த்தையைப் பயன்படுத்த பரிசுத்த ஆவியானவரின் மீது நம்பிக்கை வைக்க உதவுகின்றது. 

4. நடவடிக்கை. நம் உணர்வுகளைச் சார்ந்து இல்லாமல் வாய்ப்பு கிடைக்கும்போது மற்றவர்களுக்கு நன்மை செய்து கொண்டே இருக்க வேண்டும் [லூக்கா 6:27-31].

இப்படி செய்வதால் ஏற்படக்கூடிய காயத்தின் காரணமாக நாம் மற்றவர்களை நேசிக்க பயப்படுகிறோம் என்பதை நான் புரிந்துகொள்கிறேன். கடந்த கால அனுபவங்கள் நமக்கு இந்த பயத்தை ஏற்படுத்துவதாகவும், அதனால் விலகி செல்ல முற்படுதாகவும் தெரிகிறது. ஆனால் தேவனின் கிருபையால் மறுபடியும் பிறந்ததன் விளைவாக பரலோகத்தில் பங்குள்ளவர்கள் பரிசுத்த ஆவியின் தூண்டுதலின்படி ஒருவரையொருவர் நேசிக்க ஆசைப்படுவார்கள். “உபுண்டு” என்று சொன்ன ஆப்பிரிக்கக் குழந்தைகளைப் போன்ற அதே மனநிலை அவர்களுக்கும் இருக்கும்—நாங்கள் இருப்பதால் நான் இருக்கிறேன்!

Category
Subscribe
Notify of
guest
0 கருத்துக்கள்
Oldest
Newest
Inline Feedbacks
View all comments