வாருங்கள், 22 பகுதிகளில் நம்மை நாமே ஆராய்வோம்

(English version: “Come, Let Us Examine Ourselves in 22 Areas”)
கொலோசெயர் 3:1-4:6ல், ஒவ்வொரு விசுவாசியும் தங்கள் வாழ்க்கையில் விரும்பப்பட வேண்டிய, பின்பற்றப்பட வேண்டிய, கடைப்பிடிக்க வேண்டிய 22 குணங்களைப் பற்றி பவுல் பட்டியலிட்டுள்ளார். இந்த ஒவ்வொரு பகுதிக்கும் நேரத்தை ஒதுக்கி, நம் வாழ்க்கையை மதிப்பாய்வு செய்வோம். தேவைப்படும் இடங்களில், தேவனிடம் நம் பாவங்களை அறிக்கை செய்வோம், மனந்திரும்புவதற்கு உதவுமாறு அவரிடம் கேட்போம், மேலும் தேவையானவைகளைச் சரிசெய்வோம்.
1. பூமிக்குரியவைகள் [கொலோசெயர் 3:2 “பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள்.”]
2. பாலியல் தூய்மை [கொலோசெயர் 3:5 “ஆகையால், விபசாரம், அசுத்தம், மோகம், துர்இச்சை, …. உண்டுபண்ணுகிற உங்கள் அவயவங்களை அழித்துப்போடுங்கள்.”]
3. பெருமை [கொலோசெயர் 3:5 “பொருளாசை ஆகிய இவைகளை உண்டுபண்ணுகிற உங்கள் அவயவங்களை அழித்துப்போடுங்கள்.”]
4. கோபம் [கொலோசெயர் 3:8 “இப்பொழுதோ கோபமும் மூர்க்கமும்…இவைகளையெல்லாம் விட்டுவிடுங்கள்.”]
5. கெட்ட வார்த்தைகள் [கொலோசெயர் 3:8-9 “உங்கள் வாயில் பிறக்கலாகாத தூஷணமும் வம்பு வார்த்தைகளுமாகிய இவைகளையெல்லாம் விட்டுவிடுங்கள்…பொய் சொல்லாதிருங்கள்”]
6. பட்சபாதம் [கொலோசெயர் 3:11 “அதிலே கிரேக்கனென்றும் யூதனென்றுமில்லை, விருத்தசேதனமுள்ளவனென்றும்…கிறிஸ்துவே எல்லாரிலும் எல்லாமுமாயிருக்கிறார்”]
7. இரக்கம் [கொலோசெயர் 3:12 “உருக்கமான இரக்கத்தையும்,… தரித்துக்கொண்டு…”]
8. தாழ்மை [கொலோசெயர் 3:12 “தயவையும், மனத்தாழ்மையையும்,… தரித்துக்கொண்டு…”]
9. பொறுமை [கொலோசெயர் 3:12 “…நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு…”]
10. மன்னிப்பு [கொலோசெயர் 3:13 “…கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.”]
11. அன்பு [கொலோசெயர் 3:14 “அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.”]
12. நன்றியறிதல் [கொலோசெயர் 3:15-17 “சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் போதித்து புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்திலே கர்த்தரைப் பக்தியுடன் பாடி…. நன்றியறிதலுள்ளவர்களாயுமிருங்கள்.”]
13. வேத தியானம் [கொலோசெயர் 3:16 “கிறிஸ்துவின் வசனம் உங்களுக்குள்ளே சகல ஞானத்தோடும் பரிபூரணமாக வாசமாயிருப்பதாக”]
14. மனைவிமார்கள் [கொலோசெயர் 3:18 “மனைவிகளே, கர்த்தருக்கேற்கும்படி, உங்கள் புருஷருக்குக் கீழ்ப்படியுங்கள்.”]
15. கணவன்மார்கள் [கொலோசெயர் 3:19 “புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள், அவர்கள்மேல் கசந்து கொள்ளாதிருங்கள்.”]
16. பிள்ளைகள் [கொலோசெயர் 3:20 “உங்களைப் பெற்றாருக்கு எல்லாக் காரியத்திலேயும் கீழ்ப்படியுங்கள்”]
17. பெற்றோர்கள் [கொலோசெயர் 3:21 “உங்கள் பிள்ளைகள் திடனற்றுப்போகாதபடி, அவர்களுக்குக் கோபமூட்டாதிருங்கள்”]
18. வேலைக்காரர்கள் [கொலோசெயர் 3:23 “எதைச் செய்தாலும், அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள்”]
19. எஜமான்கள் [கொலோசெயர் 4:1 “வேலைக்காரருக்கு நீதியும் செவ்வையுமானதைச் செய்யுங்கள்”]
20. ஜெபம் (பொதுவானது) [கொலோசெயர் 4:2 “இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள்”]
21. ஜெபம் (சுவிசேஷம் பிரசங்கிக்கப்பட) [கொலோசெயர் 4:3-4 “திருவசனம் செல்லும்படியான வாசலை தேவன் திறந்தருளும்படி எங்களுக்காகவும் வேண்டிக்கொள்ளுங்கள்.”]
22. சுவிசேஷப் பணி [கொலோசெயர் 4:5-6 “புறம்பேயிருக்கிறவர்களுக்கு முன்பாக ஞானமாய் நடந்து காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள். … உங்கள் வசனம் எப்பொழுதும் கிருபை பொருந்தினதாயும் உப்பால் சாரமேறினதாயுமிருப்பதாக.”]
“இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்” [1 யோவான் 1:7] மற்றும் “நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்” [1 யோவான் 1:9] என்பதை நினைவில் கொள்வோம்.