கோபமும், அது உருவாக்கும் பேரழிவும்—பகுதி 4 பாவ நோக்கிலான கோபத்தின் இலக்கு யார்?

Posted byTamil Editor February 25, 2025 Comments:0

(English version: “Sinful Anger – The Havoc It Creates (Part 4)”)

 பாவ நோக்கிலான கோபம் என்ற தொடரின் வலைப்பதிவில் இது 4 வது பகுதியாகும். பகுதி 1, பாவநோக்கிலான கோபம் பற்றிய பொதுவான அறிமுகத்தையும், பகுதி 2, “கோபம் என்றால் என்ன?” என்ற முதல் கேள்வியையும், பதிவு 3, பாவமான கோபத்தின் ஆதாரம் என்ன? என்ற இரண்டாம் கேள்வியையும் ஆய்வு செய்தது. இந்தப் பதிவு, பாவ நோக்கிலான கோபத்தின் இலக்கு யார்?  என்ற மூன்றாம் கேள்வியை ஆராய்கிறது.

III. பாவ நோக்கிலான கோபத்தின் இலக்கு யார்? 

கோபமானது தேவனுக்கும், தனக்கும் மற்றும் பிறருக்கும் எதிராக வெளிப்படுத்தப்படக்கூடும்.

A. தேவனுக்கு எதிரான கோபம்.

ஓரிரு வழிகளில் தேவன் நம்மைத் தாழ்த்திவிட்டதாக உணருவதால் நாம் அவர் மீது கோபப்படுகிறோம். (1) நாம் விரும்பியதை தேவன் செய்யாதபோது [உதாரணமாக நமக்கு மகிழ்ச்சியான திருமணத்தை, ஒரு சிறந்த தொழிலை, ஒரு குறிப்பிட்ட நோயிலிருந்து சுகத்தை, ஒரு நீண்ட காலக் கனவை நிறைவேற்றாதபோது]. எப்படியோ நாம் ஏமாற்றப்பட்டதாக உணர்கிறோம், அதன் விளைவாக, நாம் தேவனிடம் கோபப்படுகிறோம். (2) நாம் எதிர்பார்க்காத ஒன்றை தேவன் செய்கையில். உதாரணமாக, நமக்கு பிரியமானவர்களை தேவன் எடுத்துக் கொள்ளும்போது அவர் நமக்கு இதைச் செய்திருக்கக்கூடாது என்று நினைக்கிறோம். தேவன் நம்மிடம் கொடூரமாக நடந்து கொண்டதாக உணர்ந்து அவர் மீது கோபம் கொள்கிறோம்.

தேவன் மீதான இத்தகைய கோபத்தின் விளைவாக, நாம் சபையிலிருந்தும், வேதத்தைப் படிப்பதில் இருந்தும், ஜெபத்தில் நேரத்தைச் செலவிடுவதிலிருந்தும் விலகி விடுகிறோம். சில சமயங்களில், நாம் தொடர்ந்து  சபைக்கு வரலாம், வேதத்தைப் படிக்கலாம், பிரார்த்தனை செய்யலாம். ஆனாலும், இருதயம் மந்தமாகவும், தேவனிடம் அலட்சியமாகவும் மாறிவிடும். சில நிகழ்வுகளில், இந்தக் கோபம் தேவனை முழுவதுமாக மறந்து விடுவதற்கும் வழிவகுக்கிறது!

“தேவனிடம் என் உணர்வுகளை நேர்மையாக வெளிப்படுத்துவது சரியானது தான்—எல்லாவற்றிற்கும் மேலாக, அவர் என் பிதா” என்று நாம் நினைப்பதற்கு முன், எச்சரிக்கையாக இருப்பது அவசியம். தேவன் நம் பிதா மட்டுமல்ல, அவர் சர்வ வல்லமையுள்ள தேவன்—பரிசுத்தர்—பயத்திற்கும் கனத்திற்கும் பாத்திரர். பிரசங்கி 5:1-2 ஆகிய வசனங்கள் நமக்கு ஒரு எச்சரிக்கையை தருகிறது, நீ தேவாலயத்துக்குப் போகும்போது உன் நடையைக் காத்துக்கொள்; மூடர் பலியிடுவதுபோலப் பலியிடுவதைப்பார்க்கிலும் செவிகொடுக்கச் சேர்வதே நலம். தாங்கள் செய்கிறது தீமையென்று அறியாதிருக்கிறார்கள். தேவசமுகத்தில் நீ துணிகரமாய் உன் வாயினால் பேசாமலும், மனம்பதறி ஒரு வார்த்தையையும் சொல்லாமலும் இரு; தேவன் வானத்திலிருக்கிறார்; நீ பூமியிலிருக்கிறாய், ஆதலால் உன் வார்த்தைகள் சுருக்கமாயிருப்பதாக.”

சடுதியான சூழல் கோப உணர்ச்சிகளை வெளிப்படுத்தாவிட்டாலும், மகத்துவமும், வல்லமையுமுள்ள தேவனுக்கு விரோதமான எதையும் கூறாமல் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்வதுதான் பரந்த கொள்கை.

இலகுவானதும், ஆறுதலானதுமான வாழ்க்கை வாக்களிக்கப்படவில்லை என்பதை நாம் அடிக்கடி நினைவில் கொள்ளத் தவறுவதுதான் தேவன் மீது நாம் கோபப்படுவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக இருக்கிறது. நாம் விரும்புவதைப் பெறுவதில் பிரச்சனை இருப்பதும், இல்லாமல் இருப்பதும் பெரிய காரியமாகக் கூறாமல், நம்மையே வெறுத்து, அனுதினமும் நம் சிலுவையை எடுத்துக்கொண்டு, அவரைப் பின்பற்றும்படி கர்த்தர் நம்மை அழைக்கிறார் [லூக்கா 9:23]. இந்த யதார்த்தத்தை நாம் புரிந்து கொண்டால், தேவ திட்டங்கள் நம் விருப்பத்திற்கு மாறாக இருந்தாலும், தேவனிடம் கோபப்பட மாட்டோம். நம் வாழ்வின் அனைத்தின் மீதும் அவர் இராஜரீகமுடையவர் என்பதை நாம் உணர்ந்தவர்களாக அவரை பணிந்து கொள்ள அழைக்கப்படுகிறோம்.

B. தன் மீதான கோபம். 

கோபத்தைப் பற்றி பேசும்போது, உள்நோக்கிய கோபத்தைப் பற்றி நாம் அடிக்கடி விவாதிப்பதில்லை. இருப்பினும், இது பல சந்தர்ப்பங்களில் உண்மையாக இருக்கிறது. அது எப்படி? நம்மை பற்றி அல்லது நமக்குத் தெரிந்தவர்களைப் பற்றி எத்தனை முறை இப்படி கூறுயிருக்கிறோம்:

  • நானா இதைச் செய்தேன் என்று என்னால் நம்ப முடியவில்லை. 
  • இந்த இக்கட்டான சூழ்நிலையில் நான் இருப்பது என் தவறு.
  • என்னையே என்னால் கவனித்துக்கொள்ள முடியவில்லை.
  • அந்தச் சோதனையில், சிக்கலான காரியத்தில் நான் சிக்கிக்கொண்டதை என்னால் நம்ப முடியவில்லை

கோபம் என்பது தார்மீக ரீதியாக தவறு என்று நாம் கருதுவதின் எதிர்வினை என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே, நெறிமுறைப்படி சரியானதைச் செய்யத் தவறினால் அல்லது தவறு என்று நாம் நினைப்பதைச் செய்தால், உள்கோபம் விளையும்—இது ஒரு வகையான சுய தண்டனை. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நமது தோல்விகளுக்கு நம்மை நாமே தண்டித்துக் கொள்கிறோம்.

மனசாட்சி என்பது தேவன் கொடுத்த உபகரணம், அது நாம் தவறு செய்யும் போது நம்மைக் குற்றம் சாட்டுகிறது [ரோமர் 14:22-23, 1 கொரிந்தியர் 2:2-4, 1 யோவான் 3:19-21], கோபத்தை உள்நோக்கி செலுத்துவதன் மூலம் நாம் பாவ செய்யாமல் இருப்பதில் கவனம் தேவை.

தன் மீதான கோபத்திற்கு பல காரணங்களை ஒருவர் பட்டியலிடலாம்:

1. தேவனின் மன்னிப்பைப் புரிந்து கொள்ளத் தவறுதல். இந்த வகையைச் சேர்ந்தவர்கள் தங்களைத் தாங்களே தண்டித்துக்கொள்கின்றனர். தேவனுடைய கிருபையின் ஆழத்தை அவர்கள் புரிந்து கொள்ளாமலிருப்பது எல்லா பாவங்களையும் விடப் பெரியது. எங்கே பாவம் பெருகுகிறதோ, அங்கே கிருபை பெருகுகிறது என்பதை அவர்கள் மறந்துவிடுகிறார்கள்  [ரோமர் 5:20-21].

2. பெருமை. நான் குழப்பத்திலிருந்தால் மற்றவர்களின் கண்களுக்கு முன்பாக வெட்கப்பட வேண்டியிருக்கும் என நினைத்தல்: மற்றவர்களின் முன் அழகாக இருக்க வேண்டும், அவர்கள் எப்போதும் சாதகமாக தீர்ப்பு வழங்க வேண்டும் என்று நாம் தொடர்ந்து முயற்சிக்கிறோம். அவர்கள் முன் நாம் அழகாக இருக்கத் தவறினால், கோபத்தை உள்நோக்கி செலுத்துவதன் மூலம் நம்மை நாமே தண்டித்துக் கொள்கிறோம்.

3. மனித சீர்கேட்டை புரிந்து கொள்ளத் தவறுதல். பொதுவாக, “இவ்வளவு ஒழுக்கமுள்ள நல்ல மனிதனாகிய நான் இதை எப்படிச் செய்ய முடியும்?”  என்று நினைக்கிறோம்.  நாம் இதை மட்டுமல்ல; உண்மையில் இன்னும் பல சீர்கேடுகளைச் செய்ய முடியும் என்பதை புரிந்து கொள்ளத் தவறிவிடுகிறோம்!

4. ஒரு குறிப்பிட்ட ஆசையை அடைய முடியாத ஏமாற்றம். நான் மிகவும் மோசமான ஒன்றை விரும்பினேன். ஆனால், “நான் சற்று சரியாக செய்யாததால்” அது கிடைக்கவில்லை. எனவே, என் மீது எனக்கு கோபம். வேறுவிதமாகக் கூறினால், நாம் ஒன்றை  தவறாக செய்யும்போது அதனுடன் வரும் இன்பங்கள் [உதாரணம், ஒரு நிறுவனத்தில் ஒரு குறிப்பிட்ட வேலை, பதவி உயர்வு, வணிக முயற்சியில் வெற்றி பெறுதல் போன்றவை] மீது வெறித்தனமாக இருந்தேன். அதை அப்போது உதறித் தள்ளினேன், இப்போது இந்த தோல்வியை சமாளிக்க கோபத்தை பயன்படுத்துகிறேன்.

5. தன் சொந்த ஒழுக்கவிதியின்படி வாழ முயற்சித்தல். “எனக்கு நானே வகுத்துக்கொண்ட விதிகளின்படி வாழவில்லை. என் வீடு நான் விரும்பும் அளவுக்கு சுத்தமாக இல்லை; நான் எதிர்பார்த்தபடி என்னுடைய வேலைகள் நடக்கவில்லை” என்று வாழும் மக்களை நாம் பரிபூரணவாதிகள் என்கிறோம். இவர்கள் தங்களை மிகவும் வருத்திக்கொள்வார்கள். தாங்கள் தோல்வியுறும் சந்தர்ப்பங்களில், கோபத்தை உள்நோக்கி செலுத்துகிறார்கள். இவர்கள் யதார்த்தத்திற்கு ஒவ்வாத எதிர்பார்ப்புகளைக் கொண்டவர்கள்.

6. தனக்காக தேவன் வைத்திருக்கும் சிறந்ததைப் பெறுவதில் தோல்வியடைதல். தேவன் எனக்காக சிறந்ததொரு திட்டத்தை வைத்திருந்தார். இருப்பினும், எனது பாவத்தின் காரணமாக எனக்கு சிறந்தாக தோன்றின மற்றொரு திட்டத்தை தெரிந்துக்கொண்டேன். எனக்கு சிறந்ததாக தோன்றும் திட்டத்தை செயல்படுத்துகையில், என்னுடைய வாழ்க்கைக்கான தேவனின் திட்டங்களையும் நோக்கங்களையும் முறியடித்துவிட்டதாக நான் கூறுகிறேன்.

அப்படிச் சிந்திப்பதன் மூலம், நம் வாழ்வின் மீது நாமே ஏகாதிபத்தியமுடையவர்கள் என்று எண்ணுகிறோம் அல்லவா? ஏகாதிபத்தியமுள்ள தேவனின் வழிகளை சாதாரண மனிதர்கள் சீர்குலைத்துவிடலாம் என்று நினைப்பது தவறல்லவா? நமது தோல்விகளை தேவன் முன்பே அறிந்திருக்கவில்லையா?

ஆனாலும், அந்த தோல்விகளின் மூலம் தேவன் தம் நோக்கங்களை நிறைவேற்றுகிறார். யோசேப்பின் சகோதரர்கள் தங்கள் செயல்களுக்கு பொறுப்பேற்க வேண்டியவர்களாக இருந்தபோதிலும், அவர்கள் தேவனின் திட்டத்தை முறியடிக்கவில்லை. உண்மையில், தேவன் தமது திட்டங்களை நிறைவேற்ற அவர்களின் தீமையை பயன்படுத்தினார். “நீங்கள் எனக்குத் தீமைசெய்ய நினைத்தீர்கள்; தேவனோ, இப்பொழுது நடந்துவருகிறபடியே, வெகு ஜனங்களை உயிரோடே காக்கும்படிக்கு, அதை நன்மையாக முடியப்பண்ணினார்” [ஆதியாகமம் 50:20]. தேவனுடைய ஏகாதிபத்தியத்திற்கும், மனித பொறுப்புக்கும் இடையிலான இந்த இறுக்கமானது, நம்முடைய தீமையான திட்டத்தை நன்மையில் நிறைவடைய செய்வதால்.  அந்த தீமையான திட்டத்தில் தொடரலாம் என்ற முடிவுக்கு நம்மை இட்டுச் செல்லக்கூடாது.

இது நம் பொறுப்பற்ற நடத்தைக்கு சாக்குப்போக்கு கிடையாது. இருப்பினும், எல்லா காரியங்களிலும் தேவனுடைய ஏகாதிபத்தியத்தைப் பற்றிய தவறான கண்ணோட்டத்துடன் இருப்பது கோபத்தை உள்நோக்கி செலுத்துகிறது. இப்படிப்பட்ட சிந்தனைக்கு பலியாகும் மக்கள், “நான் மட்டும் இதைச் செய்திருந்தால் அல்லது செய்யாமல் இருந்திருந்தால்” என்று தொடர்ந்து சிந்தித்து, தோல்வியுற்ற வாழ்க்கையை வாழ்கிறார்கள்.

இந்த உள்நோக்கிய கோபத்திற்கான பதிலை “நம்மை நாமே மன்னித்துக்கொள்வதில்” காண முடியாது, ஏனென்றால் இயேசுகிறிஸ்து நமக்காக மரித்திருக்கிறார். நம்மிடம் பாவப் போக்குகள் இருந்தாலும், நம் தேவன் இரக்கமுள்ளவர், கிறிஸ்துவின் மூலம் அருளப்படும் மன்னிப்பை நாம் ஏற்றுக்கொண்டு, இந்த உள் கோபப் பிரச்சனையிலிருந்து தேவன் நம்மை விடுவிக்க வேண்டும் என்று ஒப்புக்கொள்வதுதான் உண்மையான பிரச்சனையாக இருக்கிறது.

C. மற்றவர்களுக்கு எதிராகக் கோபம்.

நம் கோபத்தின் பெரும்பகுதி இந்தப் பகுதியில்தான் இருக்கிறது. மற்றவர்கள் நமக்கு எதிராக ஏதோ ஒன்றை செய்ததால் அல்லது செய்யத் தவறியதால் நாம் கோபப்படுகிறோம். சில நேரங்களில், மக்கள் தங்கள் கோபத்தை மற்றவர்களுக்கு எதிரான ஒரு கருவியாகப் பயன்படுத்தும் சில வழிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

1. மற்றவர்களை கட்டுப்படுத்தல். நாம் விரும்புவதைப் பெற நம் கோபத்தைப் பயன்படுத்தலாம் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. எனவே, மற்றவர்களைக் கையாளும் ஒரு கருவியாக அதைப் பயன்படுத்துகிறோம். நம் கோபத்திற்கு அவர்கள் பயப்படுவார்கள் என்பதால், மக்களைக் கட்டாயப்படுத்துகிறோம், இதை நாம் பல வீடுகளில் காணலாம். மனைவி கணவனின் கோபத்திற்கு பயப்படுகிறாள், கணவன் மனைவியின் கோபத்திற்கு பயப்படுகிறான், பிள்ளைகள் பெற்றோரின் கோபத்திற்கு பயப்படுகிறார்கள், பெற்றோர்கள் குழந்தைகளின் கோபத்திற்கு பயப்படுகிறார்கள், எப்போதும் கோபமாக இருப்பவர் தான் நினைப்பதை சாதிக்கிறார். இது நாம் விரும்புவதைப் பெற மற்றவர்களை கொடுமைப்படுத்துவதேயல்லாமல் வேறொன்றுமில்லை. 

2. ஆழமான காயங்களை மறைத்தல்.  ஒருவேளை நாம் நமது கடந்த கால செயல்களைக் குறித்து அவமானமாக உணர்கிறோம். ஆனாலும், இவற்றை வெளிப்படுத்த முடியாமல், மற்றவர்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்படும் கோபமான மனப்பான்மையின் கீழ் அதை மறைக்கிறோம்.

3. நம்மை சிறந்தவர்களாக உணர வைப்பத்தல். நான் உங்களை விட ஒழுக்க ரீதியாக உயர்ந்தவன்” என்ற மனப்பான்மையை காட்டுகிறோம். எனவே, மற்றவர்களுக்கு எதிரான கோபம் நமது சுயமரியாதையை அதிகரிக்கப் பயன்படுகிறது.

4. மன அழுத்தத்தை விடுவித்தல். என் உணர்வுகள் அனைத்தையும் விடுவித்ததால் இப்போது நான் நன்றாக உணர்கிறேன்; நான் எல்லா நீராவியையும் வெளியேற்றினேன். இந்த எண்ணத்தில் நம் கோபம் மற்றவர்களை எப்படி காயப்படுத்துகிறது என்பதைப் பற்றி கவலைப்படாத சுயநலமே பிரச்சினையாக இருக்கிறது. உதாரணமாக, நம்மைத் தவறாக நடத்தும் அப்பா, அம்மா அல்லது மனைவி மீது நாம் கோபப்படுகிறோம் என்று வைத்துக் கொள்வோம். சில ஆலோசகர்கள் ஒரு தலையணையை எடுத்து தந்தை அல்லது தாய் அல்லது மனைவி என்று கற்பனை செய்து, “திருப்தி” அடையும் வரை அதைத் தொடர்ந்து அடிக்கச் சொல்வார்கள், ஏனெனில் நமது உணர்ச்சிகள் இப்போது விடுவிக்கப்பட்டு, நாம் மிகவும் “நன்றாக உணர்கிறோம்.”

5. பழிவாங்காமல் விட்டுவிடுவது என்பது ஒருவரை தண்டனையிலிருந்து விடுவிப்பதைக் குறிக்கிறது. சிமியோன் மற்றும் லேவியைப் போல, யோனாவைப் போல “மற்றவர்கள் தகுதியானதை” பெறுவதை நாம் உறுதிப்படுத்த விரும்புகிறோம்! [இந்த தொடரின் பதிவு 3 ஐப் பார்க்கவும்]. நம்முடைய பாவங்களை மறந்துவிடவும், நம்மைத் தண்டிக்காமல் இருக்கவும் தேவனிடம் மன்றாடும் நாம், அவர் நம்மைத் துன்புறுத்தியவர்களின் பாவங்களை மன்னித்து மறந்துவிட்டால், அவர் மீது வருத்தப்படுகிறோம்!

இதன் மூலம் “கடவுள் உங்களை மன்னிக்கட்டும். ஆனால் அதை அவ்வளவு எளிதாக பெறாமல் அதற்கான விலையை செலுத்தி வாங்கிக்கொள்ளுங்கள்” என்ற அணுகுமுறையை நாம் நாடுகிறோம்.

எனவே, பாவ நோக்கிலான கோபத்தை தேவன் மீதும், நம்மீதும், பிறர் மீதும் எப்படி வெளிப்படுத்தலாம் என்பதைப் பார்த்தோம். மேலும் இந்தக் கோபம் வெவ்வேறு வழிகளில் வெளிப்படுகிறது, அடுத்த பதிவில் “பாவ நோக்கிலான கோபத்தை வெளிப்படுத்தும் பொதுவான காரணிகள் யாவை?” என்பதைக் குறித்துப் பார்ப்போம்.

Category
Subscribe
Notify of
guest
0 கருத்துக்கள்
Oldest
Newest
Inline Feedbacks
View all comments