எங்கள் வலைப்பதிவைப் பார்வையிட்டதற்கு நன்றி. இந்த தளத்தில் வெளியிடப்பட்டுள்ள  இடுகைகள் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும் என்று நாங்கள் உண்மையிலேயே நம்புகிறோம். வலைதளப்பதிவுகளை தேடவும், கருத்துக்களை தெரிவிக்கவும் தயவு செய்து தயங்க வேண்டாம். இந்த தளத்தில் வெளியிடப்பட்ட இடுகைகள் மூலம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை மகிமைப்படுத்த நாங்கள் தொடர்ந்து முயல்வதால் உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வரவேற்கிறோம்.

இந்த வலைப்பதிவு தளத்தில் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட ஆங்கிலக் கட்டுரைகளின் முதன்மை எழுத்தாளர் ராம் கிருஷ்ணமூர்த்தி அவர்கள், கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தின் வின்சர் பட்டணத்தில் அமைந்துள்ள கிரேஸ் பைபிள் சபையின் போதகராவார். அவருக்கு கீதா என்ற மனைவியும், பால் என்ற மகனும் மற்றும் ப்ரீத்தி என்ற மகளும் உள்ளனர். அவரை rk2serve@yahoo.com  என்ற மின்னஞ்சல் வழியாக நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.

ஒரு கிறிஸ்தவ நண்பரின் உண்மையான சாட்சியத்தின் மூலமும், அதே நேரத்தில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் படிக்கும் போது அறிமுகமில்லாத நபரின் வீட்டு வாசலில் வைக்கப்பட்டிருந்த வேதத்தை வாசித்ததின் மூலமும் தேவன்  போதகர் ராம் அவர்களை கிருபையாய் இரட்சித்தார். அவர் போதகராக ஊழியம் செய்யும் சபையின் இணையதளத்தில் அவரைப் பற்றிய கூடுதல் விவரங்களையும், போதகர். ராம் மற்றும் பிற தேவ மனிதர்களால் பிரசங்கிக்கப்பட்ட பிரசங்கங்களையும்  காணலாம்: www.gbc-windsor.org.

இந்த வலைப்பதிவுகள் தொடர்ந்து பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது. கர்த்தர் கிருபையாய் வாய்ப்புகளை அருளும்போது, நாங்கள் தொடர்ந்து புதிய மொழி பெயர்ப்புகளை சேர்க்க விரும்புகிறோம். கர்த்தர் அனுமதிக்கும் பல மொழி குழுக்களுக்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியைப் பகிர்வதே எங்கள் அர்ப்பணிப்பு. அநேக தகுதி வாய்ந்த தேவ மனிதர்களாகிய மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் திறமையான கணினி வல்லுநர்கள் இந்த திட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த அன்பான சகோதர, சகோதரிகளின் கூட்டு முயற்சி இல்லாமல், இந்த திட்டம் விரிவடைய சாத்தியமில்லை. கர்த்தர் இந்த வலைப்பதிவைத் தம்முடைய மகிமையை வெளிப்படுத்த பயன்படுத்துமாறு மன்றாடுகிறோம்!

குறிப்பு: இந்த வலைப்பதிவு அல்லது பிற மொழி சார்ந்த வலைப்பதிவுகளில் உள்ள கட்டுரைகள் எதுவும் பதிப்புரிமை பெற்றவை அல்ல. எனவே, தேவைக்கேற்ப அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளவும். ஆசிரியர் வரவு கூட தேவையில்லை. தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்!

உங்களுடைய கவனத்திற்கு

கர்த்தர் உங்களை வழிநடத்தினால்:

1. இந்த இணையதளம் அவருடைய மகிமைக்காகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்று ஜெபிப்பீர்களா?

2. இந்த இணையதளம் மற்றும் பிற மொழி சார்ந்த இணையதளங்களைப் பற்றி பயனடையக்கூடியவர்களுக்குத் தெரியப்படுத்துவீர்களா?

எம்விசுவாசஅறிக்கை

  • வேதம், குறைவில்லாத தவறில்லாத தமனிதனுக்கு தேவனுடைய வெளிப்பாடாக இருக்கிறது. மனிதனுடைய விசுவாசத்திற்கும் வாழ்விற்கும் முழுமையான அதிகாரத்தை கொண்டதாயும் இருக்கிறது.
  • நாம் ஆராதிப்பது ஒரே ஜீவனுள்ள மெய்தேவன். அவர்கள்  பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர் என்ற மூன்று ஆளத்துவங்களில் நித்தியமாக இருக்கிறார். நமது ஆராதனைக்கும் கீழ்ப்படிதலுக்கும் சம பாத்திரர்களாக இருக்கிறார்கள்.
  • குமாரனாகிய கிறிஸ்து மனிதனாக, கன்னியின் வயிற்றில் பிறந்து, பாவமற்ற வாழ்க்கை வாழ்ந்து, பாவங்களுக்காக சிலுவையில் மரித்து, அடக்கம் செய்யப்பட்டு, மூன்றாம் நாள் கல்லறையிலிருந்து உயிர்தெழுந்த தேவன். அவர் பிதாவின் வலது பாரிசத்துக்கு ஏறி, ஒரு நாள் வல்லமையோடும் மகிமையோடும் மீண்டும் வருவார்.
  • பரிசுத்தஆவியானவர் மூலமாய், மனந்திரும்பி, விசுவாசித்து, கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவுக்கு மட்டுமே தன் வாழ்க்கையை ஒப்புக்கொடுக்கும்போது, பாவம் செய்து தொலைந்துபோன ஒரு மனிதனின் இரட்சிப்பு உடனடியாக நிறைவேற்றப்படுகிறது.
  • இரட்சிப்பு என்பது தேவனின் கிருபையால், சிலுவையில் சிந்தப்பட்ட இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. அது எந்த மனித நற்செயல்களாலும், சாதனைகளின் அடிப்படையிலும் உண்டானதல்ல. உண்மையாக இரட்சிக்கப்பட்ட மக்கள் அனைவரும் தேவனின் வல்லமையால் கிறிஸ்துவில் என்றென்றும் பாதுகாப்பாக இருக்கிறார்கள்.
  • பரிசுத்தஆவியானவர் மீட்கப்படும் வரைக்கும் விசுவாசிகளுக்குள் வாசம் செய்கிறார், பரிசுத்தப்படுத்துகிறார், அறிவுறுத்துகிறார், வல்லமையளிக்கிறார் மற்றும் முத்திரையிடுகிறார்.
  • இயேசு கிறிஸ்து திருச்சபையின் தலைவர். திருச்சபையின் அனைத்து நடைமுறைகளிலும் வேதாகமத்திற்கு அடிபணிய வேண்டும்.
  • பாவ மன்னிப்புக்காக கிறிஸ்துவை மட்டுமே விசுவாசித்தவர்கள் நித்தியத்தை பரலோகத்தில் கழிப்பார்கள். கிறிஸ்து இல்லாமல் தங்கள் பாவங்களில் மரித்தவர்கள் நித்தியத்தை நரகத்தில் கழிப்பார்கள்.
  • தமிழ் மொழி இடுகைகள் தொடர்பான கேள்விகள் இருந்தால், தயவுசெய்து எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்  hello+tamil@biblebasedhope.com